என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடனுக்கு குளிர்பானம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 3 வாலிபர்கள் வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
  புதுச்சேரி:

  புதுவை மறைமலை அடிகள் சாலையை சேர்ந்தவர் சக்தி கோவிந்தராஜன். (வயது 42). இவர் அப்பகுதியில் பராசக்தி கோவில் அருகே குளிர்பானக்கடை மற்றும் செல் போன் ரீச்சார்ஜ் கடை நடத்தி வருகிறார்.

  சம்பவத்தன்று  சக்தி கோவிந்தராஜன் கடையில் இருந்த போது உருளையன் பேட்டை சங்கோதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த  ராகுல், பிரசாந்த் மற்றும் கண்ணார வீதியை சேர்ந்த கோகுல் ஆகிய 3 வாலிபர்கள் கடனுக்கு குளிர்பானம் கேட்டனர். ஆனால் சக்தி கோவிந்தராஜன் கொடுக்க மறுத்துவிட்டார். 

  இதையடுத்து அவர்கள் சக்தி கோவிந்தராஜனை முறைத்து பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சக்தி கோவிந்தராஜன் மறைமலை அடிகள் சாலையில் ஒரு வேலை விஷயமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் அருகே வந்த போது ராகுல், பிரசாந்த், மற்றும், கோகுல் ஆகிய 3 பேரும் சக்தி கோவிந்தராஜனை வழிமறித்தனர்.

  பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த மரக்கட்டையால் சக்தி கோவிந்தராஜனை சரமாரியாக தாக்கினர். மேலும் இனிமேல் கடனுக்கு பொருட்கள் கொடுக்க மறுத்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு அந்த கும்பல் சென்று விட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த சக்தி கோவிந்தராஜன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் 

  இது குறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×