என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ராகுல்காந்தி பாதயாத்திரையில் புதுவை காங்கிரசார் பங்கேற்பு
    X

    பாதயாத்திரையில் ராகுல்காந்தியுடன் புதுவை முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் பங்கேற்ற காட்சி.

    ராகுல்காந்தி பாதயாத்திரையில் புதுவை காங்கிரசார் பங்கேற்பு

    • கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு, காஷ்மீருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.
    • பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி எம்.பி.யிடம், கந்தசாமி, அனந்தராமன் ஆகியோர் யாத்திரை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவர்களோடு நடந்து சென்றனர்.

    புதுச்சேரி:

    கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு, காஷ்மீருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார்.

    ராகுல்காந்தி கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் விவேகானந்தா கலைக்கல்லூரியில் இருந்து 2-ம் நாள் பாதயாத்திரையை தொடங்கினார். இதில் புதுவை முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் 3 பஸ்களில் சென்று 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி எம்.பி.யிடம், கந்தசாமி, அனந்தராமன் ஆகியோர் யாத்திரை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவர்களோடு நடந்து சென்றனர்.

    மாலை சுசீந்திரத்தில் இருந்து ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார். அதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்க உள்ளார். இதனிடையே புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி. வைத்தியநாதன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கன்னியாகுமரி செல்கின்றனர். அவர்கள் ராகுல்காந்தி எம்.பி.யுடன் சேர்ந்து பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர்.

    Next Story
    ×