என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரெயில்வே ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்ட டேமின்-பரத்குமார்.

    ரெயில்வே ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

    • புதிய பஸ் நிலையம் அருகே ரெயில்வே ஊழியரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர் களை போலீசார் கைது செய்தனர்.
    • நேற்று முன் தினம் இரவு இவரும் தன்னுடன் பணிபுரியும் சரண்ராஜ் என்பவரும் விழுப்புரத்தில் பணி முடிந்து புதுவை புதிய பஸ் நிலையம் வந்தனர்.

    புதுச்சேரி:

    புதிய பஸ் நிலையம் அருகே ரெயில்வே ஊழியரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர் களை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை சோலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 58). இவர் தென்னக ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு இவரும் தன்னுடன் பணிபுரியும் சரண்ராஜ் என்பவரும் விழுப்புரத்தில் பணி முடிந்து புதுவை புதிய பஸ் நிலையம் வந்தனர். சரண்ராஜ் மாஸ் ஓட்டல் பின்புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். ஸ்ரீதர் சுப்பையா நகர் முதல் தெருவில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் திடீரென ஸ்ரீதரிட மிருந்து செல்போனை பறித்து கொண்டு அங்கு ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபருடன் ஏறிக்கொண்டு மின்னல் வேகத்தில் இருட்டான பகுதி வழியே தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து செல் போனை பறிகொடுத்த ஸ்ரீதர் இதுபற்றி உருளையன் பேட்டை போலீசில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களின் வாகன பதிவு எண் ஆதாரத்தோடு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு ஆய்வு செய்தனர். அப்போது ரெயில்வே ஊழியரிடம் செல்போனை பறித்து சென்றவர்களின் அடையாளம் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் நெல்லித்தோப்பு கஸ்தூரி பாய் நகரை சேர்ந்த டேமின் (வயது 22). மற்றும் உருளையன் பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த பரத் என்ற பரத் குமார் (20) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பரத் குமார் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×