என் மலர்
புதுச்சேரி
- புதுவையில் இயங்கும் அதேகொம் பின்னகம் சார்பில் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சமூக குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் சட்ட பயிற்சி முகாமை நடத்தியது.
- பயிற்சி முகாமுக்கு அதேகொம் பின்னக தொடர்பியல் மேலாளர் நன்மதி வரவேற்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவையில் இயங்கும் அதேகொம் பின்னகம் சார்பில் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சமூக குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் சட்ட பயிற்சி முகாமை நடத்தியது. பயிற்சி முகாமுக்கு அதேகொம் பின்னக தொடர்பியல் மேலாளர் நன்மதி வரவேற்புரையாற்றினார். நிர்வாக அறங்காவலர் லலிதாம்பாள் தொடக்கவுரையாற்றினார்.
பயிற்சி முகாமை மகளிர் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் அமுதா தொடங்கி வைத்தார். புதுவை அரசு செயலாளர் உதயகுமார் சிறப்புரையாற்றினார். சென்னை ஐகோர்ட்டு வக்கீல் மீனாட்சி, புதுவை வக்கீல் சீனுபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியை திட்ட மேலாளர் ஜெயபெருமாள் தொகுத்து வழங்கினார். முடிவில் குடும்ப ஆலோசகர் பத்மாவதி நன்றி கூறினார்.
- திருக்கனூர் அருகே முதியவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
- திருமணம் செய்து கொள்ளாத இவர் தனது அண்ணன் மகன் சிவசந்திரன் பராமரிப்பில் இருந்து வந்தார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே முதியவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அங்காளன் (வயது68). திருமணம் செய்து கொள்ளாத இவர் தனது அண்ணன் மகன் சிவசந்திரன் பராமரிப்பில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அங்காளன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது அண்ணன் மகன் சிவசந்திரன் அங்குள்ள சாராயக்கடை அருகே சென்று தேடி பார்த்தார். அப்போது அங்கு அங்காளன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்ற போது அங்காளன் இறந்து போனார்.
அங்களானுக்கு அடிக்கடி வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபோல் வலிப்பு நோய் ஏற்பட்டு அங்காளன் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது அண்ணன் மகன் சிவசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), இந்திய இளைஞர்கள் ஒற்றுமை அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- மாணவ-மாணவிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள், திறன் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கி தருவதாகும் .
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லூரி), இந்திய இளைஞர்கள் ஒற்றுமை அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொதுவான நோக்கம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவ-மாணவிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள், திறன் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கி தருவதாகும் .
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாரன், மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். வேலை வாய்ப்பு துறை அதிகாரி பேராசிரியர் ஜெயகுமார், துறை பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.ஐ.டி கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும் யூத் யுனைடெட் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் தேசிய பொதுச்செயலர் விமல் தமிழக மாநில செயலாளர் சிரீஷ், சவுத் இந்தியா எஜுகேஷன் ஒருங்கிணைப்பாளர் சுஷ்மா ஆகியோர் ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பா
- படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனை சக மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையை தரமாக்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் காமராஜர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் நேருநகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). காரைக்காலில் உள்ள ரேசன்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மாலதி. இவர்களது 2-வது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் பாலமணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு, கலைநிகழ்ச்சியில் ஆர்வம் உள்ள துடிப்பானவராகவும் இருந்தார்.
தற்போது பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற உள்ளது. இதற்காக ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஒத்திகை நிகழ்ச்சியில் பாலமணிகண்டன் கலந்து கொண்டுவிட்டு மதியம் வீட்டுக்கு சென்றார். அப்போது தனது தாய் மாலதியிடம் பாலமணிகண்டன் எனக்கு பள்ளியில் குளிர்பானம் கொடுத்து அனுப்பியது யார் என கேட்டார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே பாலமணிகண்டன் வாந்தி எடுத்து திடீரென மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த தாய் மாலதி கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனடியாக மாணவன் பாலமணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் இன்று காலை இறந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேரடியாக பாலமணிகண்டன் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. பாலமணிகண்டனுடன் வகுப்பில் மாணவி அருள்மேரி என்பவர் படித்து வருகிறார். இவருக்கும் பாலமணிகண்டனுக்கும் இடையே படிப்பில் கடும் போட்டி நிலவி உள்ளது. இந்த விபரத்தை அருள்மேரி தனது தாய் சகாயமேரி விக்டோரியாவிடம் தெரிவித்தார். இவர் காரைக்கால் வேட்டைக்காரன் தெருவில் வசித்து வருகிறார்.
மகள் தன்னிடம் தெரிவித்ததை சகாயமேரி விக்டோரியா ஆத்திரம் அடைந்தார். எனவே மாணவன் பாலமணிகண்டனை பழி தீர்க்க திட்டம்போட்டார். அதன்படி குளிர்பானத்தில் விஷம் கலந்து சகாயமேரி விக்டோரியா கலைநிகழ்ச்சி ஒத்திகை நடக்கும் பள்ளிக்கு சென்று விஷம் கலந்த குளிர்பானத்தை பள்ளி காவலாளி தேவதாஸ் என்பவரிடம் மாணவன் பாலமணிகண்டனின் அவனது பெற்றோர் கொடுத்ததாக கொடுக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார்.
இந்த விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவன் பாலமணிகண்டன் குடித்ததால் இறந்துள்ளார். மேற்கண்டவை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிந்து சகாயராணி விக்டோரியாவை கைது செய்தனர். இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஒன்று திரண்டனர். அவர்கள் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியை சூறையாடினர்.
கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையை தரமாக்க வேண்டும் என்று கூறி காமராஜர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரசபடுத்தினர்.
படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனை சக மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புதுவை உப்பளம் தொகுதி நேதாஜி நகர் 1-ல் அமைந்துள்ள கெங்கை முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு நிதி.
- இந்து சமய அறநிலையத் துறை மூலமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி யிடம் ரூ.10 லட்சம் காசோலையை பெற்றுக் கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதி நேதாஜி நகர் 1-ல் அமைந்துள்ள கெங்கை முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக, இந்து சமய அறநிலையத் துறை மூலமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி யிடம் ரூ.10 லட்சம் காசோலையை பெற்றுக் கொண்டார்.
பின்னர் அந்த காசோலையை கோவில் அறங்காவல் குழுவினரிடம் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.
இதில் தலைவர் நாகமணி, துணை தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் தினகர
ன், பொருளாளர் ஜெயபிரகாசம், செயற்குழு உறுப்பினர் மதிவாணன், பிரான்லி சங்கர், சுரேஷ் ஸ்டீபன், பார்த்திபன், சுரேந்திரன், தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, தி.மு.க. பிரமுகர் அஷ்ரப், கிளைச் செயலாளர் செல்வம் மற்றும் முரளி, மணி, லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் 3-வது குறுக்கு தெரு பகுதியில் பாதாள சாக்கடை பகுதியில் பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வழிகிறது என அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ., கென்னடியிடம் புகார் தெரிவித்தனர்.
- தொகுதி முழுவதும் பாதாள சாக்கடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் 3-வது குறுக்கு தெரு பகுதியில் பாதாள சாக்கடை பகுதியில் பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வழிகிறது என அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ., கென்னடியிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஊர் பிரமுகர்களுடன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர் ஆகியோரை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சந்தித்து பேசினார். தொகுதி முழுவதும் பாதாள சாக்கடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது தொகுதி அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி தலைவர் ஆரோக்கிய ராஜ், இருதயராஜ், மற்றும் வம்பா கீரப்பாளையம் பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- காலாப்பட்டு முருகன் கோயில் குளம் எதிரே 21 அடி உயர விநாயகர் பூஜிக்கப்பட்டு 2 நாட்களாக அர்ச்சனை, ஆராதனை ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தது.
- இந்த ஊர்வலத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கொடியாசைத்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
காலாப்பட்டு முருகன் கோயில் குளம் எதிரே 21 அடி உயர விநாயகர் பூஜிக்கப்பட்டு 2 நாட்களாக அர்ச்சனை, ஆராதனை ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தது.
மேலும் பெண்கள் பங்கேற்ற கோலப்போட்டி, குத்துவிளக்கு பூஜை ஆகியவையும் நடைபெற்றது. 3-ம் நாள் நிகழ்ச்சியையொட்டி தமிழக மற்றும் புதுவையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காலாப்பட்டு பகுதியில் ஒருங்கிணைத்து ஊர்வலமாக சென்று பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள கடல் பகுதியில் கரைக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கொடியாசைத்து தொடங்கி வைத்தார். இதில்
எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், அசோக் பாபு, இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் முருகையன், பா.ஜனதா நிர்வாகி லட்சுமிநாராயணன், புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் சாந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவை தலைவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் குப்பன், பேரவை கவுரவத் தலைவர் மணி, பொதுச் செயலாளர் கருணாகரன்,
பா.ஜனதா முன்னாள் துணைத்தலைவர் பரந்தாமன், முன்னாள் மாநில செயலாளர் முருகன், பேரவை துணைத் தலைவர் உத்தராடம், முன்னாள் மாநில தலைவர் வக்கீல் திருமுருகன், மத்திய அரசு வக்கீல் ராஜசேகர், ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் கோதண்டம், சரவணன், பி.எம்.எஸ், மாநிலத் தலைவர் ஆசைதம்பி, ஒருங்கிணைப்பு பேரவை துணைத் தலைவர் சக்கரவர்த்தி, பா.ஜனதா விழுப்புரம் மாவட்ட விவசாய தலைவர் குட்டியாண்டி, பசு பாதுகாப்பு தலைவர் கிருஷ்ணகாந்தன், பா.ஜனதா முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் தேவேந்திரகுமார், தனஞ்செயன், முன்னாள் மாவட்ட தலைவர் தசராமன் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கமலக்கண்ணன், ரமேஷ், மணிவண்ணன், கார்த்தி, சிவா, அருள்ஜோதி தட்சிணாமூர்த்தி, விக்னேஷ், அரசு ராகுல், தெய்வசிகாமணி, நடராஜன், பாலாஜி, குணசீலன், பாரத வேல்முருகன், கணபதி, தயா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொருளாளர் கண்ணன் செய்திருந்தார்.
- காதல் திருமணம் செய்த மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.
புதுச்சேரி:
காதல் திருமணம் செய்த மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாணரப்பேட்டை ராஜ ராஜன் வீதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது27). இவரது மனைவி சுந்தரபிரியா. இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் செய்த பின்னர் தினேஷ் மது பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அப்போதெல்லாம் கணவரிடம் கோபித்து கொண்டு சுந்தரபிரியா தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.
பின்னர் சமாதான மடைந்து கணவர் வீட்டுக்கு வந்து விடுவார். அதுபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தினேஷ் மது குடித்து விட்டு சுந்தரபிரியாவிடம் தகராறு செய்ததால் கணவரிடம் கோபித்துக்கொண்டு சுந்தரபிரியா தாய் வீட்டில் இருந்து வந்தார். தினேஷ் பலமுறை அழைத்தும் சுந்தரபிரியா குடும்பம் நடத்த வரவில்லை என கூறப்படுகிறது.
சுந்தரபிரியாவுக்கு தினேஷ் போன் செய்தார். ஆனால் கணவர் பிரச்சினை செய்வார் என கருதி சுந்தரபிரியா போனை எடுத்து பேசவில்லை.
இதனால் மனம் வருத்தமடைந்த தினேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இவர் வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். உடனே அவரது சகோதரர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தூக்கில் இருந்து தினேசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி சுந்தரபிரியா கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மதகடிப்பட்டில் தனியார் பஸ் மோதியதில் மாடு இறந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- மதகடிப்பட்டு-திருக்கனூர் சாலையை மாடுகள் கடந்து சென்ற போது அந்த வழியாக அதிவேமாக வந்த தனியார் பஸ் திடீரென ஒரு மாடு மீது மோதியது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் தனியார் பஸ் மோதியதில் மாடு இறந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருபுவனை அருகே கலித்தீர்த்தாள் குப்பம்-திருக்கனூர் சாலையில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி மலர். இவர் தனது வீட்டில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
மலர் மாட்டு கொட்டகையில் இருந்து பசு மாடுகளை மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு ஓட்டி சென்றார். மதகடிப்பட்டு-திருக்கனூர் சாலையை மாடுகள் கடந்து சென்ற போது அந்த வழியாக அதிவேமாக வந்த தனியார் பஸ் திடீரென ஒரு மாடு மீது மோதியது. இதில் அந்த துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து போனது.
இதனை பார்த்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். உடனே இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆவேசமடைந்து ஒன்று திரண்டனர். அடிக்கடி இப்பகுதியில் இதுபோல் தனியார் பஸ்களால் விபத்து ஏற்படுவதாகவும், இதனால் பல உயிரிழப்பு நடப்பதாகவும், இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்ய வேண்டும், இறந்த மாட்டின் உரிமையா ளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், மாட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
- தமிழக, கர்நாடக எல்லையில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
தமிழக, கர்நாடக எல்லையில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி அணைகளில் இருந்தும் தென்பெண்ணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து சொர்ணவூர் அணைக்கட்டுக்கு தற்போது 4000 கன அடி நீர் வருகிறது. அனைத்து நீரும் கடலில் கலக்கிறது. ஆனாலும், தென்பெண்ணை கரையோர மக்களுக்கு தொடர்ந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கால் சித்தேரி மற்றும் கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கி இருந்த நிலையில் தற்போது நீர் வடிந்து வருகிறது. மேலும் கொமந்ததான் மேடு தரைப்பாலத்தில் பாலத்தை இணைக்கக் கூடிய மண் சாலை அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. தண்ணீர் அளவு குறைந்தால் தரை பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியுமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.
தென்பெண்ணை சொர்ணாவூர் அணைக்கட்டிலிருந்து பங்காரு வாய்க்கால் மூலம் பாகூர் ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 3 மீட்டர் உயரமுள்ள பாகூர் ஏரி தற்போது 2.10 மீட்டருக்கு நிரம்பி உள்ளது. மேலும் சில நாட்களில் பாகூர் ஏரி நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்திய தேர்தல் ஆணைய விதிப்படி இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
- புதுவை மாநில தலைவராக மீண்டும் பாகூர் ஞானமூர்த்தி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.
புதுச்சேரி:
இந்திய தேர்தல் ஆணைய விதிப்படி இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
புதுவை மாநில தலைவராக மீண்டும் பாகூர் ஞானமூர்த்தி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து புதுவை மாநில துணை தலைவராக கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளராக கோபிநாத், இணை பொதுச் செயலாளராக உத்திர–லிங்கம், பொருளாளராக ராஜ்குமார், செயல்தலை–வராக வக்கீல் ஆனந்தன், தலைமைநிலைய செயலாளராக ராஜகுரு, மாநில செயற்குழு உறுப்பினராக ராஜா ஆகியோர் பொறுப்பேற்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அணைத்து மாநில நிர்வாகிகளும், வருகிற
21-ந் தேதி தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலேவை டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.
- புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு முதலியார்பேட்டை தொகுதி நயினார் மண்டபம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா பொதுச்செயலாளர் விஜயகுமார் செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு முதலியார்பேட்டை தொகுதி நயினார் மண்டபம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுகோல், பொதுமக்களுக்கு வேட்டி, புடவைகள் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா பொதுச்செயலாளர் விஜயகுமார் செய்திருந்தார். தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி, தொகுதி தலைவர் இன்பசேகர், மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றி செல்வம், வணிக பிரிவு தலைவர் சத்யராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், திருச்சந்திரன், மாநில இளைஞரணி துணைத்தலைவர் விக்ரமாதித்தன், மூத்த நிர்வாகிகள் பழனிவேல், பத்மநாபன், பச்சையப்பன், தொகுதி துணைத்தலைவர்கள் கனகராஜ், மீனாட்சிசுந்தரம், கலியபெருமாள், செயலா–ளர் கோதை, ஓ.பி.சி. அணியின் மாவட்ட தலைவி லட்சுமி, துணை தலைவி மஞ்சுளா, இளைஞரணி நிர்வாகி ராஜ்மோகன், கிளை நிர்வாகிகள் சுதாகர், சரவணன், முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






