என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹைமாஸ் விளக்கு அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
    X
    ஹைமாஸ் விளக்கு அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    முழுமையாக எரிந்த ஹைமாஸ் விளக்கு- கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை

    உப்பளம் தொகுதியில் முழுமையாக எரிந்த ஹைமாஸ் விளக்கு கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட மில்லத் வீதி, முல்லா வீதி மற்றும் காஜியார் வீதி சந்திப்பில் ஹைமாஸ் விளக்கு  எரியாமல் இருந்தது.

    இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பெரும்பாலானோர் காய மடைந்தனர். 

    இதுகுறித்து பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். மின் துறை அதிகாரிகள் நடவடிக்கையால் ஹைமாஸ் விளக்கு முழுமையாக எரியத் தொடங்கியது. இதனால் இருட்டில் மிதந்த மில்லத் வீதி, முல்லா, வீதி மற்றும் காஜியார் வீதி சந்திப்பு தற்போது இரவிலும் பகல் போல் காட்சி அளிக்கிறது. 

    இதில் தி.மு.க. துணை செயலாளர் முகமத் நாசர் பிரமுகர்கள் நோயல், செல்லப்பன், இர்பான், அஜ்மல், அனஸ், ஜாவித், அப்துல் ரஹ்மான், லாரன்ஸ், மோரிஸ், ரகுமான், ஆகியோர் கலந்து கொண்டார்.
    Next Story
    ×