என் மலர்
புதுச்சேரி
- இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
- 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் கைக்கடிகாரம் வழங்கி கவுரவித்தார்.
புதுச்சேரி:
புதுவை இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு கொறடாவும் இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி.ஆறுமுகம் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் கைக்கடிகாரம் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 1990-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
- நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளியில் 1990-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய அரசு பள்ளி ஆசிரியருமான மோகன் ராஜிக்கு டாக்டர் பட்டம் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை மரக்கன்று வழங்கினார். பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் பள்ளி மாணவர்கள் செய்திருந்தனர்.
- நாடு முழுவதும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
- கவர்னர் தமிழிசை நல்லாசிரியர்கள் 20 பேருக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
புதுவை அரசு சார்பில் கருவடிகுப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் ஆசிரியர் திருநாள் விழா நடந்தது.கலெக்டர் வல்லவன் வரவேற்றார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய். ஜெ. சரவணன் குமார், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணிஓய்வு பெற்ற ஆசிரியர்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பாராட்டி கவுரவித்தார்.
கவர்னர் தமிழிசை நல்லாசிரியர்கள் 20 பேருக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – தலைமை ஆசிரியர் விஜயராகவன், ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, சோமசுந்தரம், சுரேஷ் ஆகியோருக்கும், முதல்வரின் சிறப்பு விருது – ஆசிரியர்கள் செல்வக்குமரன், கவிதா, லட்சுமி, தலைமை ஆசிரியை அபரணாதேவி, ஆசிரியை சாச்சி, தொழில்நுட்ப ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோருக்கும், கல்வி அமைச்சரின் வட்டார விருது, உடற்கல்வி ஆசிரியர் சுப்ரமணியன், விரிவுரையாளர் மதிவாணன், ஆசிரியர்கள் கணேசன், முரளீதரன், விரிவுரையாளர் ராஜசேகரன், ஆசிரியர்கள் பிரபாகரன், சுரேஷ்குமார், வாசுகி, விரிவுரையாளர் அஜித்குமார், தலைமை ஆசிரியர் குதுல வெங்க–டேஸ்வர ராவ் ஆகியோ–ருக்கும் வழங்கப் பட்டது.
விருதுபெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை யாற்றினர். பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு நன்றி கூறினார்.
- உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
- பள்ளியில் சேவையாற்றி வரும் ஆசிரியர்களை பெருமை சேர்க்கும் விதமாக சால்வை அணிவித்து ஆசிரியர்களின் சேவையை பாராட்டி பேசினார்.
புதுச்சேரி, செப்.5-
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. நேரு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பள்ளியில் சேவையாற்றி வரும் ஆசிரியர்களை பெருமை சேர்க்கும் விதமாக சால்வை அணிவித்து ஆசிரியர்களின் சேவையை பாராட்டி பேசினார். '
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை வேலம்மாள், ஆசிரியர்கள் மாணிக்கவாசகம், ஜோஸ்வின்நிர்மலா, முத்துசெல்வம், பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் குப்புசாமி, ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் ராமலிங்கம், சிவராஜ், வேலாயுதம், கைலாஷ், சாமிநாதன், பழனி, தமிழ், ராஜா, தமிழ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் ஆத்மா திட்டத்தின் வாயிலாக கரையாம்புத்தூர் மற்றும் அதற்குட்பட்ட கடுவனூர் வருவாய் கிராமத்தில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- கால்நடை மருத்துவர் செல்லமுத்து கால்நடை–களுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை அளித்து, பால் உற்பத்தி குறித்து ஆலோசனை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் ஆத்மா திட்டத்தின் வாயிலாக கரையாம்புத்தூர் மற்றும் அதற்குட்பட்ட கடுவனூர் வருவாய் கிராமத்தில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு வேளாண் அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். முன்னதாக துணை வேளாண் அலுவலர் கங்காதுரை கால்நடை விவசாயிகளை வரவேற்றார்.
கால்நடை மருத்துவர் செல்லமுத்து கால்நடை–களுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை அளித்து, பால் உற்பத்தி குறித்து ஆலோசனை வழங்கினார்.முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
முகாமில் விவசாயி–களுக்கு கறவை மாடுகளுக்கான தாது உப்பு கலவை இலவசமாக வழங்கப்பட்டது விழாவின் ஏற்பாடுகளை செயல் விளக்க உதவியாளர் பத்மநாபன் செய்திருந்தார். ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
- தேங்காய்திட்டில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சரவணன் புதுவை கிருஷ்ணாநகரில் பாலா என்பவரிடம் பித்தளை பாத்திரங்களுக்கு பாலிஷ் போடும் வேலை செய்து வந்தார்.
புதுச்சேரி:
தேங்காய்திட்டில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை தேங்காய்திட்டு புதுநகர் மருதம் வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது42). இவருக்கு கோமதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
சரவணன் புதுவை கிருஷ்ணாநகரில் பாலா என்பவரிடம் பித்தளை பாத்திரங்களுக்கு பாலிஷ் போடும் வேலை செய்து வந்தார். கோமதி கோவிந்த சாலையில் சம்சா கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் அதனை அவரது மனைவி கோமதி கண்டிக்கும் போது சரவணன் அடிக்கடி கண்டாக்டர் தோட்டத்தில் அவரது தாயார் வீட்டில் தங்கி விடுவது வழக்கம். இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக சரவணன் மனைவியிடம் கோபித்து கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம் போல் கோமதி சம்சா கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் படுக்கை அறையில் கணவர் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி கோமதி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ள கவர்னர் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று புதுவை கிழக்கு மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
- அரசுக்கும் முதல்- அமைச்சருக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டியது கவர்னரின் தலையாய கடமையாகும்.
புதுச்சேரி:
தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ள கவர்னர் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று புதுவை கிழக்கு மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவனந்தபுரத்தில் தென் மாநில முதல்-அமைச்சர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா என அந்தந்த மாநில முதல்-அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுப்பினராக இருந்தும் அவர் கலந்து கொள்ளாமல் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
யூனியன் பிரதேசமான கவர்னருக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அரசுக்கும் முதல்- அமைச்சருக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டியது கவர்னரின் தலையாய கடமையாகும். இதுபோன்ற கூட்டங்களில் மாநில அந்தஸ்து இல்லாத சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் மற்றும் சட்டமன்றம் இல்லாத அந்தமான், லட்சத்தீவுகளின் சார்பில் கவர்னர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ள லாம் என அனுமதிக்க ப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர், கவர்னர் கலந்து கொள்ள லாம் என விதி இருந்தும், சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் விதத்தில் கவர்னர் உரிய வாய்ப்பினை அளித்திருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சருக்கு உரிய உரிமையை நிலை நாட்டும் விதத்தில் கூட்டத்தில் கவர்னர் செல்வதை தவிர்த்து முதல்-அமைச்சரை கலந்து கொள்ள தெரிவித்திருக்கலாம்.
தமிழகத்தில் இருந்து புதுவைக்கு காவிரி தண்ணீர், விமான நிலையம் நில ஆர்ஜிதம், தமிழகத்தில் இருந்து காரைக்காலுக்கு மணல் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து கவர்னர் தமிழிசை பேசியுள்ளார். இதில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டிருந்தால் அவர் அண்டை மாநில முதல்-அமைச்சரிடம் நேரிடையாகவும் கலந்து பேசியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
யூனியன் பிரதேசமாக புதுவை இருந்தும் மாநில அந்தஸ்து உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு நிதியுதவி 60-40 ஆக உள்ளதை யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசின் ஊக்குவிப்பு நிதியாக நமக்கு 100 சதவீதமும் வழங்க வேண்டும்.
அதையும் நீங்கள் வழங்கு வதில்லை என்பதையும், தான் பா.ஜனதாவின் ஆதரவில் கவர்னராக இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரிடையாக சுட்டிக்காட்டியுள்ளார். அவரது தைரியமான செயல் என்பது பாராட்டுக்குரியது ஆகும். சிறப்புமிக்க இதுபோன்ற கூட்டங்களில் கவர்னர் கலந்து கொண்டது மற்றும் முதல் அமைச்சர் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்க இணைந்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
பேட்டியின் போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
- கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1977-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புலவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார்.
- மாணவர்கள் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொண்டனர்.
புதுச்சேரி:
பாகூர் அடுத்த சேலியமேடு அரசு தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
இதில் கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1977-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புலவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் கோவிந்தசாமி, அருணாச்சலம், கலிய–பெருமாள், சிவராஜ், சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பள்ளி துணை ஆய்வாளர் (வட்டம் 3) பக்கிரிசாமி கலந்து கொண்டார்.
முன்னாள் மாணவர்கள் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் அரசு பள்ளியில் படித்து அரசு ஊழியர்களாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இனி வரும் சந்ததிகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொண்ட–னர்,இதில் ஒவ்வொரு முன்னாள் மாணவ-மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் புதுவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விதத்திலும் புதுவை வளர்ச்சி பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரையில் விநாயகர் சிலை விஜர்சனத்தை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் புதுவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், புதுவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான 375 ஏக்கர் நிலத்தை பெறுவது தமிழக வளர்ச்சிக்கும் பலன்தரும் என விளக்கியுள்ளோம்.
பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விதத்திலும் புதுவை வளர்ச்சி பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
தென்மாநிலங்கள் கூட்டம் என்பது மிகப்பெரும் வாய்ப்பு. அனைத்து முதல்-அமைச்சர்கள், கவர்னர்கள் அதிகாரப்பூர்வமாக அழைக்கப் படுகின்றனர். இதில் கவர்னராக பங்கேற்று புதுவைக்காக பேசியுள்ளேன்.
கவர்னர் ஏன் சென்றார்? என கேட்பது சரியல்ல. புதுவை பற்றிய முழு தகவல்களை சேகரித்து 9 கோரிக்கைகளை வைத்துள்ளோம். கேரளா–வில் இருந்து நமக்கு தண்ணீர் கொடுக்க ஆயிரம் லிட்டருக்கு ரூ.28 வசூலிக்கின்றனர். கேரளாவில் உள்ளவர்க–ளுக்கு ரூ.4 வசூலிப்பதை விளக்கியுள்ளோம். இதை பரிசீலிப்பதாக கேரளா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காரைக்காலில் இருந்து மணல் எடுத்துவர தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என விளக்கியுள்ளோம். நிதி நிலையை மேம்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இதில் நேர்மறை விவாதங்களும் ஏற்பட்டது. தென்மாநில கவுன்சில் கூட்டத்தை ஆரோக்கியமான விவா–தங்களுக்கு வழிவகுத்த பிரதமர், உள்துறை மந்திரிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜிப்மரில் மருத்துவ மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஐதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகளும் விழாவில் பங்கேற்க ஜிப்மருக்கு வந்தனர்.
புதுச்சேரி, செப்.4-
ஜிப்மரில் மருத்துவ மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கலாச்சார விழாபுதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கலாச்சார விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் புதுவை வந்துள்ளனர்.
அதுபோல் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகளும் விழாவில் பங்கேற்க ஜிப்மருக்கு வந்தனர். கலாச்சார விழா முடிந்த பின்னர் அக்கல்லூரி மாணவி ஒருவர் ஜிப்மர் வளாகத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அலறல் சத்தம் போட்டார். ஆனால் இதனை அங்கிருந்த காவலாளிகளோ, ஜிப்மர் ஊழியர்களோ கண்டு கொள்ளவில்லை. இதனால் மீண்டும் அந்த வாலிபர்கள் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த மாணவி சக மாணவ-மாணவிகளிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் காட்டேரிக்குப்பம் அருகே தேத்தாம்பாக்கத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் ஒருவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. இதையடுத்து கண்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பணிமுடிந்து தனது உறவினர் சிவக்குமார் (வயது20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மாணவியிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் கண்ணன் மற்றும் அவரது உறவினர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் கண்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்ததான முகாம் இன்று வில்லியனூர் அன்னை கண் மருத்துவமனையில் நடைபெற்றது.
- முகாமை டாக்டர் சுகந்தி பிரபாaகரன் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தொண்டு அறக்கட்டளை சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்ததான முகாம் இன்று வில்லியனூர் அன்னை கண் மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாமை டாக்டர் சுகந்தி பிரபாaகரன் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் என்ஜினீயர் பிரபாகரன், தி.மு.க நிர்வாகிகள் மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன், சண்முகம், பால்பாண்டியன், ரமணன், ரபீக், சுப்பிரமணியன், மிலிட்டரி முருகன், மனோகர், மோகன், முருகேசன், ரகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநில கராத்தே போட்டிகள் வில்லியனூரில் நடைபெற்றது.
- பயிற்சி பள்ளியின் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில கராத்தே போட்டிகள் வில்லியனூரில் நடைபெற்றது.
போட்டிகளில் புதுவை ஜீ டோக்கு காய் கராத்தே பயிற்சி பள்ளியின் அங்கீகாரம் பெற்ற சிங்காரவேலர் கராத்தே பயிற்சி பள்ளியின் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா புதுவை சோலை நகர், இளைஞர் விடுதி நடைபெற்றது.
விழாவில், முத்தியால்பேட்டை தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிறுவனர் மதன்பாபு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஜீடோக்குகாய் கராத்தே பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் கராத்தே அழகப்பன்,மூத்த பயிற்சியாளர்கள் சென்சாய் குமரன், சென்சாய் ராமராஜா, சென்சாய் சமிதாகாந்தி, தி.மு.க. தொகுதி செயலாளர் சவுரிராஜன் முன்னாள் கவுன்சிலர் ரவி, மீனவர் அணி துணை அமைப்பாளர் தங்கராசு, பார்த்திபன், ஸ்ரீகாந்த், கார்த்திகேயன், குமரன், ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






