என் மலர்
புதுச்சேரி
சேதராப்பட்டு:
வில்லியனூர் பைபாஸ் சாலையில் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிஅருகே பரத் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
நேற்று வியாபாரம் முடிந்தது பரத் பிரியாணிகடையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை பிரியாணிகடை முன்பு ஒரு முதியவர் தலை நசுங்கி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இது பற்றி வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட முதியவருக்கு சுமார் 65 வயது மேல் இருக்கும் அவரது உடல் அருகே ஒரு பையில் 3 துணிகள் இருந்தன. 3 ஒற்றை செருப்புகள் அருகே கிடந்தது. அவர் யார்-எந்த ஊர் என்பது தெரியவில்லை.
நள்ளிரவில் அந்த முதியவர் பிரியாணி கடை முன்பு படுத்து இருந்த போது குடிபோதையில் மர்ம நபர்கள் அருகில் கிடந்த கருங்கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபடுட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இதை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிகாமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட முதியவர் யார்-எந்த ஊர் மற்றும் அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து தடயங்களை பதிவு செய்து வருகிறார்கள்
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந்தேதி திரையிடப்படுகிறது.
புதுவையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது. இதையொட்டி நகர் முழுவதும் விளம்பர பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் நிற்பது போன்ற விளம்பரங்களும் உள்ளன. இதற்கிடையே ரசிகர் மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க தினமும் 2 சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி, காலை 8 மணி என கூடுதலாக 2 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான 4 காட்சிகளுடன் சேர்த்து 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை அனைத்து திரையரங்குகளும் 6 காட்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க திரையரங்கில் கட்டணம் 5 நாட்களுக்கு மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்துக் காட்சிகளுக்கும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தலா ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு திரையரங்குகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்-லட்சுமி தம்பதி மகன் கவியரசன். காரைக்கால் கிளிஞ்சல்மேடு செல்வராஜ்-விஜயலட்சுமி தம்பதி மகள் கிருத்திகா. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர்கள் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி காரைக்கால் காமராஜ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவியரசன் கிருத்திகா- திருமணம் தமிழ் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. அதோடு தமிழக கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் திருமண மண்டபத்தில் அசத்தலாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காரைக்காலில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.






