என் மலர்
புதுச்சேரி

மாணவர்கள் உடன் தமிழிசை சௌந்தரராஜன் பேசிய காட்சி.
பள்ளி மாணவர்களுடன்-கலந்துரையாடிய கவர்னர் தமிழிசை
- புதுவை கவர்னர் தமிழிசை மணவெளி தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியை பார்வையிட்டார்.
- அப்போது பரதநாட்டியம், சிலம்பாட்டம் நிகழ்ச்சி களோடு மாணவ -மாணவிகள் கவர்னரை வரவேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை மணவெளி தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியை பார்வையிட்டார்.
அப்போது பரதநாட்டியம், சிலம்பாட்டம் நிகழ்ச்சி களோடு மாணவ -மாணவிகள் கவர்னரை வரவேற்றனர். மாணவ- மாணவிகளின் கலைத்- திறமைகளை கவர்னர் பாராட்டினார். பின்னர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான எம்.ஐ.டி கோப்பை கபடி விளையாட்டு போட்டியைப் பார்வை யிட்டு மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
நூலகத்தையும், அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் கவர்னர் பார்வையிட்டார். பின்னர் மாணவிகளோடு கலந்துரையாடினார். அப்போது புத்தகத்திலிருந்து புதிர் கேள்விகளை கேட்டார்.
பின்னர், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும், பாடப் புத்தகங்கள் இல்லாமல் பொதுஅறிவு புத்தகங்களையும் தினமும் படிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
ஏழுமலை என்ற மாணவனின் அறிவியல் கண்டுபிடிப்பான 'பார்வையற்றோர் கைத்தடி' செயல்முறையை கண்டு பாராட்டினார். அதற்கு 'விஷன் ஸ்டிக்' என்று பெயர் வைக்கலாம் என்று கூறினார். மேலும், மாணவர்களின் கைவினை திறமைகளை ஆசிரியர்கள் எடுத்துக்கூறினர். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கரன் எம்.எல்.ஏ., மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.