என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மன் வீதிஉலா நடந்த காட்சி.
முத்தியால்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா
பிரமோற்சவ விழாவையொட்டி முத்தியால்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புஷ்ப விமானத்தில் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக சிம்ம வாகனத்தில் அம்மன் வல்லாளகண்டனை அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து முத்தியால்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் உள்ள திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
Next Story






