என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பொதுமக்கள் சுமார் 100 பேர் திடீரென விழுப்புரம் சாலையின் குறுக்கே ஆம்புலன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி

    விபத்தில் இறந்து போன சிறுவனுக்கு நியாயம் கேட்டு சிறுவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100 பேர் திடீரென விழுப்புரம் சாலையின் குறுக்கே ஆம்புலன்ஸ் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டு வரும் சிறுவனின் உறவினர்கள் இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும், பள்ளிகள் அதிகளவில் உள்ளதாகவும், சாலையை ஆக்கிரமைத்து கடைகள் உள்ளதால் விபத்துகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    • புதுவை கவர்னர் தமிழிசை நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.
    • காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு கவர்னர் தமிழிசை சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

    காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு கவர்னர் தமிழிசை சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    அன்னை தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் வில்லுப்பாட்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அரசு பள்ளியில் இது போன்ற சிறப்பான நிகழ்வுகள் மிகவும் பாராட்டுக்குரியது. அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசாங்க பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது தான் அரசின் நோக்கம் ஆகும். முதல்-அமைச்சரிடம் இது சம்பந்தமாக ஆலோசனை செய்து உள்ளேன்.

    கலெக்டர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கான பணிகள் நடைபெறும்.

    அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும். காரைக்கால் வளர்ச்சிக்கு அத்தனை ஏற்பாடுகளும் செய்து, வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக நகரமாக உள்ள காரைக்கால் வளர்ச்சி பெறும். தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவமனை போன்றவை காரைக்காலுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.

    இவ்வாறு தமிழிசை கூறினார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை கோவில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளி, தலத்தெரு

    என்.எஸ்.சி.போஸ் அரசு மேல்நிலைப்பள்ளி, வரிச்சக்குடி அரசு தொடக்கப்பள்ளி, பூவம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    அவருடன் கலெக்டர் முகமது மன்சூர், மேல்நிலைப் பள்ளி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மாணவர்களிடம் பேசிய கவர்னர் தமிழிசை, அனைவரும் யோகாவை கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிகளிலும் தாங்கள் வசிக்கும் வீடுகளிலும் தூய்மையை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • மார்க்சிஸ்டு கட்சி சார்பில் கல்வித்துறை அலுவலகத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்துக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும் இலவச பாட புத்தகம், சீருடை, கல்வி உதவித்தொகை வழங்காதது, கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான பேருந்து வசதியை ஏற்படுத்தி தராததை கண்டித்து மார்க்சிஸ்டு கட்சி சார்பில் கல்வித்துறை அலுவலகத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னதாக சுப்பையா சிலையிலிருந்து தொடங்கிய ஊர்வலத்தை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் முருகன் தொடங்கி வைத்தார்.

    மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா மற்றும் பிரதேச குழு உறுப்பினர்கள் ஆனந்த், இளவரசி, நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், உழவர் கரை நகர செயலாளர் ராம்ஜி, மன்ணாடிபட்டு, பாகூர் மற்றும் வில்லியனூர் கமிட்டி செயலாளர்கள் ரகு அன்புமணி, சரவணன், ராமமூர்த்தி மற்றும் மாணவர் சங்க தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் கல்வித்துறை அலுவலகத்தில் முடிவடைந்தது. அங்கு கோரிக்கை களை வலியுறுத்தி கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    • புதுவை திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி.
    • கலெக்‌ஷன் ஏஜெண்டாக ரூபேஷ் குமார் என்பவர் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    அதிக வட்டி தருவதாக கோவில் அர்ச்சகரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுவை திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. (வயது 56). இவர் குருபாப்பேட்டில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.

    இவர் கடந்த ஆண்டு புதுவை காமாட்சியம்மன் கோவில் தெருவில் மரினா கோல்டு மார்ட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தார். அந்த நிறுவனம் முதலீட்டுத் தொகைக்கு வட்டியாக பணமும் அல்லது நகையாகவும் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியதின் பேரில் அந்த பணத்தை பாலாஜி முதலீடு செய்தார். அந்த நிறுவனத்தை கருணாநிதி மற்றும் பங்குதாரராக ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரியும் கணேசனும் நடத்தி வந்தனர். கலெக்‌ஷன் ஏஜெண்டாக ரூபேஷ் குமார் என்பவர் இருந்து வந்தார்.

    தொடக்கத்தில் அந்த நிறுவனம் வட்டி பணத்தை பாலாஜியின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தது. அதன் பிறகு வட்டிப்பணத்தை அந்த நிறுவனம் வங்கிக் கணக்கில் செலுத்த வில்லை. ரூ.4 லட்சம் வரை அந்த நிறுவனம் பாலாஜிக்கு கொடுக்க வேண்டி இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த பாலாஜி அந்த நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது அங்கு கடை பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் 3 பேரையும் சந்தித்து பாலாஜி கேட்ட போது மீதி பணத்தை 1 மாதத்தில் கொடுத்து விடுவதாக அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் 1 மாதமாகியும் அவர்கள் பணத்தை கொடுக்க வில்லை. இதையடுத்து பாலாஜி நம்பிக்கை மோசடி செய்து பணத்தை அபகரித்து விட்டதாக கருணாநிதி, கணேசன், மற்றும் ரூபேஷ் குமார் ஆகியோர் மீது புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூமியான் பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் மூளை சிதறி பரிதாபமாக இறந்துபோனான்.
    • செல்வம். இவர் தள்ளு வண்டியில் வைத்து பாஸ்ட் புட்கடை நடத்திவருகிறார்.

    புதுச்சேரி:

    பூமியான் பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் மூளை சிதறி பரிதாபமாக இறந்துபோனான். புதுவை ரெட்டியார் பாளையம் பவளநகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் தள்ளு வண்டியில் வைத்து பாஸ்ட் புட்கடை நடத்திவருகிறார். இவரது மகன் கிஷ்வந்த் (வயது 8). இவன் மூலகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தான்.

    பன்னீர் செல்வம் தனது மகனை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். பூமியான் பேட்டையில் ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்ற போது எதிரே ஒருவர் மோட்டார் சைக்கிளில் குறுக்கே பாய்ந்ததால் அவரின் மீது மோதாமல் இருக்க பன்னீர் செல்வம் திடீர் பிரேக் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வலது புறத்தில் கிஷ்வந்தும் இடது புறத்தில் பன்னீர் செல்வமும் கீழே விழுந்தனர்.

    அந்த நேரத்தில் பின்னால் வந்த தனியார் பஸ் கிஷ்வந்த் மீது மோதியது. இதில் தலை நசுங்கி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே சிறுவன் கிஷ்வந்த் பரிதாபமாக இறந்து போனான். இது பற்றி தகவல் அறிந்ததும். வடக்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி அறிந்த போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். தந்தை கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவன் மூளை சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பன்னீர் செல்வத்துக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பிய பன்னீர் செல்வம் அதற்காக செயற்கை கருவூற்றல் மூலம் கிஷ்வந்த் பிறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தேங்காய்திட்டு மரப்பாலத்தில் இருந்து தனியார் மருத்துவக் கல்லூரி பஸ் ஒன்று காலாப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்திராகாந்தி சிலை சதுக்கம் அருகே வந்த போது முன்னால் சென்ற கார் திடீரென வலது புறம் திரும்பியதால் கார் மீது மோதாமல் இருக்க கல்லூரி பஸ் டிரைவர் பஸ்ஸை இடது புறம் திருப்பினார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதி நின்றது. அதிஷ்ட்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    • புதுவை நைனார்மண்ட பம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது
    • விழாவையொட்டி கோவிலில் கொடியேற்றம் நடந்தது. அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடந்தது

    புதுச்சேரி:

    புதுவை நைனார்மண்ட பம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் கொடியேற்றம் நடந்தது. அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    வருகிற 15-ந் தேதி 108 பால்குட ஊர்வலம், 20-ந் தேதி முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான 22-ந் தேதி நடைபெறும் செடல் விழாவில் 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு தங்க ஊசி பேழையுடன் ஊர்வலம் நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு செடல் ஊர்வலமும், தேர்பவனியும் நடக்கிறது. 23-ந் தேதி மஞ்சள்நீராட்டு, 24-ந் தேதி விடையாற்றி உற்சவம், ஆகஸ்டு 5-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

    • கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நம் நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட தடுப்பூசி இலவச மாக மக்களுக்கு செலுத்தப் பட்டது.
    • முதல், 2-வது தவணை தடுப்பூசியை மத்திய அரசு நாடு முழுவதும் இலவசமாக செலுத்தியது.

    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நம் நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட தடுப்பூசி இலவச மாக மக்களுக்கு செலுத்தப் பட்டது.

    முதல், 2-வது தவணை தடுப்பூசியை மத்திய அரசு நாடு முழுவதும் இலவசமாக செலுத்தியது. இதுவரை நாடு முழுவதும் 96 சதவீத மக்கள் முதல் தவணையையும், 87 சதவீதத்தினரும் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 

    புதுவையில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசியை 17 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர். இந்ந நிலையில் கடந்த ஏப்ரல் 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. அதேநேரத்தில் கொரோனா தொற்றும் குறைந்ததால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    இந்த நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. புதுவையில் நாள்தோறும் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    பூஸ்டர் தடுப்பூசியை புதுவை அரசு மத்திய அரசிடமிருந்து விலைக்கு வாங்கி, செலுத்தி வருகிறது. முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கடந்த 1-ந் தேதி முதல் தகுதியானவர்களுக்கு புதுவையில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது.

    ஆனால் இதுகுறித்து பொதுமக்களிடம் விளம்ப ரப்படுத்தப் படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசே தற்போது 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது அமலுக்கு வருகிறது. ஆதார் கார்டை எடுத்து சென்று அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நல வழி மையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம்.இதற்கான முறையான அறிவிப்பை புதுவை சுகாதாரதுறை இன்று மாலை வெளியிடுகிறது.

    • பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்
    • சமூக இடை வெளி உட்பட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் படிப்படி யாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் அனை வரும் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடை வெளி உட்பட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் ஒரேநாளில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.

    புதுவையில் ஆயிரத்து 938 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 207, காரைக்காலில் 7, ஏனாமில் 7 பேர் என புதிதாக 221 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 7, ஏனாமில் ஒருவர் என 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 882, காரைக்காலில் 101, ஏனாமில் 24 பேர், மாகியில் ஒருவர் என ஆயிரத்து 8 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 86, காரைக்காலில் 25, ஏனாமில் 8, மாகியில் ஒருவர் என 120 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.

    புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 58 ஆயிரத்து 999 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது பொது மக்களி டையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்திட சுப்ரீம்கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.
    • இதனால் கோர்ட்டு அவமதிப்பை தவிர்த்திட மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2011-க்கு பிறகு 10 ஆண்டுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

    சுப்ரீம்கோர்ட்டு தலையீட்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கியது.

    இருப்பினும் இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கால் 2 முறை தேதி அறிவிக்கப்பட்டும், தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்திட சுப்ரீம்கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.

    இதனால் கோர்ட்டு அவமதிப்பை தவிர்த்திட மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனையை பெற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

    இதனால் புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என தெரிகிறது.

    புதுவை மாநிலத்தில் தோன்றி இறை அருளில் இரண்டாக கலந்த நாயன்மார்களில் ஒருவர் காரைக்கால் அம்மையார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் தோன்றி இறை அருளில் இரண்டாக கலந்த நாயன்மார்களில் ஒருவர் காரைக்கால் அம்மையார். இறைவன் அளித்த மாங்கனியால் மன மாற்றம் அடைந்து இறைவனால் ஈர்க்கப்பட்ட இனிய நிகழ்வு மாங்கனி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். புதுவை காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் மாங்கனி தானம் செய்து அதனை தேராக ஜோடித்து காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு மாங்கனி தேரில் உட்புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.

    20-ம் ஆண்டு மாங்கனி திருவிழா சிறுத்தொண்டு நாயனார் திருத்தொண்டு சபை சார்பில் வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • புதுவை தேசிய தொழில் நுட்ப கழகத்தின் 2-ம் கட்ட வளர்ச்சிப் பணி
    • காரைக்கால், தேசிய தொழில் நுட்பக்கழக வளாகத்தில் இன்று நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை தேசிய தொழில் நுட்ப கழகத்தின் 2-ம் கட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காரைக்கால், தேசிய தொழில் நுட்பக்கழக வளாகத்தில் இன்று நடந்தது. கவர்னர் தமிழிசை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் முதல் -அமைச்சர் ரங்கசாமி, போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் சங்கரநாராயணசாமி, பதிவாளர் சுந்தரவரதன் மற்றும் அதிகாரிகள் உடனி ருந்தனர். விழாவில் புதிதாக 6 கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னதாக தேசியத் தொழில்நுட்பக் கழகம் வந்த கவர்னருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • புதுவையில் 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • இதில் புதுவையில் 143, காரைக்காலில் 25, ஏனாமில் 6 பேர் என புதிதாக 174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 143, காரைக்காலில் 25, ஏனாமில் 6 பேர் என புதிதாக 174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 6, ஏனாம் 4, மாகியில் ஒருவர் என 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 762, காரைக்காலில் 119, ஏனாமில் 22 பேர், மாகியில் ஒருவர் என 904 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 132, காரைக்காலில் 34, ஏனாமில் 82 பேர் என 174 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 58 ஆயிரத்து 319 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறிமுறை களை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    ×