search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Presented by Rangasamy"

    மீன்பிடி தடைகால நிவாரணம் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்தார்
    புதுச்சேரி:

    புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரத்து 500 மீன்பிடி தடைகால நிவாரணமாக வழங்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டுக்கு முதல்கட்டமாக 16 ஆயிரத்து 917 குடும்பத்துக்கு ரூ.9 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடைகால நிவாரண  தொகையை மீனவ குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
     
    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், பிரகாஷ்குமார், அனிபால்கென்னடி, பாஸ்கர், லட்சுமிகாந்தன், செந்தில்குமார், மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த தொகை புதுவையை சேர்ந்த 8 ஆயிரத்து 287, காரைக்காலை சேர்ந்த 3 ஆயிரத்து 265, ஏனாமை சேர்ந்த 4 ஆயிரத்து 870 குடும்பங்களுக்கு இன்று முதல் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மாகியை சேர்ந்த 495 குடும்பத்துக்கு ஜூன் மாதம் வங்கியில் செலுத்தப்படும்.

    ×