என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சென்னை பாரதிய வித்யா பவனில் புதுவைத் தமிழ்ச் சங்க தலைவர் முத்து பவள விழா நிகழ்ச்சியில் 75 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வின் தமிழ் பணியை பாராட்டி இந்த ஆண்டிற்கான கலைத்தமிழ் விருதினை உலக தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி. சந்தோசம், டெல்லி தமிழ் சங்க தலைவர் முகுந்தன், ஆகியோர் வழங்கினர்.

    புதுச்சேரி:

    சென்னை பாரதிய வித்யா பவனில் புதுவைத் தமிழ்ச் சங்க தலைவர் முத்து பவள விழா நிகழ்ச்சியில் 75 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வின் தமிழ் பணியை பாராட்டி இந்த ஆண்டிற்கான கலைத்தமிழ் விருதினை உலக தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி. சந்தோசம், டெல்லி தமிழ் சங்க தலைவர் முகுந்தன், ஆகியோர் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் பக்ரைன் நாட்டின் தமிழ்ச்சங்க தலைவர் ஹரிஹரன், புதுவை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் சீனு மோகன் தாஸ், அறிவியல் அறிஞர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
    • 3 உயர் மின் விளக்கு கோபுரம் அமைப்பதற்கு புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 4 லட்சத்து 34 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி நடைபெற்று முடிந்து.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இதனையொட்டி சந்தை பகுதியில் காய்கறிகள் மற்றும் பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருக்கும் இங்கு செவ்வாய்க்கிழமை தாறும் அதிக அளவில் பொதுமக்கள் வந்து தங்கள் தேவைக்கான பொருட்களை வாங்கி செல்வர். வியாபாரம் இரவு 10 மணி வரை நடைபெறும்.

    ஆனால் சந்தை பகுதியில் போதுமான வெளிச்சமின்மை காரணமாக வியாபாரிகள் இரவு நேரங்களில் சிரமத்துடனே வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் முயற்சியின் மூலம் சந்தை பகுதியில் 3 உயர் மின் விளக்கு கோபுரம் அமைப்பதற்கு புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 4 லட்சத்து 34 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி நடைபெற்று முடிந்து. ெதாடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக

    வைத்திலிங்கம்

    எம்.பி. கலந்து கொண்டு உயர்மின் விளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் 

    • புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தது.
    • புதுவைக்கான பிரெஞ்சு தூதர் சாண்டேல் சாமுவேல்டேவிட் சட்டசபைக்கு வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டு வருவதா–கவும், அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தது.

    இதனால் பாதிக்கப்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் புதுவையில் உள்ள தூதரகத்தில் புகார் அளித்தனர். சமீபத்தில் முத்தியால்பேட்டையை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் தூதரகத்தில் புகார் அளித்ததுடன், பிரான்ஸ் அரசுக்கும் புகாரை அனுப்பினார்.

    இதையடுத்து புதுவைக்கான பிரெஞ்சு தூதர் சாண்டேல் சாமுவேல்டேவிட் சட்டசபைக்கு வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது, சமீபகாலமாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு புதுவை–யில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் நிலை உள்ளது.

    இதுகுறித்து புதுவை அரசு நடவடிக்கை எடுத்து பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கை வாழ புதுவை அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பிரெஞ்சு தூதர் வலியுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, பிரெஞ்சு குடியுரி–மை பெற்றவர்களுக்கும், அவர்களின் சொத்துக்க–ளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது பிரெஞ்சு நாட்டின் கவுன்சிலர் பிரதீபன்–பேன்சிவா உடனிருந்தார்.

    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியம் சாமி கோவில் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறையாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. தற்போது திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) காலை 10.15 மணிக்கு நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை, மங்கள வாத்தியம், புனித நீர் வழிபாடு நடந்தது. 5-ந் தேதி காலை வேள்வி பூஜை, இரவு 7 மணிக்கு முதல் கால வேள்வி, இரவு 9 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.

    தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. 8.40 மணிக்கு சற்குருவுக்கு 108 திரவியங்கள் மூலம் வழிபாடு நடத்தப்பட்டன. மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை சற்குருவிற்கு 108 திரவிய வழிபாடு நடந்தது. 9.45 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. 10.15 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது.

    கும்பாபிஷேகத்தில் புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி, சேலம் ஆர்.டி.ஓ.விஷ்ணுவர்தினி, கோவில் நிர்வாகி முத்துமாணிக்கராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மோட்டார் சைக்கிள் தடுப்பு கட்டையில் மோதிய தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலியானார்.
    • இவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

    புதுச்சேரி:

    மோட்டார் சைக்கிள் தடுப்பு கட்டையில் மோதிய தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலியானார்.

    புதுவை சாரம் வெங்கடேஸ்வராநகர் அவ்வை வீதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வானொலி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று பணியில் இருந்த தட்சணாமூர்த்தி டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் செஞ்சி சாலை வழியே சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க தட்சணாமூர்த்தி மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த தடுப்பு கட்டையில் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட தட்சணாமூர்த்தி தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தட்சணாமூர்த்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெல் ரகங்களின் பண்புகள் மற்றும் சாகுபடி செய்யும் முறைகள் பற்றிய விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • வேளாண் அறிவியல் நிலைய உளவியல் நிபுணர் முனைவர் ரவி பாரம்பரிய நெல் ரகங்களின் பண்புகள் மற்றும் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    புதுச்சேரி

    புதுவை அரசு வேளாண்துறை சார்பில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வில்லியனூர் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் மங்கலம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் பண்புகள் மற்றும் சாகுபடி செய்யும் முறைகள் பற்றிய விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வில்லியனூர் வேளாண் அலுவலர் உமாராணி தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய உளவியல் நிபுணர் முனைவர் ரவி பாரம்பரிய நெல் ரகங்களின் பண்புகள் மற்றும் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    பூச்சிகள் நிபுணர் முனைவர் விஜயகுமார் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் மங்களம் உருவையாறு, வில்லியனூர், கீழ் சாத்தமங்கலம், ஒதியம்பட்டு, மற்றும் திருக்காஞ்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

    • சாதனை சித்தர் சண்முகம் அடிகளார் சித்தர் கோட்டம் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் கலைமாமணி டாக்டர். கிருஷ்ணமூர்த்தி என்கிற வாசியோகி அருநோதயன் தலைமைதாங்கினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம்- கடலூர் ரோடு பைபாஸ் பேருந்து நிறுத்தம் சிக்னல் அருகில் அமைந்துள்ள சாதனை சித்தர் சண்முகம் அடிகளார் சித்தர் கோட்டம் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் கலைமாமணி டாக்டர். கிருஷ்ணமூர்த்தி என்கிற வாசியோகி அருநோதயன் தலைமைதாங்கினார்.

    அறங்காவலர் குழு நிர்வாகிகள் நல்லாசிரியர் சிவப்பிரகாசன், பொறியாளர் கருணாகரன் டாக்டர். வேலுநாராயணன் மற்றும் சித்தர் கோட்டம் கோவில் நிர்வாகிகள் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து அனைவரையும் வரவேற்றனர்.

    கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர்ரங்கசாமி கலந்து கொண்டு சாதனை சித்தர் சண்முக அடிகளாருக்கு பூஜைகள் செய்தார்.

    கும்பாபிஷேக ஹோமங்களை தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சபாநாயகர் ஏம்பலம்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி பா. ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளரும், சத்ரிய சேனா சேவகத்தின் பொதுச் செயலாளருமான வெற்றிச்செல்வம், கலாச்சாரப் பிரிவு மாநில அமைப்பாளர், சத்திரிய சேனா சேவகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர். ஜோதி செந்தில் கண்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கலந்து கொண்டு சாதனை சித்தர் சண்முகம் அடிகளாரை தரிசித்தனர்.

    • கூடப்பாக்கத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது
    • 50-க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்று விளையாடினர்

    புதுச்சேரி:

    புதுவை உள்துறை அமைச்சரும் பா.ஜனதா தேசிய குழு உறுப்பினருமான நமச்சிவாயம், ஊசுடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் பா.ஜனதா மாநில துணைத்தலைவருமான தீப்பாய்ந்தான் ஆகியோர் பிறந்த நாள் நாளை மறுநாள் (8-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் பிறந்தநாளையொட்டி புதுவை மாநில கபடி சங்க அனுமதியுடன் கூடப்பாக்கத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. 50-க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்று விளையாடின.

    முடிவில் கூடப்பாக்கம் நியூஆதம் அணி முதல் பரிசும், திருபுவனை வேலழகன் அணியினர் இரண்டாம் பரிசும், தொண்டமாநத்தம் கேஸ்மேடு அணியினர் மூன்றாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முதல் பரிசினை பா.ஜனதா மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார், இரண்டாம் பரிசு பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் அருணகிரி, மூன்றாம் பரிசினை டாக்டர் பிரதீப்குமார், நான்காம் பரிசினை கோனேரி செந்தமிழ்செல்வன் ஆகியோர் வழங்கினர். பரிசளிப்பு விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு வழங்கினார்.

    கபடி அணியினர் தீப்பாய்ந்தான் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் 350 பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எம்.சி மனோகரன், வாசு சேகர், மணிபாலன், செந்தில், மணிகண்டன், கூடப்பக்கம் கபடி சங்கத் தலைவர் மோகன், ராஜேஷ் கஜேந்திரன், சுதாகர், மனிஸ், லோகேஸ்வரன், கலைராஜ், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கிரீன்ஹவுஸ் டெக்டாக்ஸ் மற்றும் ஹாக் ஷாக் நிகழ்ச்சியில், அவர்கள் தயாரித்த மென்பொருள் திட்டத்தை காட்சிப்படுத்துகிறார்கள்.
    • தொழிற்நுட்பத் துறையின் வழிகாட்டிகளான சரவணன் மற்றும் பாலாஜி ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய அளவில் அல்கோ பாரத் பவுண்டே ஷன் நடத்திய கிரீன்ஹவுஸ் அல்கோ பாரத் ஹேக்கத்தான்-2022 போட்டியில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் தகவல் தொழிநுட்பத் துறை 2-ம் ஆண்டு மாணவர்கள் அச்சுதன், தேவதர்ஷினி, சுவேதா ஆம்ப்ரோஸ், லிக்கித்தா மற்றும் தனஸ்ரீ ஆகியோர் சமர்ப்பித்த மென்பொருள் திட்டம்

    தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 3 நாள் சிங்கப்பூர் பயணம் செல்ல வாய்ப்பை பெற்றுள்ளனர். சிங்கப்பூரில் தொடங்க இருக்கும் கிரீன்ஹவுஸ் டெக்டாக்ஸ் மற்றும் ஹாக் ஷாக் நிகழ்ச்சியில், அவர்கள் தயாரித்த மென்பொருள் திட்டத்தை காட்சிப்படுத்துகிறார்கள். இந்த வாய்ப்பை பெற்ற மாணவர்களை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி, தகவல் தொழிநுட்பத் துறைத்தலைவர் ராஜூ, தகவல் தொழிற்நுட்பத் துறையின் வழிகாட்டிகளான சரவணன் மற்றும் பாலாஜி ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.

    • பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • செஞ்சி வட்டம் சகாய மேரி தேவாலய பங்கு தந்தை பிரவின்குமார் தலைமை தாங்கி பேசினார்.

    புதுச்சேரி:

    பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. செஞ்சி வட்டம் சகாய மேரி தேவாலய

    பங்கு தந்தை பிரவின்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் குருமீத்சிங், அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்ட மேற் படிப்பு ஆராய்ச்சி க ல்லூரி முதல்வர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினர்.

    தொடர்ந்து தமிழாசிரியை ராசலட்சுமி சக்திவேல் எழுதிய மரபின் மழைத்துளிகள், நிகழ்வின் நிழல்கள் ஆகிய 2 நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நூலிற்கான தனித்தமிழ் பாவணர் விருது மற்றும் மர புப்பாமணி விருதுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர் கவுரவிக்கப்பட்டார்.

    மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் சார்பில் 2022-23-ம் கல்வியாண்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகையினைப்பள்ளி முதல்வரிடம் வழங்கினர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பிரடெரிக், மருத்துவ இயக்குனர் ஜீத்தா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா , ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராமன், முத்தானந்தம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
    • 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் கைக்கடிகாரம் வழங்கி கவுரவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு கொறடாவும் இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி.ஆறுமுகம் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    மேலும் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடத்தை பிடித்த மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் கைக்கடிகாரம் வழங்கி கவுரவித்தார்.

    தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1990-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளியில் 1990-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

    நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய அரசு பள்ளி ஆசிரியருமான மோகன் ராஜிக்கு டாக்டர் பட்டம் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை மரக்கன்று வழங்கினார். பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் பள்ளி மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×