என் மலர்
நீங்கள் தேடியது "Fisherman committed"
- குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கிடையே சீனுவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
புதுச்சேரி,
குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சோலைநகர் சிங்கார வேல் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 58). மீனவர் இவருக்கு அமுதா என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது.
இதற்கிடையே சீனுவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனாலும் சீனுவாசன் மது பழக்கத்தை கைவிட வில்லை. இதனை அவரது மனைவி அமுதா கண்டித்து வந்தார்.
அது போல் நேற்று மாலை சீனுவாசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி அமுதா கண்டித்தார். இதனால் மனமுடைந்த சீனுவாசன தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் சோலைநகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






