என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பொதுமக்களை மிரட்டிய 2 பேர் கைது
புதுவை பிள்ளைத் தோட்டம் பகுதியில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி:
புதுவை பிள்ளைத்தோட்டம் திருவள்ளுவர் சாலையில் ஒரு மதுக்கடை அருகே 2 பேர் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக உருளையன் பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து வீச்சரிவாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெல்லித்தோப்பு அந்தோணியார் கோவில் வீதியைச் சேர்ந்த குணசீலன் மற்றும் குயவர் பாளையம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது போல் மேட்டுப்பாளையத்தில் பொது இடத்தில் நின்று ரகளை செய்த குருமாம் பேட் அமைதி நகரை சேர்ந்த தயாளன் (47) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசாரும் மேரி உழவர்கரை குண்டுசாலை ரோட்டில் ஒரு மதுக்கடை அருகே ரகளையில் ஈடுபட்ட கோலியனூரைச் சேர்ந்த மலர் மண்ணன் (47) மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (52) ஆகிய 2 பேரை ரெட்டியார் பாளையம் போலீசாரும் பாக்கமுடையான் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே பெண்களை கிண்டல் செய்த நெல்லித் தோப்பு பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த் (20) என்பவரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.
மேலும் திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் நின்று கொண்டு பொது மக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசி ரகளை செய்த வீடுரை சேர்ந்த காமராஜன் (30) என்பவரை திருக்கனூர் போலீசாரும் காட்டேரி குப்பம் எல்.ஆர். பாளையத்தில் ஒரு மதுக்கடை அருகே நின்று குடிபோதையில் ரகளை செய்த ரங்கநாதபுரத்தை சேர்ந்த தேவதாஸ் (35) என்பவரை காட்டேரி குப்பம் போலீசார் கைது செய்தனர்.
Next Story






