என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பள்ளி நிறுவனருக்கு விருது
    X

    கூடப்பாக்கம் ஜவகர் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் ராம. சிவராஜனுக்கு கல்வி சக்கரவர்த்தி விருதினை சிவா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    பள்ளி நிறுவனருக்கு விருது

    • புதுவை வேதபுரம் பைன் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.எஸ்.ஆர். அறக்கட்டளை சார்பில் சிறந்த கல்விச்சக்ரவர்த்தி விருது வழங்கப்பட்டது
    • கல்வி சக்கரவர்த்தி விருதை சிவராஜனுக்கு வழங்கி கவுரவித்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரை அடுத்த கூடப்பாக்கம் ஜவகர் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் ராம.சிவராஜன் கடந்த 40 ஆண்டுகளாக கிராமப்பகுதியில் கல்விப்பணியாற்றி வருவதைப்பாராட்டும் வகையில் புதுவை வேதபுரம் பைன் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.எஸ்.ஆர். அறக்கட்டளை சார்பில் சிறந்த கல்விச்சக்ரவர்த்தி விருது வழங்கப்பட்டது.

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ கலந்து கொண்டு கல்வி சக்கரவர்த்தி விருதை சிவராஜனுக்கு வழங்கி கவுரவித்தார். வேதபுரம் பைன் ஆர்ட்ஸ் அமைப்பாளர் தங்கராஜ், புதுவை தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தனி அதிகாரி திருவரசன், முனிசாமி, அருள்ஜோதி, கலைமணி ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.

    Next Story
    ×