என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
    X

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தி.மு.க. பிரமுகர் மதன் பாபு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த காட்சி.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

    • புதுவை மாநில கராத்தே போட்டிகள் வில்லியனூரில் நடைபெற்றது.
    • பயிற்சி பள்ளியின் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கராத்தே போட்டிகள் வில்லியனூரில் நடைபெற்றது.

    போட்டிகளில் புதுவை ஜீ டோக்கு காய் கராத்தே பயிற்சி பள்ளியின் அங்கீகாரம் பெற்ற சிங்காரவேலர் கராத்தே பயிற்சி பள்ளியின் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா புதுவை சோலை நகர், இளைஞர் விடுதி நடைபெற்றது.

    விழாவில், முத்தியால்பேட்டை தி.மு.க. பொதுமக்கள் சேவை மையம் நிறுவனர் மதன்பாபு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    ஜீடோக்குகாய் கராத்தே பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் கராத்தே அழகப்பன்,மூத்த பயிற்சியாளர்கள் சென்சாய் குமரன், சென்சாய் ராமராஜா, சென்சாய் சமிதாகாந்தி, தி.மு.க. தொகுதி செயலாளர் சவுரிராஜன் முன்னாள் கவுன்சிலர் ரவி, மீனவர் அணி துணை அமைப்பாளர் தங்கராசு, பார்த்திபன், ஸ்ரீகாந்த், கார்த்திகேயன், குமரன், ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×