search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரவுடி 10 மாதம் சிறையில் அடைப்பு
    X

    ரவடி விக்கி என்ற பல்லு விக்கி.

    ரவுடி 10 மாதம் சிறையில் அடைப்பு

    • ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி ரவுடி குற்றச்செயலில் ஈடுபட்டதால் மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.
    • கடந்த மாதம் லாஸ்பேட்டை வீரபத்திர சாமி கோவில் தெருவை சேர்ந்த கலா மற்றும் அவரது தோழிகளை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் சிறைக்கு சென்றார்.

    புதுச்சேரி:

    ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி ரவுடி குற்றச்செயலில் ஈடுபட்டதால் மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

    புதுவை கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் விக்கி என்ற பல்லு விக்கி.ரவுடியான இவர் மீது கொலை,கொலை முயற்சி,வழிப்பறி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளது. இதனால் விக்கியை ஒரு வருடத்துக்கு குற்றசெயல்களில் ஈடபடக்கூடாது என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.அதில் சுமார் 2 மாதம் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருந்தார்.ஆனால் கடந்த மாதம் லாஸ்பேட்டை வீரபத்திர சாமி கோவில் தெருவை சேர்ந்த கலா மற்றும் அவரது தோழிகளை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் சிறைக்கு சென்றார்.

    இந்தநிலையில் ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி குற்றசெயலில் ஈடுபட்டதால் விக்கி என்ற பல்லு விக்கியை மீதமுள்ள 298 நாட்கள் சிறையில் கழிக்குமாறு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சப்-கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துைர செய்தனர்.அதன்பேரில் அவர் விக்கியை 298 நாட்கள் சிறையில் இருக்குமாறு உத்தரவிட்டார்.

    ஒரு வருட நிபந்தனை ஜாமீனை மீறி ரவுடி குற்றசெயலில் ஈடுபட்டதால் அவரை மீண்டும் சிறையில் அடைத்து மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டது புதுவையில் இதுவே முதல் முறையாகும்.

    Next Story
    ×