என் மலர்
புதுச்சேரி

புதுவை மாநிலம் ஏனாமில் மழை பெய்யாமலேயே வெள்ளப்பெருக்கு- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- 14 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
- தற்போது பொதுப் பணித்துறையினரின் தொடர் கண்காணிப்பில் ஏனாம் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் ஒரு பிராந்தியமான ஏனாம் பகுதி கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
கோதாவரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏனாம் பிராந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனாம் பிராந்தியத்தில் அனைத்து தாழ்வான பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏனாமில் மழை பெய்யாமலேயே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையை மீறி வெள்ளம் ஊருக்குள் நுழைந்துள்ளது.
அங்கு 14 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். படகுகள் கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்களை போலீசார் படகுகள் மூலம் அனுப்பிவைத்தனர்.
வெள்ளப்பெருக்கு 4-வது நாளாக குறையாத நிலையில் உள்ளது. இதனால் ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரில் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர்.
தற்போது பொதுப் பணித்துறையினரின் தொடர் கண்காணிப்பில் ஏனாம் உள்ளது. பாதுகாப்பிற்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தொடர் வெள்ள பெருக்கு காரணமாக ஏனாம் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.






