என் மலர்
புதுச்சேரி
புதுவை சுகாதாரத்துறைக்கு 13 ஆம்புலன்ஸ்கள் ரங்கசாமி அர்ப்பணித்தார்
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறைக்கு ரூ. 1 கோடியே 75 லட்சம் செலவில் 4 பெரிய ஆம்புலன்ஸ், 9 சிறிய ஆம்புலன்ஸ்களும் வாங்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் உள்பட ரூ.8 லட்சம் செலவில் நவீன மருத்துவ முதல் உதவி கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆம்புலன்களை சுகாதாரத்துறையிடம் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சட்டமன்ற வளாகத்தில் நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆம்புலன்ஸ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சபநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதுவை அரசு மருத்துவ மனைக்கு 2, காரைக்காலுக்கு 1, ஏனாமுக்கு 1 என 4 பெரிய ஆம்புலன்ஸ்களும், அரசு மருத்துவமனைக்கு 6, காரைக்காலுக்கு 2, ஏனாமுக்கு 1 என 9 சிறிய ஆம்புலன்சுகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்ஸ்கள் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
தி.மு.க. சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது என்று அ.தி.மு.க. குற்றச்சாட்டியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை திறக்க பா.ஜனதாவை சேர்ந்த வெங்கய்யா நாயுடுவை அழைத்துள்ளனர்.
அதேநேரத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, பா.ஜனதாவை ஓட, ஓட விரட்டுவோம் என பேசியுள்ளார். கருணாநிதி சிலையை திறக்க வெங்கய்யா நாயுடுவை அழைத்ததை கைவிட வேண்டும். அல்லது பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து பேசிய திருச்சி சிவா மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்தமாதம் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் பா.ஜனதா தலைவர்களை அழைத்திருந்தனர். ஆனால் எந்த பா.ஜனதா தலைவர்களும் திறப்பு விழாவில் பங்கேற்க–வில்லை.
மத்திய அரசை எதிர்ப்பது, திட்டங்களை விமர்சிப்பது என தி.மு.க. ஒருபுறமும், மறுபுறம் அவர்களை வைத்தே சிலை திறக்க அழைப்பது என நாடகமாடுகின்ற னர். இந்த சந்தர்ப்ப வாதத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ராஜீவ் கொலையாளி பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இது வேதனைப்படுத்துவதாக புதுவை காங்கிரஸ் தலைவர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம், ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் கூறினர்.
பேரறிவாளன் விடுதலை நாளை கறுப்புதினமாக அனுசரித்தனர். தற்போது மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து கூட்டணி கட்சிகளோடு இணைந்து போராடப்போவதாக சொல்கின்றனர். இந்த போராட்டத்தில் எப்படி மற்ற கட்சியினரோடு காங்கிரசார் ஒன்றாக பங்கேற்பார்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை தபால் நிலையம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
மத்திய-மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை வகித்தார். அஞ்சல்துறை சங்க தலைவர் முத்து, செயலாளர் கலியமூர்த்தி, தொலைதொடர்பு துறை சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில நிர்வாகி சக்திவேல், தமிழக போக்குவரத்துத்துறை சங்க செயலாளர் தமிழ்வாணன், சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தமிழக போக்குவரத்து துறை 2015 முதல் வழங்க வேண்டிய 78 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களின் குடும்பத்துக்கு குறைந்த பட்சம் ரூ.7 ஆயிரத்து 850 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மாதந்தோறும் காலதாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய பண பலன்களை ஓய்வுபெற்றவுடன் உடனடி யாக வழங்க வேண்டும். நிலுவை ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அஞ்சல்துறை ஓய்வூதிய சங்க நிர்வாகி தியாகராஜன் நன்றி கூறினார்.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக் கோரி குடிசை மாற்று வாரியம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாவாணர் நகர் கிளை சார்பில் குடிசை மாற்று வாரியம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் சிந்தாமணி, உழவர்கரை தொகுதி செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் நளவேந்தன் தலைமை வகித்தனர். ஞானவேல், அஞ்சலிதேவி, பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, தொகுதிக்குழு உறுப்பினர் தேவசகாயம் கண்டன உரையாற்றினர்.
பாவாணர் நகரில் 40 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட அடிப்படை வசதியற்ற அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். குடிசைமாற்றுவாரிய இடத்தில் குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் விஜயலட்சுமி, திருமுருகன், வீரப்பன், காமாட்சி, மாரியப்பன், கிருஷ்ணவேணி, கருப்பாயியம்மாள், பஞ்சநாதன், நீலாவதி, நாகராஜ், சுசிலா, ஆனந்தி, சாந்தி, மகாராணி, வள்ளியம்மை, ஜெயலட்சுமி, தனலட்சுமி, கணேசன், அஞ்சலை, தாமோதரன், பூங்காவனம், காசியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடனுக்கு குளிர்பானம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 3 வாலிபர்கள் வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புதுச்சேரி:
புதுவை மறைமலை அடிகள் சாலையை சேர்ந்தவர் சக்தி கோவிந்தராஜன். (வயது 42). இவர் அப்பகுதியில் பராசக்தி கோவில் அருகே குளிர்பானக்கடை மற்றும் செல் போன் ரீச்சார்ஜ் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று சக்தி கோவிந்தராஜன் கடையில் இருந்த போது உருளையன் பேட்டை சங்கோதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல், பிரசாந்த் மற்றும் கண்ணார வீதியை சேர்ந்த கோகுல் ஆகிய 3 வாலிபர்கள் கடனுக்கு குளிர்பானம் கேட்டனர். ஆனால் சக்தி கோவிந்தராஜன் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவர்கள் சக்தி கோவிந்தராஜனை முறைத்து பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சக்தி கோவிந்தராஜன் மறைமலை அடிகள் சாலையில் ஒரு வேலை விஷயமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் அருகே வந்த போது ராகுல், பிரசாந்த், மற்றும், கோகுல் ஆகிய 3 பேரும் சக்தி கோவிந்தராஜனை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த மரக்கட்டையால் சக்தி கோவிந்தராஜனை சரமாரியாக தாக்கினர். மேலும் இனிமேல் கடனுக்கு பொருட்கள் கொடுக்க மறுத்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு அந்த கும்பல் சென்று விட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த சக்தி கோவிந்தராஜன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர்
இது குறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
ஒரு ஆண்டு கடந்த பின்பும் என்.ஆர்.காங். அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்தவில்லை என தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
புதுச்சேரி:
மணவெளி தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மணவெளி மந்தவெளி திடலில் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.சு. இளங்கோவன் தலைமை தாங்கினார்.
மணவெளி தொகுதி சன்.சண்முகம், ரவிச்சந்திரன், சக்திவேல் ஆகியோர் வரவேற்றனர். மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் சி.பி. திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏக்கள் சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., புதுவை மாநில அமைப்பாளர் மற்றும் சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கூட்டணி என்ற பெயரில் தி.மு.க.வின் பல தொகுதியை தட்டி பறித்தனர்.
தற்போது தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் திட்டங்கள் பற்றி புதுவை மாநிலத்திலும் பாராட்டும் வகையில் பேசப்பட்டுவருகிறது.
தமிழகத்தைபோல புதுவையியிலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பல நல்ல சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்த்து இருகின்றனர். ஆதலால் தி.மு.க. நிர்வாகிகள் உத்வேகத்துடன் இப்போதே செயல்பட வேண்டும்.
தி.மு.க. மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ள தொகுதியாக மணவெளி, தட்டாஞ்சாவடி மற்றும் கதிர்காமம் இருப்பதால். இத்தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடும்.
தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து வாக்களித்தனர். தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி அரசு அமைந்தால் அதிக நிதியை மத்திய அரசு வழங்கும். இதனால் எல்லா திட்டத்தையும் நிறைவேற்றுவோம் என தெரிவித்த என்.ஆர்., பா.ஜனதா கட்சியினர் மக்களுக்கு பதில் கூறவேண்டும்.
புதுவையில் முழுமையான பட்ஜெட் போடவில்லை. இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் சொல்ல வேண்டும். ஆட்சி அமைத்த 3 மாதத்தில் மாநில அந்தஸ்து பெற்று தருவோம் என அறிவித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு பேப்பர் கூட நகர்த்தவில்லை.
மாநில தேவைக்காக பிற மாநில முதல் அமைச்சர்கள் பிரதமரை சந்திக்கிறார். ஆனால் புதுவை வளர்ச்சிக்காக கூட்டணியில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்திக்கவில்லை.
தேர்தல் அறிக்கையில் புதுவைக்கான கடனை தள்ளுபடி செய்வோம் என சொன்னார்கள் ஆனால் செய்யவில்லை மாணவர்களுக்கு டேப்லட், லேப்டாப் வழங்குவோம். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீதம் பெற்று தருவோம். மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றனர்.
நஷ்டத்தில் உள்ள நூற்பாலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை மீண்டும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர்.
ஆனால், ஒரு ஆண்டு முடிந்த நிலையில் ஒன்றுகூட செய்ய வில்லை. மின்துறையை தனியார் மயமாக்கல் மற்றும் காரைக்கால் துறைமுகத்தை அதானி மற்றும் அம்பானிக்கு கொடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.
கூட்டத்தில் மாநில துணை அமைப்பாளர்கள் குமார் என்ற கிருஷ்ணன், சன்.குமரவேல், குணாதிலீபன், செந்தில்குமார், கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லி முத்து லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், ஜெ.வி.எஸ். சரவணன் என்ற ஆறுமுகம், சிறப்பு அழைப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், முகிலன், டாக்டர். நித்திஷ், பாஸ்கரன், வடிவேல், கோபாலகிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் மணவெளி தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தொகுதி பொறுப்பாளர் கே.ஆர்.வி. ராஜாராமன் நன்றி கூறினார்.
புதுவையில்பா.ஜனதா அனைத்து கிளைகளையும் வலுப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஜே.பி. நட்டா காணொலியில் அறிவுரை வழங்கினார்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் கிளை அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக தேசிய தலைமை அலுவலகத்தில் இருந்து பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா புதுவை உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் வலுப்படுத்துவதற்கான அறிவுரையையும், வழிகாட்டுதலையும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து புதுவை பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் வலுப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், பாரதீய ஜனதா மாநில துணைத்தலைவர் தங்க.விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், அசோக்பாபு, வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், மாநில துணைத்தலைவர்கள் செல்வம், ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், முருகன் மற்றும் மாநில செயலாளர்கள் ரத்தினவேல், அகிலன், ஜெயந்தி, லதா, சகுந்தலா மற்றும் மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள், தொகுதி பெறுப்பாளர்கள், தொகுதி கிளைகளை வலுப்படுத்தும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மின்துறை தனியார் மய முடிவை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என மின்துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
மின்துறையை தனியார்மயமாக்க புதுவை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் போராட்ட குழுவினர் எழுத்துப்பணிகளை முழுமையாக புறக்கணித்து உள்ளனர்.
விதிப்படி மட்டும் வேலை செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எச்.டி. மீட்டர் ரீடிங் பணியை நிறுத்தியுள்ளனர். புதிய மின் இணைப்பும் வழங்கவில்லை.
நேற்று கவர்னர் தமிழிசை, மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும் அவர் கூறும்போது, மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் அரசு என்ன முடிவு எடுத்தாலும் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்குமான நல்ல முடிவாகத்தான் இருக்கும்.
நல்லது நடப்பதற்காகத்தான் எந்த முடிவும் எடுக்கப்படுகிறது. எந்த விதத்திலும், யாரும் பாதிக்காத அளவுக்குத்தான் அரசின் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இருப்பினும் போராட்டம் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-
டெல்லியில் மின்துறையை தனியார் மயமாக்கினர். அங்கு 60 சதவீதம் மின்துறை நஷ்டத்தில் இயங்கியதால் தனியார் மயமாக்கப்பட்டது.
ஆனால் புதுவையில் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. எந்தவித நஷ்டமும் கிடையாது. அரசு துறைகளில்தான் மின்துறைக்கு வரவேண்டிய கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது.
அப்படியிருக்க மின்துறையை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது? நாங்கள் அரசு ஊழியர்களாகவே பணியில் சேர்ந்தோம்.
அரசு ஊழியர்களாகவே ஓய்வுபெற விரும்புகிறோம். மின்துறை தனியார் மய முடிவை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்த வாரம் முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புவனேஸ்வரில் இருந்து புதுவைக்கு ரெயிலில் கடத்தி வந்த போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக ஆபரேசன் விடியல் ெதாடங்கப்பட்டது.
அதன்படி அவ்வப்போது போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசுக்குப்பம் பகுதியில் நடத்தி அதிரடி சோதனையில் பெண் உள்பட 3 ஆப்பிரிக்க நாட்டினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் புவனேஸ்வரில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன்பேரில் போதை தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி தட்லா தலைமையில் ஓதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்,சப்-இன்ஸ்பெக்டர் முருகன்,சிறப்பு அதிர டிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், போதை தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் ரெயில்வே போலீசாருடன் இணைந்து ரெயில் நிலைய
த்தில் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனை யில் 4 வெளிமாநில பயணிகள் தடை செய்யப்பட்ட போதை ப்பொருட்க ளான பான்பராக், பான்மசாலா, குட்கா உள்ளிட்ட வற்றை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி கடத்தி வந்த 4 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்புபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு மறியல்; 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏம்பலம் தொகுதி குடியிருப்புபாளையம் வ.சுப்பையா நகர் சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு தொகுதி செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். வீரப்பன், நாராயண சாமி, பக்தவச்ச லம், ஆனந்தவள்ளி, சுமதி, உமையாள், சித்ரா, தேவராசு, நாகமுத்து, அமராவதி, காய்த்திரி, ராமமூர்த்தி, விஜயகாந்த், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, துணை செயலாளர் கீதநாதன், நிர்வாகிகள் மாசிலாமணி, கலியமூர்த்தி, அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும். புதிய கழிவுநீர் வாய்க்கால் கட்டித்தர வேண்டும். புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும். குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். கருமகாரிய கொட்டகை கட்ட வேண்டும். சமுதாயக்கூடத்தில் மேல்மாடி, அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யும், இதை செய்துதராத பாகூர் கொம்யூன் ஆணை யரை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவை ஆட்டுப்பட்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பஞ்சு மரம் வெட்டி அகற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை ஆட்டுப்பட்டியில் பழமையான பஞ்சு மரம் உள்ளது. பட்டுப்போன நிலையில் இருந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மரத்தை பாதுகாப்பாக வெட்டி அகற்ற வேண்டும் என ஆட்டுப்பட்டி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தனர். இந்த மரத்தை வெட்டி அகற்ற புதுவை தீயணைப்பு துறையினர் முடிவெடுத்தனர்.
இதையடுத்து இன்று தொகுதி எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி, உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தோஷ் சந்திரா, மின்துறை, வனத்துறை அதிகாரிகள் அந்த மரத்தை பார்வையிட்டு வெட்டி, அகற்றும் பணியில் இறங்கினர். மரத்தின் கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டிய பின் மரத்தை வெட்ட தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த பணியில் புதுவை தீயணைப்பு நிலைய அதிகாரி முகுந்தன், தீயணைப்பு வீரர்கள் சரவணன், கோதண்டபாணி, ஆனந்தன், பிரபாகரன், குமார், சூசைநாதன், பத்மநாபன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
உப்பளம் தொகுதியில் முழுமையாக எரிந்த ஹைமாஸ் விளக்கு கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட மில்லத் வீதி, முல்லா வீதி மற்றும் காஜியார் வீதி சந்திப்பில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருந்தது.
இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பெரும்பாலானோர் காய மடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். மின் துறை அதிகாரிகள் நடவடிக்கையால் ஹைமாஸ் விளக்கு முழுமையாக எரியத் தொடங்கியது. இதனால் இருட்டில் மிதந்த மில்லத் வீதி, முல்லா, வீதி மற்றும் காஜியார் வீதி சந்திப்பு தற்போது இரவிலும் பகல் போல் காட்சி அளிக்கிறது.
இதில் தி.மு.க. துணை செயலாளர் முகமத் நாசர் பிரமுகர்கள் நோயல், செல்லப்பன், இர்பான், அஜ்மல், அனஸ், ஜாவித், அப்துல் ரஹ்மான், லாரன்ஸ், மோரிஸ், ரகுமான், ஆகியோர் கலந்து கொண்டார்.






