என் மலர்
புதுச்சேரி
நாள்தோறும் கொலை- கொள்ளை- அபகரிப்பதால் முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவி விலகினால்தான்புதுவையை பாதுகாக்க முடியும் நாராயணசாமி பேசினார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மோடியின் சென்னை வருகை யின்போது தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை மேடையில் முன்வைத்து பேசினார். வழக்கமாக மாநில முதல்- அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைப்பது வழக்கம்தான். இதனை பா. ஜனதாவினர் பிரதமரை கொச்சைப்படுத்தியதாக கூறி விமர்சித்து வருகின்றனர்.
பிரதமர் சர்வாதிகாரி போலும், அவர் பங்கேற்கும் விழாவில் முதல்-அமைச்சர் எதுவும் கேட்கக்கூடாது என்றும் பா.ஜனதாவினர் கருதுகின்றனர். இது பா.ஜனதாவின் அரைவேக்காடு அரசியலைத்தான் காட்டுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் மக்களின் எண்ணங்களை பிரதி பலிக்கத்தான் செய்வார்.
புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கோப்பு அனுப்பியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மின்ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம். மின்துறையை தனியார்மயமாக்கி னால் ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிக்கப்படுவர்.
தனியார்மயம் குறித்த கேள்விக்கு ரங்கசாமி மழுப்பலான பதிலை கூறியுள்ளார். கடந்தமுறை போராட்டத்தின்போது ஊழியர்கள், பொதுமக்கள் கருத்தை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு? இதன்மூலம் முதல்-அமைச்சர் எவ்வளவு பலவீனமாக உள்ளார் என தெரியவருகிறது. மின்துறை தனியார்மயம் குறித்து கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசி கோர்ட்டுக்கு செல்வோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் காலதாமதமாக செயல்படுத்தப்படுகிறது என ரங்கசாமி கூறியுள்ளார். 2011 முதல் 2016 வரை ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோதே திட்டம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் என்.ஆர். காங்கிரஸ் அரசின் தெளிவற்ற முடிவால் காலதாமதமானது. காங்கிரஸ் ஆட்சியில் கவர்னர் கிரண்பேடியின் இடையூறுகளால் காலதாமம் ஆனது. ரங்கசாமி ஊழல் முதல்-அமைச்சர் என கூறிய கிரண்பேடிக்கு ரங்கசாமி ஆதரவு அளித்தார்.
என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் பஞ்சாலைகளை திறப்போம், கூட்டுறவு நூற்பாலைகளை திறப்போம் என பல வாக்குறுதிகளை அளித்தனர். பஞ்சாலைகளை மூட அரசு முயற்சித்து வருகிறது. இத்தகைய அவலமான ஆட்சி நடக்கிறது. ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆகும்போதெல்லாம் புதுவை கொலை நகரமாகும். ரவுடிகள் அட்டகாசம் தலைவிரித்தாடும்.
தற்போது மீண்டும் புதுவையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, வீடு, நிலம் அபகரிப்பு, போதைப்பொருள் விற்பனை அனைத்தும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.
காவல்துறையை முதல்-அமைச்சரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. நிதி பற்றாக்குறை, சம்பளமின்மை, மத்திய அரசிடம் நிதி பெற திறமையின்மை ஆகியவற்றால் பொம்மை ஆட்சி நடக்கிறது. மீண்டும் சிறையிலிருந்து தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கப்படுகிறது. ரங்கசாமி பதவி விலகினால்தான் புதுவை மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்துறை தனியார்மய நடவடிக்கையை அமைச்சரவையை கூட்டி தடுக்க வேண்டும் என்று ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மின்துறை தனியார்மய எதிர்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமதாசன், சி.ஐ.டி.யூ. சீனிவாசன்,பிரபுராஜ், ஏஐடியூசி முத்துராமன், ஐ.என்.டி.யூசி. சொக்கலிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், எல்.எல்.எப். செந்தில், எம்.எல்.எப். வேதா, வேணுகோபால், ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மின்துறையை தனியார்மயப்படுத்தும் பணிகள் மறைமுகமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல்- அமைச்சரின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு மக்கள் கருத்தையும் மின்துறை போராட்டக் குழுவின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக மின்துறையை தனியார் மயப்படுத்தும் அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.
மின்துறையை தனியார் மயமான மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கில் கொள்ளாமல் அரசு முடிவு எடுத்திருப்பது ஊழியர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் எதிரானது. மின்துறை ஊழியர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகும். மின்துறை தனியார்மயத்தை கைவிடும் வகையில் அமைச்சரவையை கூட்டி மக்களுக்கு எதிரான திட்டத்தை நிறைவோற்றாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
வைத்திலிங்கம் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ.விடமும் அவர்கள் இதுகுறித்து மனு அளித்தனர்.
வில்லியனூர் அருகே மதுக்கடையை சூறையாடி உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பங்கூரில் புதுவை விழுப்புரம் மெயின் ரோட்டில் தனியார் மதுக்கடை உள்ளது. அந்த மதுக்கடையை அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 41). நடத்தி வருகிறார்.
இந்த மதுக்கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த பிரதாப் (27). என்பவர் அடிக்கடி வந்து மது குடித்து விட்டு பணம் கொடுக்காமல் செல்வார். சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் மணிவண்ணன் அதனை கேட்பது இல்லை.
இந்த நிலையில் நேற்றும் பிரதாப் மது குடித்து விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார். இதனை மதுக்கடை கேஷியர் தட்டிக் கேட்ட போது அவரிடம் பிரதாப் தகராறு செய்தார். அப்போது அங்கிருந்த மதுக்கடை உரிமையாளர் இருவரையும் சமாதானம் செய்தார். அந்த நேரத்தில் பிரதாப்புக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த அருண் (34). சதீஷ் (37). மற்றும் சுப்பையன் (28). ஆகியோர் மதுக்கடை உரிமையாளரிடம் தகராறு செய்தனர்.
மேலும் அவரை தாக்கியதோடு அங்கிருந்த மேஜை நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். அதோடு அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அந்த கும்பல் மதுக்கடை உரிமையாளர் மணிவண்ணனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து மணிவண்ணன் வில்லி யனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மதுகடையை சூறையாடி உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற கும்பலை தேடிவருகிறார்கள்.
உணவு பாதுகாப்பு துறை எடை அளவு பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முதல்- அமைச்சரிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது-
முதலியார் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பொருட்களின் தரம், ஓட்டல்களில் வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை கண்காணிப்பது குறித்து உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு, உணவு பாதுகாப்பு துறை, எடை அளவு கட்டுப்பாடு ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் எனது தொகுதி சட்ட மன்ற அலுவலகத்தில் நடத்தினேன்.
அதில் கலந்து கொண்ட அதிகாரிகள் கொடுத்த தகவல் அதிர்ச்சியை அளித்தது. உணவின் தரத்தை கண்காணிக்க கூடிய முக்கிய துறைகளான உணவு பாதுகாப்பு துறை 2 அதிகாரிகள் மட்டுமே கொண்டு செயல்படுவது தெரிய வந்தது.
மக்களின் சுகாதார நலன் சார்ந்த முக்கிய துறையில் ஊழியர்கள் இல்லாதது மக்களுக்கு பாதுகாப்பான உணவு பொருட்கள் கிடைப்பதை கேள்விக் குறியாக்கி உள்ளது.
உணவு பாதுகாப்பு துறையில் உணவு பாதுகாப்பு அதிகாரி-1, ஆய்வாளர்கள்-5,
எம்.டி.எஸ்-7, எல்.டி.சி., யு.டி.சி அசிஸ்டெண்ட் பதவிகளில் தலா ஒரு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த துறைக்கு தேவையான மைக்ரோ ஆய்வகம் வசதி இல்லை. தேவையான அளவு உபகரணங்கள் இல்லை. இந்த துறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச ெஹல்ப் லைன் எண்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இத் துறையில் ஆய்வாளர்கள்-2, முத்திரை இடுபவர்-2 ஆகிய காலி பணியிடங்கள் உள்ளன.
பொதுமக்கள் நலன் சார்ந்த துறை என்பதால் நிதி நெருக்கடி பார்க்காமல் இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மக்களின் சுகாதாரத்தை பேணி காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் உணவு கடத்தல் பிரிவில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்பவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சம்பத் எம்.எல்.ஏ. மனுவில் கூறி உள்ளார்.
மீன்பிடி தடைகால நிவாரணம் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி:
புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரத்து 500 மீன்பிடி தடைகால நிவாரணமாக வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கு முதல்கட்டமாக 16 ஆயிரத்து 917 குடும்பத்துக்கு ரூ.9 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடைகால நிவாரண தொகையை மீனவ குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், பிரகாஷ்குமார், அனிபால்கென்னடி, பாஸ்கர், லட்சுமிகாந்தன், செந்தில்குமார், மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த தொகை புதுவையை சேர்ந்த 8 ஆயிரத்து 287, காரைக்காலை சேர்ந்த 3 ஆயிரத்து 265, ஏனாமை சேர்ந்த 4 ஆயிரத்து 870 குடும்பங்களுக்கு இன்று முதல் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மாகியை சேர்ந்த 495 குடும்பத்துக்கு ஜூன் மாதம் வங்கியில் செலுத்தப்படும்.
மணவெளி தொகுதி முழுவதும் மேலும் ஆயிரம் எல்.இ.டி. தெருவிளக்குகள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி முழுவதும் தெருக்களில் மின் கம்பங்களில் பொருத்த ஆயிரம் எல்.இ.டி. மின் விளக்குகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
மணவெளி தொகுதியில் அனைத்து பகுதியிலும் உள்ள தெருக்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் ஏற்கனவே தனது சொந்த முயற்சியால் 2 ஆயிரம் எல்.இ.டி. தெரு மின் விளக்குகளை மின்துறைக்கு வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் மேலும் மணவெளி தொகுதிக்கு ஆயிரம் எல்.இ.டி. மின் விளக்குகளை ஏற்பாடு செய்து அதனை பொருத்த தவளக்குப்பம் மின்துறை யிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறி–யாளர் பழனிசாமி, உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் திரு–முருகன் மற்றும் தொகுதி பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி ரெட்டி–யார், தவளக்குப்பம் வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணா மூர்த்தி, பா.ஜனதா மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் சக்திபாலன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், ஞானசேகர், முன்னாள் கவுன்சிலர் ராஜா, கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல் மற்றும் வாழுமுனி, முத்துராமன், குமரன், மணி, ஆறுமுகம், பன்னீர் செல்வம், விஜயலட்சுமி, வேலரசன், ரமேஷ், ஆதி, ராஜகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தானாம் பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அமைக்கப்பட்ட மின்மாற்றி–யினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இயக்கி வைத்தார்.
நேரு சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு நாள் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது.
கடற்கரை சாலை காந்தி திடலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி, வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்தி கேயன், நீலகங்காதரன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் வீரமுத்து, ரகுமான், இளையராஜா உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மல ர்களால் அலங்கரிக்கப்பட்ட நேரு உருவப்படத்துக்கும் அஞ்சலி செலுத்தினர்.
அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் சார்பில் நேரு நினைவு தினத்தையொட்டி அரியாங்குப்பம்-வீராம்பட்டிணம் சாலை சந்திப்பில் நேரு உருபடம் அலங்கரித்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொது ச்செயலாளர் சங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன், மீனவர் பிரிவு காங்கேயன், பி.சி.சி. அன்புமணி மற்றும் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே நடந்த ரவுடி கொலையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பே ட்டையைஅடுத்த கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் என்ற பொடிமாஸ் (வயது 27). இவருக்கு மங்கையர்கரசி என்ற மனைவியும் 9 மாத பெண் கைக்குழந்தை உள்ளனர்.
ரவுடியான சரத்குமார் மீது லாஸ்பேட்டைபோலீஸ் நிலையத்தில், வெடிகுண்டு வழக்கு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
மேலும் சரத்குமார் மீது 144 தடை உத்தரவும் உள்ளது. இந்த நிலையில் சரத்குமார் மட்டும் அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அரவிந்தர் நகர் பகுதியில் தனது அக்காள் கணவர் வெங்கடேசன் வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். அந்த வீட்டில் வெங்கடேசன், சரத்குமார் மட்டுமே தங்கி இருந்து வந்தனர்.
வீட்டில் வெங்கடேசன் மற்றும் சரத்குமார் தூங்கிக் கொண்டு இருந்தனர். அதிகாலையில் மர்ம நபர்கள் வெங்கடேசன் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர்.
சிறிதும் எதிர்பாராத வெங்கடேசன் கதவை திறந்த போது அவரை அங்கிருந்த கும்பல் கட்டிப்போட்டு உள்ளே அழைத்துச் சென்று குளியலறையில் போட்டு மூடிவிட்டனர்.
பின்னர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரவுடி சரத்குமாரை தூக்கத்திலேயே அந்த கும்பல் சரமாரியாக பல இடங்களில் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்து போனார்.
தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக சரத்குமாரை கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறப்பு புலனாய்வு படையினர் மூலம் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் சரத்குமாரை 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.
இதில் கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (32), சவுந்தர் என்ற சவுந்தர்ராஜன் (29), கிருஷ்ணராஜ் (30), சந்துரு (23), பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (30), அரியாங்குப்பம் சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த சந்தானம் (24) ஆகிய 6 பேரை அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த கொலை யில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருபுவனை தொகுதியை சேர்ந்த 90 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.55 லட்சம் நிதிைய அங்காளன் எம்.எல்.ஏ. வழங்கினார்
புதுச்சேரி:
புதுவை குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தின் கீழும் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழும் திருபுவனை தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி மதகடிப்பட்டி உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
விழாவில் அங்காளன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 90 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.53லட்சத்து 40 ஆயிரம் நிதியுதவியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் சிற்றரசு, உதவி பொறியாளர் ரவி, இளநிலை பொறியாளர் சிவா, மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், நல ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சேதராப்பட்டில் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
புதுச்சேரி:
வானூர் அருகே பேராவூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது46). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சிவக்குமார் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 7 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல் சிவக்குமார் காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிவக்குமாரை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிவக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவக்குமாரின் சகோதரர் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சகோதரியுடன் அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உறவினர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்திட்டு பள்ளிகூட வீதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி எழிலரசி(வயது42). எழிலரசியின் வீட்டுக்கு அவரது சகோதரி தனலட்சுமி வீட்டு விசேஷத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க வந்தார்.
பின்னர் தனலட்சுமியும் எழிலரசியும் அருகில் உள்ள தங்களது சகோதரர் முருகையன் வீட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு சகோதரர் சிவபிரகாசம், அவரது மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் தனலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனை எழிலரசி தட்டிக்கேட்டார்.
அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சிவபிரகாசம் மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் இவர்களது மகள் மஞ்சு, அவரது கணவர் சுசீந்திரன் மற்றும் உறவினர்கள் வேம்பு, கன்னியப்பன் ஆகியோர் சேர்ந்து சென்ட்ரீங் பலகையால் எழிலரசியை தாக்கினர்.
மேலும் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த எழிலரசி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மழை காரணமாக மீண்டும் மின் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நள்ளிரவு வரை மின்சாரம் வருவதும், போவதுமாகவே இருந்தது. கிராமப்புற பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த பிப்ரவரி முதல் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியது.
மே மாதம் முதல் வாரத்தில் 105 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். வெப்ப சலனம், வளிமண்டல சுழற்சியால் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதன்படி நேற்று இரவு 7 மணியளவில் புதுவையில் சிறு தூறலாக தொடங்கிய மழை, படிப்படியாக வேகம் எடுத்தது.
பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல், பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் விடாமல் பெய்த மழையால் நகர பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நகரின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. நகரமே இருளில் மூழ்கியது.
மழை காரணமாக மீண்டும் மின் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நள்ளிரவு வரை மின்சாரம் வருவதும், போவதுமாகவே இருந்தது. கிராமப்புற பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. பாகூரில் 2 தென்னை மரங்கள் மின்னல் தாக்கி தீ பற்றியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பாகூரில் கிராம பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கின.
சில இடங்களில் சிறு, சிறு பனிக்கட்டிகளும் விழுந்தது. இடையார்பாளையம், முருங்கப்பாக்கத்தில் மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் சேதமானது.
லெனின் வீதியில் ஒரு வீட்டிலும், லப்போர்த் வீதியில் ஒரு மரமும் சாய்ந்து விழுந்தது. இதை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். இன்று காலை வானம் வெறித்து வெளிச்சமாக இருந்தாலும் வெப்பக்காற்று வீசவில்லை.
புதுவையில் கடந்த பிப்ரவரி முதல் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியது.
மே மாதம் முதல் வாரத்தில் 105 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். வெப்ப சலனம், வளிமண்டல சுழற்சியால் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதன்படி நேற்று இரவு 7 மணியளவில் புதுவையில் சிறு தூறலாக தொடங்கிய மழை, படிப்படியாக வேகம் எடுத்தது.
பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல், பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் விடாமல் பெய்த மழையால் நகர பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நகரின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. நகரமே இருளில் மூழ்கியது.
மழை காரணமாக மீண்டும் மின் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நள்ளிரவு வரை மின்சாரம் வருவதும், போவதுமாகவே இருந்தது. கிராமப்புற பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. பாகூரில் 2 தென்னை மரங்கள் மின்னல் தாக்கி தீ பற்றியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பாகூரில் கிராம பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கின.
சில இடங்களில் சிறு, சிறு பனிக்கட்டிகளும் விழுந்தது. இடையார்பாளையம், முருங்கப்பாக்கத்தில் மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் சேதமானது.
லெனின் வீதியில் ஒரு வீட்டிலும், லப்போர்த் வீதியில் ஒரு மரமும் சாய்ந்து விழுந்தது. இதை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர். இன்று காலை வானம் வெறித்து வெளிச்சமாக இருந்தாலும் வெப்பக்காற்று வீசவில்லை.






