என் மலர்

  தமிழ்நாடு

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  மதுக்கடை உரிமையாளரை தாக்கிய கும்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வில்லியனூர் அருகே மதுக்கடையை சூறையாடி உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
  புதுச்சேரி:

  வில்லியனூர் அருகே பங்கூரில் புதுவை விழுப்புரம் மெயின் ரோட்டில் தனியார் மதுக்கடை உள்ளது. அந்த மதுக்கடையை அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 41). நடத்தி வருகிறார். 

  இந்த மதுக்கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த பிரதாப் (27). என்பவர் அடிக்கடி வந்து மது குடித்து விட்டு பணம் கொடுக்காமல் செல்வார். சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் மணிவண்ணன் அதனை கேட்பது இல்லை. 

  இந்த நிலையில் நேற்றும் பிரதாப் மது குடித்து விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார். இதனை மதுக்கடை கேஷியர் தட்டிக் கேட்ட போது அவரிடம் பிரதாப் தகராறு செய்தார். அப்போது அங்கிருந்த மதுக்கடை உரிமையாளர் இருவரையும் சமாதானம் செய்தார். அந்த நேரத்தில் பிரதாப்புக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த அருண் (34). சதீஷ் (37). மற்றும் சுப்பையன் (28). ஆகியோர் மதுக்கடை உரிமையாளரிடம் தகராறு செய்தனர்.

  மேலும் அவரை தாக்கியதோடு அங்கிருந்த மேஜை நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். அதோடு அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அந்த கும்பல் மதுக்கடை உரிமையாளர் மணிவண்ணனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர். 

  இது குறித்து மணிவண்ணன் வில்லி யனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மதுகடையை சூறையாடி  உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற கும்பலை தேடிவருகிறார்கள்.
  Next Story
  ×