என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்துறை தனியார் மய எதிர்ப்பு கூட்டு நடவடிக்கை குழுவினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்த காட்சி.
மின்துறை தனியார் மய நடவடிக்கையை தடுக்க வேண்டும்- ரங்கசாமியிடம் மனு
மின்துறை தனியார்மய நடவடிக்கையை அமைச்சரவையை கூட்டி தடுக்க வேண்டும் என்று ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மின்துறை தனியார்மய எதிர்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமதாசன், சி.ஐ.டி.யூ. சீனிவாசன்,பிரபுராஜ், ஏஐடியூசி முத்துராமன், ஐ.என்.டி.யூசி. சொக்கலிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், எல்.எல்.எப். செந்தில், எம்.எல்.எப். வேதா, வேணுகோபால், ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மின்துறையை தனியார்மயப்படுத்தும் பணிகள் மறைமுகமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல்- அமைச்சரின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு மக்கள் கருத்தையும் மின்துறை போராட்டக் குழுவின் கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக மின்துறையை தனியார் மயப்படுத்தும் அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.
மின்துறையை தனியார் மயமான மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கில் கொள்ளாமல் அரசு முடிவு எடுத்திருப்பது ஊழியர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் எதிரானது. மின்துறை ஊழியர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகும். மின்துறை தனியார்மயத்தை கைவிடும் வகையில் அமைச்சரவையை கூட்டி மக்களுக்கு எதிரான திட்டத்தை நிறைவோற்றாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
வைத்திலிங்கம் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ.விடமும் அவர்கள் இதுகுறித்து மனு அளித்தனர்.
Next Story






