search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siva MLA Indictment"

    ஒரு ஆண்டு கடந்த பின்பும் என்.ஆர்.காங். அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்தவில்லை என தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மணவெளி மந்தவெளி திடலில் நடைபெற்றது. 

    பொதுக் கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.சு. இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    மணவெளி தொகுதி சன்.சண்முகம், ரவிச்சந்திரன், சக்திவேல் ஆகியோர் வரவேற்றனர். மாநில  அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் சி.பி. திருநாவுக்கரசு, மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏக்கள் சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., புதுவை மாநில அமைப்பாளர் மற்றும் சட்டசபை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கூட்டணி என்ற பெயரில் தி.மு.க.வின் பல தொகுதியை தட்டி பறித்தனர். 
    தற்போது தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் திட்டங்கள் பற்றி புதுவை மாநிலத்திலும் பாராட்டும் வகையில் பேசப்பட்டுவருகிறது.

    தமிழகத்தைபோல புதுவையியிலும்  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பல நல்ல சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்த்து இருகின்றனர். ஆதலால் தி.மு.க. நிர்வாகிகள் உத்வேகத்துடன் இப்போதே செயல்பட வேண்டும்.

    தி.மு.க. மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ள தொகுதியாக மணவெளி, தட்டாஞ்சாவடி மற்றும் கதிர்காமம் இருப்பதால். இத்தொகுதிகளிலும்  தி.மு.க. போட்டியிடும்.

    தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து வாக்களித்தனர். தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

    மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி அரசு அமைந்தால் அதிக நிதியை மத்திய அரசு வழங்கும். இதனால் எல்லா திட்டத்தையும் நிறைவேற்றுவோம் என தெரிவித்த என்.ஆர்., பா.ஜனதா கட்சியினர் மக்களுக்கு பதில் கூறவேண்டும்.

    புதுவையில் முழுமையான பட்ஜெட் போடவில்லை. இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் சொல்ல வேண்டும். ஆட்சி அமைத்த 3 மாதத்தில் மாநில அந்தஸ்து பெற்று தருவோம் என அறிவித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு பேப்பர் கூட நகர்த்தவில்லை.

    மாநில தேவைக்காக பிற மாநில முதல் அமைச்சர்கள் பிரதமரை சந்திக்கிறார். ஆனால் புதுவை வளர்ச்சிக்காக கூட்டணியில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்திக்கவில்லை.

    தேர்தல் அறிக்கையில் புதுவைக்கான கடனை தள்ளுபடி செய்வோம் என சொன்னார்கள் ஆனால் செய்யவில்லை மாணவர்களுக்கு டேப்லட், லேப்டாப் வழங்குவோம். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். 

    புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு 25 சதவீதம் பெற்று தருவோம். மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றனர்.

    நஷ்டத்தில் உள்ள நூற்பாலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை மீண்டும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர். 

    ஆனால், ஒரு ஆண்டு முடிந்த நிலையில் ஒன்றுகூட செய்ய வில்லை. மின்துறையை தனியார் மயமாக்கல் மற்றும் காரைக்கால் துறைமுகத்தை அதானி மற்றும் அம்பானிக்கு கொடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

    கூட்டத்தில் மாநில துணை அமைப்பாளர்கள் குமார் என்ற கிருஷ்ணன், சன்.குமரவேல், குணாதிலீபன், செந்தில்குமார், கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லி முத்து லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன்‍, ஜெ.வி.எஸ். சரவணன் என்ற ஆறுமுகம், சிறப்பு அழைப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், முகிலன், டாக்டர். நித்திஷ், பாஸ்கரன், வடிவேல், கோபாலகிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் மணவெளி தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் தொகுதி பொறுப்பாளர் கே.ஆர்.வி. ராஜாராமன் நன்றி கூறினார்.
    ×