search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்திய காட்சி.
    X
    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்திய காட்சி.

    இந்திய கம்யூனிஸ்டு மறியல்

    குடியிருப்புபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு மறியல்; 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏம்பலம் தொகுதி குடியிருப்புபாளையம் வ.சுப்பையா நகர் சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு தொகுதி செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். வீரப்பன், நாராயண சாமி, பக்தவச்ச லம், ஆனந்தவள்ளி, சுமதி, உமையாள், சித்ரா, தேவராசு, நாகமுத்து, அமராவதி, காய்த்திரி, ராமமூர்த்தி, விஜயகாந்த், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    போராட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, துணை செயலாளர் கீதநாதன், நிர்வாகிகள் மாசிலாமணி, கலியமூர்த்தி, அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும். புதிய கழிவுநீர் வாய்க்கால் கட்டித்தர வேண்டும். புதிய  பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும். குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். கருமகாரிய கொட்டகை கட்ட வேண்டும். சமுதாயக்கூடத்தில் மேல்மாடி, அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யும், இதை செய்துதராத பாகூர் கொம்யூன் ஆணை யரை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×