search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bar owner"

    • மதுரையில் பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ஒருவரும் சிக்கினார்.

    மதுரை

    செக்கானூரணி நேதாஜி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 57). இவர் மதுரை சுப்பிரமணியபுரம் மேயர் முத்துபாலம் அருகில் உள்ள டாஸ்மாக் அருகே பார் நடத்தி வருகிறார்.

    நேற்று இவர் வேளாண் பொறியியல் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அவரை 2 பேர் வழிமறித்து கத்தி முனையில் பணம் பறித்து தப்பினர். இந்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.

    தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் ஜெய்ஹிந்துபுரம், ராமையா தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார் (27), ஜீவா நகர், வள்ளுவர் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (27) என்பது தெரிய வந்தது.

    சந்தோஷ்குமார் மீது செல்லூர், ஜெயஹிந்துபுரம், சுப்பிரமணியபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில்

    10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தட்சிணாமூர்த்தி மீது பாலமேடு, நாகமலை புதுக்கோட்டை, சோழ வந்தான், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி, சுப்பி ரமணியபுரம் ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இதனை தொடர்ந்து பார் உரிமையாளர் கணேசனை கத்திமுனையில் மிரட்டி பணம் பறித்த மேற்கண்ட இருவரையும் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கைது செய்தனர்.

    ஆயுதங்களுடன் வாலிபர் கைது

    ஜெய்ஹிந்துபுரம் போலீசார் நேற்று தேவர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒருவர் பதுங்கி இருந்தார். அவரிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கொள்ளை அடிப்ப தற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த, ஜெய்ஹிந்த்புரம் பாலமுருகன் என்ற பஞ்சாயத்து பாலா (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே மதுக்கடையை சூறையாடி உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பங்கூரில் புதுவை விழுப்புரம் மெயின் ரோட்டில் தனியார் மதுக்கடை உள்ளது. அந்த மதுக்கடையை அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 41). நடத்தி வருகிறார். 

    இந்த மதுக்கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த பிரதாப் (27). என்பவர் அடிக்கடி வந்து மது குடித்து விட்டு பணம் கொடுக்காமல் செல்வார். சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் மணிவண்ணன் அதனை கேட்பது இல்லை. 

    இந்த நிலையில் நேற்றும் பிரதாப் மது குடித்து விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார். இதனை மதுக்கடை கேஷியர் தட்டிக் கேட்ட போது அவரிடம் பிரதாப் தகராறு செய்தார். அப்போது அங்கிருந்த மதுக்கடை உரிமையாளர் இருவரையும் சமாதானம் செய்தார். அந்த நேரத்தில் பிரதாப்புக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த அருண் (34). சதீஷ் (37). மற்றும் சுப்பையன் (28). ஆகியோர் மதுக்கடை உரிமையாளரிடம் தகராறு செய்தனர்.

    மேலும் அவரை தாக்கியதோடு அங்கிருந்த மேஜை நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். அதோடு அங்கு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அந்த கும்பல் மதுக்கடை உரிமையாளர் மணிவண்ணனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர். 

    இது குறித்து மணிவண்ணன் வில்லி யனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மதுகடையை சூறையாடி  உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ற கும்பலை தேடிவருகிறார்கள்.
    வடமதுரை அருகே ரூ.10 லட்சம் மோசடி செய்த பார் உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    வடமதுரை:

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் துரை (வயது35). இவர் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வடமதுரை, தென்னம்பட்டி, காணப்பாடி ஆகிய பகுதிகளில் மதுபான பார் எடுத்து நடத்தி வருகிறார்.

    தொழிலை மேம்படுத்துவதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் சுமார் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். ஆனால் முறையாக திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

    கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான துரை ஊரைவிட்டு தப்பி சென்றுள்ளார். அவரது 3 பார்களும் பூட்டப்பட்டு உள்ளன. இதனால் பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    ×