என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பேனரை கிழித்து சேதப்படுத்திய வாலிபர் கைது
- அமைச்சரின் வாழ்த்து பேனரை கிழித்து சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இந்த நிலையில் இந்த வாழ்த்து பேனரை அதே பகுதியை சேர்ந்த பிரபு(வயது39) என்பவர் கிழித்து சேதப்படுத்தி விட்டார்.
புதுச்சேரி:
அமைச்சரின் வாழ்த்து பேனரை கிழித்து சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருக்கனூர் அருகே அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது47). அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான இவர் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளையொட்டி சோம்பட்டு-திருவண்ணா மலை சாலையில் வாழ்த்து பேனர் வைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வாழ்த்து பேனரை அதே பகுதியை சேர்ந்த பிரபு(வயது39) என்பவர் கிழித்து சேதப்படுத்தி விட்டார். இதனையறிந்த வேல்முருகன் பிரபுவிடம் தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது பிரபு தகாத வார்த்தைகளால் திட்டி வேல்முருகனுக்கு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து வேல்முருகன் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.
Next Story






