search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்த போது எடுத்த படம்.
    X
    முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்த போது எடுத்த படம்.

    எடை அளவு பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்- சம்பத் எம்.எல்.ஏ. மனு

    உணவு பாதுகாப்பு துறை எடை அளவு பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முதல்- அமைச்சரிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் முதலியார் பேட்டை  தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது-

    முதலியார் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பொருட்களின் தரம், ஓட்டல்களில் வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை கண்காணிப்பது குறித்து உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு, உணவு பாதுகாப்பு துறை, எடை அளவு கட்டுப்பாடு ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் எனது தொகுதி சட்ட மன்ற அலுவலகத்தில் நடத்தினேன்.

    அதில் கலந்து கொண்ட  அதிகாரிகள் கொடுத்த தகவல் அதிர்ச்சியை அளித்தது. உணவின் தரத்தை கண்காணிக்க கூடிய முக்கிய துறைகளான உணவு பாதுகாப்பு துறை 2 அதிகாரிகள் மட்டுமே கொண்டு செயல்படுவது தெரிய வந்தது.

    மக்களின் சுகாதார நலன் சார்ந்த முக்கிய துறையில் ஊழியர்கள் இல்லாதது மக்களுக்கு பாதுகாப்பான உணவு பொருட்கள் கிடைப்பதை கேள்விக் குறியாக்கி உள்ளது.

    உணவு பாதுகாப்பு துறையில் உணவு பாதுகாப்பு அதிகாரி-1, ஆய்வாளர்கள்-5, 
    எம்.டி.எஸ்-7, எல்.டி.சி., யு.டி.சி அசிஸ்டெண்ட் பதவிகளில் தலா ஒரு பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இந்த  துறைக்கு தேவையான மைக்ரோ ஆய்வகம் வசதி இல்லை. தேவையான அளவு உபகரணங்கள் இல்லை. இந்த துறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச ெஹல்ப் லைன் எண்கள் உருவாக்கப்பட வேண்டும்.
    இத் துறையில் ஆய்வாளர்கள்-2, முத்திரை இடுபவர்-2 ஆகிய காலி பணியிடங்கள் உள்ளன.

    பொதுமக்கள் நலன் சார்ந்த துறை என்பதால் நிதி நெருக்கடி பார்க்காமல் இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மக்களின் சுகாதாரத்தை பேணி காக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் உணவு கடத்தல் பிரிவில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்பவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சம்பத் எம்.எல்.ஏ. மனுவில் கூறி உள்ளார்.  
    Next Story
    ×