என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் 51-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
    • நாள்தோறும் லஷ்மி ஹயக்ரீவர் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் 51-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து லட்சுமி ஹயக்ரீவருக்கு கிருஷ்ண ஹாயத்ரி ஹோமம், ஹயக்ரீவ ஹோமம், சக்தி ஹோமம், ராம காயத்ரி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் கடந்த 9 நாட்களாக நடைபெற்றது. நாள்தோறும் லஷ்மி ஹயக்ரீவர் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 11-ம் நாள் விழாவை முன்னிட்டு லட்சுமி ஹயக்ரீவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • விழாவில் மருத்துவ மாணவ-மாணவிகள் மற்றும் செவிலியர் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக சென்னை தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் தேவசகாயம் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார்.

    விழாவில் மருத்துவ மாணவ-மாணவிகள் மற்றும் செவிலியர் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல், பேராயர்தேவசகாயம் பாராட்டி கவுரவித்தனர்.

    பின்னர் மாணவ-மாணவிகளின் கலை–நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவேலி அரச வேடமணிந்து வந்த மருத்துவ மாணவர் அனைவருக்கும் ஒணம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    மாணவிகளின் அத்தப்பூ கோலம் அனைவரையும் கவர்ந்தது.விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகர் பேராசிரியை டாக்டர் ரேணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புது டெல்லியில் மாநில கூட்டுறவு துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மாநாடு, உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்தது.
    • புதுவையில் 837 பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் உள்ளன. அதில் 448 சங்கங்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன.

    புதுச்சேரி:

    புது டெல்லியில் மாநில கூட்டுறவு துறை அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மாநாடு, உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்தது.

    மாநாட்டில், புதுவை அரசு சார்பில் அமைச்சர் லட்சுமிநாராயணன், கூட்டுறவுத் துறை செயலர் நெடுஞ்செழியன் பங்கேற்றனர். மாநாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:-

    புதுவையில் 837 பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் உள்ளன. அதில் 448 சங்கங்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன. 37 சங்கங்கள் செயலற்று உள்ளன. 352 சங்கங்கள் நிதி சிக்கல் போன்ற பல்வேறு நிர்வாக காரணங்களால் கலைக்கப்பட்டு விட்டன.கூட்டுறவு துறை மூலம் மேலும் 3 கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    நபார்டு வங்கி நிதியுதவி யுடன் வேளாண்மை கடன் சங்கங்களை கணினிம யமாக்கும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய ஒரு நிலைக்குழுவை அமைக்க உத்தேசித்துள்ளோம். செயலிழந்த தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கான செயல் திட்டம் தீட்டப்படுகிறது.கூட்டுறவு சங்கங்களின் நீண்ட கால நலனுக்காக நபார்டு போன்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.

    திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளுக்குப் பதிலாக 20 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட வேண்டும்.சென்ற ஆண்டு திருப்பதியில் நடைபெற்ற தென் மாநிலங்கள் கூட்டத்தில் புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி, புதுவையில் நலிவடைந்து மூடப்படும் நிலையில் உள்ள கூட்டுறவு துறை சார்ந்த நிறுவனங்களை புனரமைக்கவும் மேம்படுத்தவும் புதிதாக உருவாக்கவும் ரூ. 500 கோடி தேவை என வலியுறுத்தினார்.

    இத்தொகையை மத்திய அரசு தர வேண்டும்.லிங்காரெட்டிபாளையம் சர்க்கரை ஆலை மற்றும் நூற்பாலைகளை நவீனமயமாக்கவும், மேம்படுத்தவும் ரூ.80 கோடி தேவைப்படுகிறது.

    நெசவாளர் சங்கங்க ளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தறிகளை நவீனப்படுத்த ரூ.5 கோடி, பாண்டெக்ஸ் மற்றும் ஏற்றுமதி சார்ந்த பாண்பேப்பின் இதர நிறுவனங்களுக்கு ரூ. 25 கோடி, வீட்டு வசதித் துறைக்கு ரூ. 75 கோடி, பால்வளத் துறைக்கு ரூ.80 கோடி, கான்பெட், அமுதசுரபி உள்ளடக்கிய நுகர்வோர் துறைக்கு ரூ.75 கோடி தேவைப்படுகிறது.

    நியாய விலைக் கடைகள் சங்கம், கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி கூட்டமைப்பு மற்றும் பல்நோக்கு சேவை வழங்குநர் சங்கங்களின் மறுமலர்ச்சிக்கு 20 கோடி ரூபாய் தேவை. இத்தொகையை மத்திய அரசு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாகூர் தொகுதி மூ.புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வ நிறுவனம் சார்பில் புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மூ.புதுக்குப்பம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பூங்கா, பள்ளியின் பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதி மூ.புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வ நிறுவனம் சார்பில் புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வேலன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார்

    எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புத்தகப்பைகளை மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    நடவடிக்கை

    மூ.புதுக்குப்பம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பூங்கா, பள்ளியின் பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுவையின் முக்கிய அடையாளமாக மணப்பட்டு, மூர்த்திக்குப்பம், புதுகுப்பம் பகுதி மாறும். நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் படகு நிறுத்த தளம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறிந்து விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும் படகு குழாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ரூ.40லட்சம் செலவில் தார் சாலை விரைவில் போட ஏற்பாடு நடந்து வருகிறது.

    இவ்வாறு செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.

    விழாவில் கிளப் மகேந்திரா பொதுமேலாளர் மோகன்ராஜ், மனித வள மேலாளர் பிரபு, ஊர் பஞ்சாயத்தார் விஜயபாலு, சக்திவேல், கலை, குமார், மாரி, கலைமணி, ஆளியப்பன், வல்லத்தான், போத்திராஜ் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம்-புதுவை வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் வக்கீல் சாமிநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், குற்றவாளி–களை கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு–பட்டனர்.
    • போராட்டத்தில் புதுவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    தமிழகம்-புதுவை வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் வக்கீல் சாமிநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், குற்றவாளி–களை கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு–பட்டனர்.

    மேலும் வாணியம்பாடி வக்கீல்கள் சங்க தலைவர் தேவகுமாரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். வக்கீல்க ளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் புதுவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டது.

    • ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி ரவுடி குற்றச்செயலில் ஈடுபட்டதால் மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.
    • கடந்த மாதம் லாஸ்பேட்டை வீரபத்திர சாமி கோவில் தெருவை சேர்ந்த கலா மற்றும் அவரது தோழிகளை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் சிறைக்கு சென்றார்.

    புதுச்சேரி:

    ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி ரவுடி குற்றச்செயலில் ஈடுபட்டதால் மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

    புதுவை கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் விக்கி என்ற பல்லு விக்கி.ரவுடியான இவர் மீது கொலை,கொலை முயற்சி,வழிப்பறி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளது. இதனால் விக்கியை ஒரு வருடத்துக்கு குற்றசெயல்களில் ஈடபடக்கூடாது என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.அதில் சுமார் 2 மாதம் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருந்தார்.ஆனால் கடந்த மாதம் லாஸ்பேட்டை வீரபத்திர சாமி கோவில் தெருவை சேர்ந்த கலா மற்றும் அவரது தோழிகளை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் சிறைக்கு சென்றார்.

    இந்தநிலையில் ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி குற்றசெயலில் ஈடுபட்டதால் விக்கி என்ற பல்லு விக்கியை மீதமுள்ள 298 நாட்கள் சிறையில் கழிக்குமாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சப்-கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துைர செய்தனர்.அதன்பேரில் அவர் விக்கியை 298 நாட்கள் சிறையில் இருக்குமாறு உத்தரவிட்டார்.

    ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி ரவுடி குற்றசெயலில் ஈடுபட்டதால் அவரை மீண்டும் சிறையில் அடைத்து மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டது புதுவையில் இதுவே முதல் முறையாகும்.

    • சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
    • அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜியை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.

    மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான் என, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேன்டும் என காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த விவகாரத்தில் சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவர் இறந்த விவகாரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜியை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். உரிய சிகிச்சை தரவில்லை என உறவினர்கள் புகார் கூறிய நிலையில், சரியான மருத்துவம் பார்க்கப்பட்டதாக அரசின் குழு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு பேட் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா காலை நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவில் திருபுவனை தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு பேட் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா  நடைபெற்றது.

    முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கரிக்கோல நிகழ்ச்சியும், மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பா பிஷேகமும் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் திருபுவனை தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    • புதுவையில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
    • புதுவையில் தங்கி அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 3 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    லாஸ்பேட்டையை அடுத்த பெத்செட்டிபேட்டை பாவேந்தர் வீதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது22). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை மேரி கட்டிடம் அருகே நிறுத்தி விட்டு கடற்கரைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சஞ்சய் திடுக்கிட்டார். மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றி ருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து சஞ்சய் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரைக்காலை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது21). இவர் புதுவையில் தங்கி அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்த வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் புதுவை-கடலூர் சாலையில் வணிக வளாகம் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சினிமா பார்க்க சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடு போயிருப்பதை கண்டு சந்தோஷ்குமார் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோட்டக்குப்பம் இந்திராநகரை சேர்ந்தவர் கணேஷ் (38). சம்பவத்தன்று இவர் புதுவை 100 அடி ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார். பின்னர் பணி முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் கணேஷ் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அமைச்சரின் வாழ்த்து பேனரை கிழித்து சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த நிலையில் இந்த வாழ்த்து பேனரை அதே பகுதியை சேர்ந்த பிரபு(வயது39) என்பவர் கிழித்து சேதப்படுத்தி விட்டார்.

    புதுச்சேரி:

    அமைச்சரின் வாழ்த்து பேனரை கிழித்து சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    திருக்கனூர் அருகே அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது47). அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான இவர் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளையொட்டி சோம்பட்டு-திருவண்ணா மலை சாலையில் வாழ்த்து பேனர் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் இந்த வாழ்த்து பேனரை அதே பகுதியை சேர்ந்த பிரபு(வயது39) என்பவர் கிழித்து சேதப்படுத்தி விட்டார். இதனையறிந்த வேல்முருகன் பிரபுவிடம் தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அப்போது பிரபு தகாத வார்த்தைகளால் திட்டி வேல்முருகனுக்கு மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து வேல்முருகன் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    • வில்லியனூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை பகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அமைச்சர் நமச்சிவாயம் மனைவி வசந்தி தலைமை தாங்கி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை பகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அமைச்சர் நமச்சிவாயம் மனைவி வசந்தி தலைமை தாங்கி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தொழிலதிபர் முகமது யூனூஸ் சொந்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், அவரின் மனைவி நசீராபேகம் மற்றும் அவரது குடும்பத்தினர் குர்ஷிதா பேகம், ஜாஸ்மின் ரோஜா, பாத்திமா, ஜெஸ்மினா பர்வீன் உட்பட திரளான சிறுபான்மையின மக்கள் கலந்து கொண்டனர். விழாவில் முருகன் இன்னிசை குழுவினரின் இசை கச்சேரி நடந்தது. 

    • மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
    • மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் கல்வியில் ஏற்பட்ட படிப்பு போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.

    மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து,சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான்.

    எனவே, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறைரீதியிலான் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படவேன்டும் என, காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    மேலும், புதுச்சேரி சபாநாயகர் செல்வம், காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாகதியாகராஜன், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட பலர், பாலமணிகண்டன் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், மாணவன் சிகிச்சை விசயத்தில் அலட்சியமாக செயல்பட்ட, டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும். காரைக்கால் அரசு மருத்துவமனையில் சம்பளம் வாங்கிகொண்டு, சர்வீஸ் பிளேஸ்மெண்ட் என்ற பெயரில், புதுச்சேரி மற்றும் பிற இடங்களில் பணிபுரிவோரை உடனடியாக மருத்துவமனைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழு, இன்று காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

    அதன்படி காரைக்கால் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, மாதா கோவில் வீதி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தது.

    இந்த போராட்டத்திற்கு, காரைக்கால் இந்துமுன்னணி, காரைக்கால், திருநள்ளாறு மற்றும் திரு.பட்டினம் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, மினிடெம்போ சங்கத்தினர், ஓட்டல்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    ×