என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கல்வித்துறையை முற்றுகையிட்டு-மார்க்சிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
    X

    கல்வித்துறை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்திய காட்சி.

    கல்வித்துறையை முற்றுகையிட்டு-மார்க்சிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

    • மார்க்சிஸ்டு கட்சி சார்பில் கல்வித்துறை அலுவலகத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்துக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும் இலவச பாட புத்தகம், சீருடை, கல்வி உதவித்தொகை வழங்காதது, கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான பேருந்து வசதியை ஏற்படுத்தி தராததை கண்டித்து மார்க்சிஸ்டு கட்சி சார்பில் கல்வித்துறை அலுவலகத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னதாக சுப்பையா சிலையிலிருந்து தொடங்கிய ஊர்வலத்தை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் முருகன் தொடங்கி வைத்தார்.

    மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா மற்றும் பிரதேச குழு உறுப்பினர்கள் ஆனந்த், இளவரசி, நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், உழவர் கரை நகர செயலாளர் ராம்ஜி, மன்ணாடிபட்டு, பாகூர் மற்றும் வில்லியனூர் கமிட்டி செயலாளர்கள் ரகு அன்புமணி, சரவணன், ராமமூர்த்தி மற்றும் மாணவர் சங்க தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் கல்வித்துறை அலுவலகத்தில் முடிவடைந்தது. அங்கு கோரிக்கை களை வலியுறுத்தி கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    Next Story
    ×