என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 14 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
    • தற்போது பொதுப் பணித்துறையினரின் தொடர் கண்காணிப்பில் ஏனாம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ஒரு பிராந்தியமான ஏனாம் பகுதி கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

    கோதாவரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏனாம் பிராந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனாம் பிராந்தியத்தில் அனைத்து தாழ்வான பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏனாமில் மழை பெய்யாமலேயே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையை மீறி வெள்ளம் ஊருக்குள் நுழைந்துள்ளது.

    அங்கு 14 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். படகுகள் கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்களை போலீசார் படகுகள் மூலம் அனுப்பிவைத்தனர்.

    வெள்ளப்பெருக்கு 4-வது நாளாக குறையாத நிலையில் உள்ளது. இதனால் ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரில் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர்.

    தற்போது பொதுப் பணித்துறையினரின் தொடர் கண்காணிப்பில் ஏனாம் உள்ளது. பாதுகாப்பிற்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தொடர் வெள்ள பெருக்கு காரணமாக ஏனாம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • புதுவையில் படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது.
    • புதுவையில் 898, காரைக்காலில் 118, ஏனாமில் 24 பேர், மாகியில் ஒருவர் என ஆயிரத்து 36 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. புதுவையில் 2 ஆயிரத்து 240 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 174, காரைக்காலில் 36, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என புதிதாக 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுவையில் 11, ஏனாமில் ஒருவர் என 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 898, காரைக்காலில் 118, ஏனாமில் 24 பேர், மாகியில் ஒருவர் என ஆயிரத்து 36 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 159, காரைக்காலில் 19, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என 181 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாநி லத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 59 ஆயிரத்து 665 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது. புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • காமராஜர் பிறந்தநாளையொட்டி ராஜ்பவன் தொகுதி குமரகுருபள்ளத்தில் இலவச அரிசி வழங்கும் விழா நடந்தது.
    • காங்கிரஸ் வக்கீல்கள் அணி தலைவர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    காமராஜர் பிறந்தநாளையொட்டி ராஜ்பவன் தொகுதி குமரகுருபள்ளத்தில் இலவச அரிசி வழங்கும் விழா நடந்தது. காங்கிரஸ் வக்கீல்கள் அணி தலைவர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மூத்த துணைத்தலைவர் தேவதாஸ் ஆகியோர் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வேல்முருகன், வட்டார தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன், சிறப்பு அழைப்பாளர் பிரதீஷ், தியாகராஜன், ராஜ்குமார், சண்முகம், பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • டாக்டரிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இவரது செல்போன் வாட்ஸ் ஆப்க்கு புதிய நம்பரிலிருந்து மெசேஜ் வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் டி.ஜி.பி.யின் பெயரை பயன்படுத்தி டாக்டரிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கதிர்காமம் இந்திரா காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் முருகேச பாரதி.இவரது செல்போன் வாட்ஸ் ஆப்க்கு புதிய நம்பரிலிருந்து மெசேஜ் வந்தது.

    அந்த நம்பரின் வாட்ஸ்-ஆப் புகைப்படமாக புதுவை போலீஸ் டி.ஜி.பி ரன்வீர் சிங் கிருஷ்ணியாவின் புகைப்படம் இருந்தது.தொடர்ந்து பேசிய அந்த நபர் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பரிசளிப்பதற்காக பணத்தை அனுப்புமாறு கூறினார். இதனால் சந்தேகமடைந்த டாக்டர் முருகேச பாரதி இதுகுறித்து டி.ஜி.பி. அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டார்.

    அதன் பின்னரே பேசியது வடமாநிலத்தை சேர்ந்த மர்மநபர் என தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து டாக்டர் முருகேச பாரதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பராமரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த 60 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு வில்லியனூர் எஸ்.எஸ்.நகரில் தொடங்கியது.
    • பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே கடன் உள்ளிட்ட வங்கி திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கிறது.

    புதுச்சேரி

    இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 25 ஏழை பெண்களுக்கு 'பசு மித்ரா' என்ற தலைப்பில் கால்நடை பராமரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த 60 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு வில்லியனூர் எஸ்.எஸ்.நகரில் தொடங்கியது. பயிற்சி முகாமை எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே கடன் உள்ளிட்ட வங்கி திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கிறது. வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே வங்கியின் தலைமை நிர்வாகத்தில் உள்ளனர். இவர்களுக்கு புதுவை மக்கள் பேசக்கூடிய தமிழ் தெரிவதில்லை. இதனால் மக்கள் தங்களது தேவைகளை தெளிவாக கூறினாலும், அதை வங்கி அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

    இந்த நிலை மாற வேண்டும். தகுதியான நபர்களுக்கு வங்கிக்கடன் உள்ளிட்டவைகள் சிபாரிசின்றி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் அமிர்தவள்ளி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், டாக்டர்கள் குமணன், கவுதமன் மற்றும் புதுவை மாநில விடுதலை சிறுத்தைகளின் செயல் தலைவர் தேவ. பொழிலன், தி.மு.க. தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை வேதபுரம் பைன் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.எஸ்.ஆர். அறக்கட்டளை சார்பில் சிறந்த கல்விச்சக்ரவர்த்தி விருது வழங்கப்பட்டது
    • கல்வி சக்கரவர்த்தி விருதை சிவராஜனுக்கு வழங்கி கவுரவித்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த கூடப்பாக்கம் ஜவகர் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் ராம.சிவராஜன் கடந்த 40 ஆண்டுகளாக கிராமப்பகுதியில் கல்விப்பணியாற்றி வருவதைப்பாராட்டும் வகையில் புதுவை வேதபுரம் பைன் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.எஸ்.ஆர். அறக்கட்டளை சார்பில் சிறந்த கல்விச்சக்ரவர்த்தி விருது வழங்கப்பட்டது.

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ கலந்து கொண்டு கல்வி சக்கரவர்த்தி விருதை சிவராஜனுக்கு வழங்கி கவுரவித்தார். வேதபுரம் பைன் ஆர்ட்ஸ் அமைப்பாளர் தங்கராஜ், புதுவை தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தனி அதிகாரி திருவரசன், முனிசாமி, அருள்ஜோதி, கலைமணி ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

    • குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கிடையே சீனுவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    புதுச்சேரி,

    குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் சிங்கார வேல் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 58). மீனவர் இவருக்கு அமுதா என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.

    இதற்கிடையே சீனுவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனாலும் சீனுவாசன் மது பழக்கத்தை கைவிட வில்லை. இதனை அவரது மனைவி அமுதா கண்டித்து வந்தார்.

    அது போல் நேற்று மாலை சீனுவாசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி அமுதா கண்டித்தார். இதனால் மனமுடைந்த சீனுவாசன தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் சோலைநகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதிய பஸ் நிலையம் அருகே ரெயில்வே ஊழியரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர் களை போலீசார் கைது செய்தனர்.
    • நேற்று முன் தினம் இரவு இவரும் தன்னுடன் பணிபுரியும் சரண்ராஜ் என்பவரும் விழுப்புரத்தில் பணி முடிந்து புதுவை புதிய பஸ் நிலையம் வந்தனர்.

    புதுச்சேரி:

    புதிய பஸ் நிலையம் அருகே ரெயில்வே ஊழியரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர் களை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை சோலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 58). இவர் தென்னக ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு இவரும் தன்னுடன் பணிபுரியும் சரண்ராஜ் என்பவரும் விழுப்புரத்தில் பணி முடிந்து புதுவை புதிய பஸ் நிலையம் வந்தனர். சரண்ராஜ் மாஸ் ஓட்டல் பின்புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். ஸ்ரீதர் சுப்பையா நகர் முதல் தெருவில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் திடீரென ஸ்ரீதரிட மிருந்து செல்போனை பறித்து கொண்டு அங்கு ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபருடன் ஏறிக்கொண்டு மின்னல் வேகத்தில் இருட்டான பகுதி வழியே தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து செல் போனை பறிகொடுத்த ஸ்ரீதர் இதுபற்றி உருளையன் பேட்டை போலீசில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களின் வாகன பதிவு எண் ஆதாரத்தோடு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு ஆய்வு செய்தனர். அப்போது ரெயில்வே ஊழியரிடம் செல்போனை பறித்து சென்றவர்களின் அடையாளம் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் நெல்லித்தோப்பு கஸ்தூரி பாய் நகரை சேர்ந்த டேமின் (வயது 22). மற்றும் உருளையன் பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த பரத் என்ற பரத் குமார் (20) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரத் குமார் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது.
    • என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணியை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று இந்தியா முழுவதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே அரசு மூலம் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டாலும், பிரதமர் அறிவிப்பு மக்களை ஊக்கப்படுத்தி ஊசி போட வரவழைக்கும்.

    பிரதமர் ஊக்கத்தினால் தான் கொரோனாவை எதிர்கொண்டோம். மக்கள் பாதிக்கக்கூடாது என்று ஊக்கப்படுத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு அதிகமாவதால் பூஸ்டர் தடுப்பூசி நம்மை பாதுகாக்கும்.

    புதுவை முழுக்க 75 பள்ளிகளை பார்க்க திட்டமிட்டு ஒவ்வொரு பள்ளியாக செல்கிறேன். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ திறமையாளர்கள் உள்ளனர். அரசு பள்ளியை மேம்படுத்த முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்துள்ளேன். பள்ளிக்கு நேரடியாக செல்வதால் பல விஷயங்கள் தெரிகின்றன.

    புதிதாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தைத்து சீருடை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் வினியோகம் செய்ய ஆரம்பித்துள்ளோம். மாணவர் பஸ் நிதித்துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.

    அரசு பள்ளியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடுநிலை, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அரசு பள்ளியை நோக்கி வர ஆரம்பித்துள்ளது இது மகிழ்ச்சியான விஷயம். அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, தனியார் பள்ளிகளை விட அதிகமாக நல்ல நிலைமைக்கு வர பணிகள் செய்யப்படும்.

    தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.

    கவர்னர்கள் எல்லோரும் வேந்தர்களாக, அந்தந்த கல்வி நிலையங்களை மேம்படுத்த பணியாற்றுகிறார்கள். அரசும், கவர்னரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். வேந்தர்களாக இருப்பதற்கே கவர்னருக்கு உரிமையில்லை என்ற வழிவகை செய்யக்கூடாது.

    கல்வியை மேம்படுத்ததான் கவர்னர்கள் முயற்சி செய்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது. இன்னொரு மாநில கவர்னராக இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் கருத்து கூறுகிறேன்.

    பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து உழைத்து மந்திரியான அவரை அழைத்தது மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதை அரசியலாக்க எடுத்துக்கொள்ளாமல், மத்திய-மாநில அரசை சார்ந்தோர் கவர்னருடன் இணைந்து பட்டமளிப்பு விழாக்களை குழந்தைகளுக்கு வழிகாட்டும் விழாக்களாக கொண்டு செல்லவேண்டும். இதில் அரசியல் ஏதும் இல்லை. அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் உரிமை இருக்கிறது.

    ரெட்டியார்பாளையம் சாலை விபத்தில் குழந்தை இறந்தது வருத்தமளிக்கிறது. மிகுந்த மனவேதனை அடைந்தேன். வாகன நெரிசல் சரிசெய்யப்படும். குழந்தைகளை அழைத்து செல்லும் போது எச்சரிக்கை தேவை.

    சாலையை விரிவுப்படுத்துவதும், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற மக்களும் உதவ வேண்டும். புறவழிச்சாலை பணிகள் தொடர்பாக விசாரிக்கிறேன். தவறுகள் சரி செய்யப்படும். உயிரிழப்புகளை அனுமதிக்க முடியாது. அரசு மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.

    என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன். புதுவை மத்திய பல்கலைக்கழகத்திலும் புதுவை மாணவர் ஒதுக்கீடு தொடர்பாக துணைவேந்தரிடம் விசாரிக்கிறேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு தமிழகத்தில் தருவதைப்போல் புதுவையில் தருவது தொடர்பான கோப்பு நிலுவையில் இருப்பது பற்றி விசாரிக்கிறேன்

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    • புதுவை கவர்னர் தமிழிசை மணவெளி தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியை பார்வையிட்டார்.
    • அப்போது பரதநாட்டியம், சிலம்பாட்டம் நிகழ்ச்சி களோடு மாணவ -மாணவிகள் கவர்னரை வரவேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை மணவெளி தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியை பார்வையிட்டார்.

    அப்போது பரதநாட்டியம், சிலம்பாட்டம் நிகழ்ச்சி களோடு மாணவ -மாணவிகள் கவர்னரை வரவேற்றனர். மாணவ- மாணவிகளின் கலைத்- திறமைகளை கவர்னர் பாராட்டினார். பின்னர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான எம்.ஐ.டி கோப்பை கபடி விளையாட்டு போட்டியைப் பார்வை யிட்டு மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.

    நூலகத்தையும், அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் கவர்னர் பார்வையிட்டார். பின்னர் மாணவிகளோடு கலந்துரையாடினார். அப்போது புத்தகத்திலிருந்து புதிர் கேள்விகளை கேட்டார்.

    பின்னர், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும், பாடப் புத்தகங்கள் இல்லாமல் பொதுஅறிவு புத்தகங்களையும் தினமும் படிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

    ஏழுமலை என்ற மாணவனின் அறிவியல் கண்டுபிடிப்பான 'பார்வையற்றோர் கைத்தடி' செயல்முறையை கண்டு பாராட்டினார். அதற்கு 'விஷன் ஸ்டிக்' என்று பெயர் வைக்கலாம் என்று கூறினார். மேலும், மாணவர்களின் கைவினை திறமைகளை ஆசிரியர்கள் எடுத்துக்கூறினர். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கரன் எம்.எல்.ஏ., மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்க இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லை.
    • நாளை இந்த கட்சி மீண்டும் ஒருங்கிணையப் போகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகரை அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமில்லை என ஓம்சக்தி சேகர் கூறினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்க இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லை. அதற்கு ஏற்ற தகுதியும் அவருக்கு இல்லை. ஜெயலலிதா வழியில் வந்தவன் நான். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தான். அவர்தான் என்னை நீக்க வேண்டும்.

    பழனிசாமி திறமையான முதல்-அமைச்சராகவும், ஒருங்கிணைப்பாளரோடு இணைந்து நல்ல முறையில் அ.தி.மு.க.வை வழிநடத்தி வந்தார். திடீரென சகுனிகளின் கூட்டத்தில் சிக்கியுள்ளார். சதி திட்டம் தீட்டி, உச்சிக்கு கொண்டு செல்வதாக கூறி எடப்பாடி பழனிசாமியை பாதாளத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வருகின்றனர்.

    நாளை இந்த கட்சி மீண்டும் ஒருங்கிணையப் போகிறது. 3 பேர் ஒருங்கிணைந்த பிறகு, 4-வது ஆளாக அவரும் வந்து சேர்வார். எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே மகுடம் சூட்டிக் கொண்டுள்ளார். தானாக தற்காலிக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.

    ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களும், உங்களிடம் கையூட்டு பெற்றவர்களும்தான் தற்காலிக பொதுச்செயலாளர் என்று அழைப்பர். அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை வரப்போகிறது. அதன்பிறகு புதுவை மாநிலத்துக்கு நான் தலைமையேற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது.
    • அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமாக வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இயங்கவில்லை.

    இதனால் மாணவர்கள் தங்களது முடியை பல விதமாக அலங்காரம் செய்து கொண்டு சுற்றி திரிந்தனர்.

    தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்துள்ளது. ஆனால் அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமாக வைத்துள்ளனர்.

    இவர்களை பெற்றோர் கண்டித்தும் வெட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் தன்ராஜ் தனது சொந்த செலவில் 2 முடித்திருத்தும் தொழிலாளர்களை அழைத்து வந்து மாணவர்களை வரிசையாக உட்கார வைத்து முடியை சீராக்கினார்.

    தொடர்ந்து இதே போல் வெட்ட வேண்டும் இல்லை என்றால் மீண்டும் பள்ளியில் மாணவர்களுக்கு முடி வெட்டப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த வீடியோ புதுவையில் வைரலாக பரவி வருகிறது.

    ×