என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
    • மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் கல்வியில் ஏற்பட்ட படிப்பு போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.

    மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து,சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான்.

    எனவே, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறைரீதியிலான் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படவேன்டும் என, காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    மேலும், புதுச்சேரி சபாநாயகர் செல்வம், காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாகதியாகராஜன், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட பலர், பாலமணிகண்டன் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், மாணவன் சிகிச்சை விசயத்தில் அலட்சியமாக செயல்பட்ட, டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும். காரைக்கால் அரசு மருத்துவமனையில் சம்பளம் வாங்கிகொண்டு, சர்வீஸ் பிளேஸ்மெண்ட் என்ற பெயரில், புதுச்சேரி மற்றும் பிற இடங்களில் பணிபுரிவோரை உடனடியாக மருத்துவமனைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழு, இன்று காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

    அதன்படி காரைக்கால் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, மாதா கோவில் வீதி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தது.

    இந்த போராட்டத்திற்கு, காரைக்கால் இந்துமுன்னணி, காரைக்கால், திருநள்ளாறு மற்றும் திரு.பட்டினம் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, மினிடெம்போ சங்கத்தினர், ஓட்டல்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • புதுவையில் தனித்தனி சம்பவத்தில் 2 பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • குமார் உப்பளத்தில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக வசந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் தனித்தனி சம்பவத்தில் 2 பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    புதுவை பிள்ளைத் தோட்டம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வசந்தா (வயது60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    குமார் உப்பளத்தில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக வசந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் முற்றிலுமாக குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வசந்தா தினமும் அவதியடைந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் காலை குமார் வழக்கம் போல் மளிகை கடைக்கு சென்று விட்டார். பின்னர் சாப்பிட வீட்டுக்கு வந்த போது மின் விசிறியில் வசந்தா துப்பட்டாவால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு குமார் அதிர்ச்சியடைந்தார். நோய் கொடுமையால் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் முகையூரை சேர்ந்தவர் பெரியநாயகம். இவரது மனைவி மரியஸ்டெல்லா(54). இவர்களது 2-வது மகன் ஜூலியஸ் நெல்லித்தோப்பு பெரியார்நகர் ஜாபர்பாய் தோட்டம் பகுதியில் வசித்து வருகிறார்.

    இதையடுத்து பெரியநாயகமும், மரியஸ்டெல்லாவும் கடந்த சில ஆண்டுகளாக ஜூலியஸ் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். பெரியநாயகம் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த மரியஸ்டெல்லா மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் வீட்டின் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்கு போட்டு இறந்து போனார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை நகர பகுதியில் ஏற்படும் மின்தடை பற்றி நான் பலமுறை தங்கள் துறைக்கு கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை தெரிவித்தும் இதற்கு தீர்வு இல்லாத நிலை நீடித்து வருகிறது.
    • குறிப்பாக ஒரு மணி நேரம் மழை பெய்தால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு கொசு கடிக்கு ஆளாகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் நேரு எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை நகர பகுதியில் ஏற்படும் மின்தடை பற்றி நான் பலமுறை தங்கள் துறைக்கு கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை தெரிவித்தும் இதற்கு தீர்வு இல்லாத நிலை நீடித்து வருகிறது. ஆனால் மின்சார கட்டணம் மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    நகரின் மத்தியில் அமைந்திருக்கும் உருளை யன்பேட்டை தொகுதியில் போதுமான மின்கட்ட மைப்பை ஏற்படுத்தாததால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    குறிப்பாக ஒரு மணி நேரம் மழை பெய்தால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு கொசு கடிக்கு ஆளாகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.

    அதுவும் இரவு நேரத்தில் மின்தடை அதிகளவில் ஏற்படுவதால் மின்விசிறி பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இதனால் கொசு கடிக்கு ஆளாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது தங்கள் துறையில் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிகிறது. இது நீடித்தால் பொதுமக்கள் கொந்த ளிக்கும் நிலை ஏற்படும். ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு நுகர்வோர்க்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்.

    அப்படியில்லை யென்றால் பாதிப்புக்கு ள்ளாகி வரும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    • திருபுவனை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்து தலைமறைவாகி விட்ட நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • ஏலச்சீட்டில் பணம் கட்டியவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்து தலைமறைவாகி விட்ட நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு கோகுலம் நகரை சேர்ந்தவர் முகமது இம்தியாஸ் (வயது27). இவர் மதகடிபட்டில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் கபில் என்பவரும் அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த குமார் (60) என்பவரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.

    இதற்கிடையே குமார் ஏலச்சீட்டில் பணம் கட்டியவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் வசித்த வீட்டை விற்று விட்டு சமீப காலமாக மதகடிப்பட்டு பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.

    சுமார் ரூ.20லட்சம் வரை குமார் ஏலச்சீட்டு பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் திடீரென வாடகை வீட்டையும் காலி செய்து விட்டு குமார் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து முகமது இம்தியாஸ் திருபுவனை போலீஸ் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குமாரை தேடி வருகிறார்கள்.

    • சென்னையில் உள்ள தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழாவில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்க–ளுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்படுகிறது.
    • தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் விருது வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    சென்னையில் உள்ள தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழாவில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்க–ளுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில் புதுவை தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பாரிவள்ள–லுக்கு ஆசிரியர் செம்மல் விருது வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் விருது வழங்கி பாராட்டினார். பேராசியர் பாரிவள்ளல், கடந்த 30 ஆண்டுகளாக கல்விப் பணியில் உள்ளார். 25-க்கும் மேற்பட்ட கருத்தர ங்குகளில் ஆய்வுரை சமர்பித்துள்ளார். அவரது கல்வி சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    • புதுவை அரசின் பொதுப்பணித்துறையால் சமீபத்தில் ரூ.பல கோடியில் செப்பனிடப்பட்ட பல சாலைகள் மீண்டும் பழுதடைந்து வருகின்றன.
    • புதுவை-கடலூர் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. தவளக்குப்பத்தில் இருந்து கன்னியக் கோயில் வரை உள்ள சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் பொதுப்பணித்துறையால் சமீபத்தில் ரூ.பல கோடியில் செப்பனிடப்பட்ட பல சாலைகள் மீண்டும் பழுதடைந்து வருகின்றன.

    புதுவை-கடலூர் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. தவளக்குப்பத்தில் இருந்து கன்னியக் கோயில் வரை உள்ள சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

    சாலையின் பல இடங்களில் சிறிய, பெரிய பள்ளங்கள் உருவாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதைப்பற்றி அமைச்சர்களோ, அதிகாரி–களோ கவலைப்படாமல் உள்ளனர். 5 ஆண்டுக்கு தாங்க வேண்டிய 2 மாநிலங்களைஇணைக்கும் சாலை, 5 மாதங்களில் பழுதடைய காரணம் குறித்து கவர்னர் விளக்க வேண்டும்.

    தரமற்ற பொருட்களால் சாலை அமைத்ததே இதற்கு காரணம். வரி பணத்தில் உருவாக்கப்படும் சாலை மக்களுக்கு உபயோகம் உள்ளதாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் உயிரை காவு கொள்ளக் கூடியதாக இருக்கக் கூடாது.

    சாலை போடும் பணியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை, சாலை தரமாகத்தான் போடப்பட்டது. சட்டப்படி சாலை அமைக்கப்பட்டது என முதல்-அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் மக்களுக்கு விளக்கம் அளிப்பார்களா?

    சேதமடைந்த சாலை–களின் ஒப்பந்ததாரரை தகுதி நீக்கம் செய்யவும், பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்யவும் அரசு முன்வந்தால்தான் எதிர்காலத்தில் தரமான சாலைகள் அமைக்கப்படும். புதுவை அரசு இவ்விஷயத்தில் உண்மையைக் கண்டறிய சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை- நாகப்பட்டி–னம் 4 வழி சாலை அமைக்கும் பணிக்காக சாலையின் இரு புறமும் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், அகற்றப்பட்டன.
    • இதனை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    சென்னை- நாகப்பட்டி–னம் 4 வழி சாலை அமைக்கும் பணிக்காக சாலையின் இரு புறமும் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், அகற்றப்பட்டன.அதனைத் தொடர்ந்து 4 வழி சாலைக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பங்கூர் பகுதியில் 4 வழி சாலைக்காக பொதுமக்கள் வசிக்கும் இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

    இதனை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முறையான வழித்தடங்கள் இல்லாமல் சாலை அமைப்பது, கழிவு நீர் வாய்க்கால் அமைக்காமல் சாலையை அமைக்க முயல்வது, குடிநீர் இணைப்புகளை துண்டிப்பது, மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு வயர்களை துண்டிப்பது, சாலையில் செல்ல முடியாத அளவில் சேரும் சகதியுமான சாலைகளை அமைக்க கூடாது. என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    • கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு, காஷ்மீருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.
    • பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி எம்.பி.யிடம், கந்தசாமி, அனந்தராமன் ஆகியோர் யாத்திரை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவர்களோடு நடந்து சென்றனர்.

    புதுச்சேரி:

    கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு, காஷ்மீருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.

    ராகுல்காந்தி கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் விவேகானந்தா கலைக்கல்லூரியில் இருந்து 2-ம் நாள் பாதயாத்திரையை தொடங்கினார். இதில் புதுவை முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் 3 பஸ்களில் சென்று 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி எம்.பி.யிடம், கந்தசாமி, அனந்தராமன் ஆகியோர் யாத்திரை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவர்களோடு நடந்து சென்றனர்.

    மாலை சுசீந்திரத்தில் இருந்து ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார். அதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்க உள்ளார். இதனிடையே புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி. வைத்தியநாதன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கன்னியாகுமரி செல்கின்றனர். அவர்கள் ராகுல்காந்தி எம்.பி.யுடன் சேர்ந்து பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர்.

    திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு ஆரோவில் காவல் நிலையம் அருகே உள்ள வேதபுரீஸ்வரர் நகர் பகுதியில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்தி ரூபினி யோகஸ்ரீ லலிதாமஹா திரிபுரசுந்தரி ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு ஆரோவில் காவல் நிலையம் அருகே உள்ள வேதபுரீஸ்வரர் நகர் பகுதியில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்தி ரூபினி யோகஸ்ரீ லலிதாமஹா திரிபுரசுந்தரி ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கடந்த 5-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வசனம் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி மருத கிரக ஹோமம், அக்னி சங்கரனம் உள்ளிட்ட யாகசாலை அலங்காரத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 2 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடைபெற்றது காலை 4-ம் கால யாக பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம் விமர்சித்து ரக்ஷா பந்தனம் தொடர்ந்து 4-ம் கால பூர்ணாகதி தீபாதனை, யாத்ரா தான, கடம் புறப்பாடு நடைபெற்றது.

    இதனைத் வேத மந்திரங்கள் முழங்க விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சக்தி சாமிகள் கலந்து கொண்டு விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றினார்.

    தொடர்ந்து வல்லபவிநாயகர், பாலமுருகன் யோக லலிதா மஹா திரிபுரசுந்தரி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களின் இஷ்ட தெய்வமான வாராஹி மற்றும் சிவன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் வானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உஷா பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன், மற்றும் சுற்று வட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    • கடலூர்- புதுவை மெயின் ரோடு, அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் கட்டுமான பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மையம் அருகில் 2 கடைகள் நடத்தி வருகிறார்.
    • ரூ.85 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் ரோகிணி நகர் பகுதியை சேர்ந்தவர் பாரி (வயது 45).

    இவர் கடலூர்- புதுவை மெயின் ரோடு, அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் கட்டுமான பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மையம் அருகில் 2 கடைகள் நடத்தி வருகிறார்.

    கடந்த 4-ந் தேதி வேலை முடிந்து கடையை மூடிவிட்டு சென்றார். பின்னர் 4 காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரிலிருந்த ரூ.85 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்தது.

    மேலும் இதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது அந்த கடையில் பணம் இல்லாததால் திருடன் திரும்பிச் சென்று விட்டதாக தெரிகிறது.

    மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக நபர் ஒருவர் உள்ளே சென்று பணத்தை தேடிய சம்பவம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

    எவ்வித முகமூடி அணியாமல் கையில் சுத்தியுடன் துணிச்சலாக தனிநபர் ஒருவர், பணம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் உள்ள 4 கடைகளில் அடுத்தடுத்து பூட்டு உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவத்தை வைத்து அந்த மர்ம நபரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • புதுவை சேதராப்பட்டு பகுதியில் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வானூர், கிளியனூர் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் ஒரு சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி மற்றும் பாலமுரளி போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டு பகுதியில் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வானூர், கிளியனூர் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் ஒரு சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வானூர் மற்றும் கிளியனூர் போலீசார் இரவு நேரங்களில் கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில்கிளியனூர் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி மற்றும் பாலமுரளி போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது தைலாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்தவரை போலீசார் பிடிக்க முயன்றனர்.ஆனால் அந்த நபர் வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    போலீசார் மோட்டார் சைக்கிளையும், சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

    • தி.மு.க முப்பெரும் விழா வருகிற 15-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
    • சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    தி.மு.க முப்பெரும் விழா வருகிற 15-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

    விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதான பாவேந்தர் விருது புதுவை தி.மு.க மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.திருநாவுக்கரசக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    இந்த சந்திப்பின்போது அவைத்தலைவர்

    எஸ்.பி.சிவக்குமார் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், பொருளாளர் லோகையன், துணை அமைப்பாளர்கள் சண் குமாரவேல், பெல்லாரி கலியபெருமாள், குணாதிலீபன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன், தொகுதி பொறுப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், தொகுதி செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×