என் மலர்
உள்ளூர் செய்திகள்

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் எல்.இ.டி. தெரு விளக்குகளை மின்துறை அதிகாரிகளிடம் வழங்கிய போது எடுத்த படம்.
ஆயிரம் எல்.இ.டி. தெருவிளக்குகள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
மணவெளி தொகுதி முழுவதும் மேலும் ஆயிரம் எல்.இ.டி. தெருவிளக்குகள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி முழுவதும் தெருக்களில் மின் கம்பங்களில் பொருத்த ஆயிரம் எல்.இ.டி. மின் விளக்குகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
மணவெளி தொகுதியில் அனைத்து பகுதியிலும் உள்ள தெருக்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் ஏற்கனவே தனது சொந்த முயற்சியால் 2 ஆயிரம் எல்.இ.டி. தெரு மின் விளக்குகளை மின்துறைக்கு வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் மேலும் மணவெளி தொகுதிக்கு ஆயிரம் எல்.இ.டி. மின் விளக்குகளை ஏற்பாடு செய்து அதனை பொருத்த தவளக்குப்பம் மின்துறை யிடம் ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறி–யாளர் பழனிசாமி, உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் திரு–முருகன் மற்றும் தொகுதி பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி ரெட்டி–யார், தவளக்குப்பம் வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணா மூர்த்தி, பா.ஜனதா மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் சக்திபாலன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், ஞானசேகர், முன்னாள் கவுன்சிலர் ராஜா, கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல் மற்றும் வாழுமுனி, முத்துராமன், குமரன், மணி, ஆறுமுகம், பன்னீர் செல்வம், விஜயலட்சுமி, வேலரசன், ரமேஷ், ஆதி, ராஜகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தானாம் பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அமைக்கப்பட்ட மின்மாற்றி–யினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இயக்கி வைத்தார்.
Next Story






