என் மலர்

  புதுச்சேரி

  புதுவைக்கு 9 கோரிக்கைகள் வைத்துள்ளோம்-கவர்னர் தமிழிசை தகவல்
  X

  கோப்பு படம்.

  புதுவைக்கு 9 கோரிக்கைகள் வைத்துள்ளோம்-கவர்னர் தமிழிசை தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் புதுவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விதத்திலும் புதுவை வளர்ச்சி பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

  புதுச்சேரி:

  புதுவை கடற்கரையில் விநாயகர் சிலை விஜர்சனத்தை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

  உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் புதுவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், புதுவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான 375 ஏக்கர் நிலத்தை பெறுவது தமிழக வளர்ச்சிக்கும் பலன்தரும் என விளக்கியுள்ளோம்.

  பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விதத்திலும் புதுவை வளர்ச்சி பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

  தென்மாநிலங்கள் கூட்டம் என்பது மிகப்பெரும் வாய்ப்பு. அனைத்து முதல்-அமைச்சர்கள், கவர்னர்கள் அதிகாரப்பூர்வமாக அழைக்கப் படுகின்றனர். இதில் கவர்னராக பங்கேற்று புதுவைக்காக பேசியுள்ளேன்.

  கவர்னர் ஏன் சென்றார்? என கேட்பது சரியல்ல. புதுவை பற்றிய முழு தகவல்களை சேகரித்து 9 கோரிக்கைகளை வைத்துள்ளோம். கேரளா–வில் இருந்து நமக்கு தண்ணீர் கொடுக்க ஆயிரம் லிட்டருக்கு ரூ.28 வசூலிக்கின்றனர். கேரளாவில் உள்ளவர்க–ளுக்கு ரூ.4 வசூலிப்பதை விளக்கியுள்ளோம். இதை பரிசீலிப்பதாக கேரளா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  காரைக்காலில் இருந்து மணல் எடுத்துவர தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என விளக்கியுள்ளோம். நிதி நிலையை மேம்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இதில் நேர்மறை விவாதங்களும் ஏற்பட்டது. தென்மாநில கவுன்சில் கூட்டத்தை ஆரோக்கியமான விவா–தங்களுக்கு வழிவகுத்த பிரதமர், உள்துறை மந்திரிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Next Story
  ×