என் மலர்
நீங்கள் தேடியது "Namachivayam's birthday"
- வில்லியனூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை பகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- அமைச்சர் நமச்சிவாயம் மனைவி வசந்தி தலைமை தாங்கி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை பகுதியில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் நமச்சிவாயம் மனைவி வசந்தி தலைமை தாங்கி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொழிலதிபர் முகமது யூனூஸ் சொந்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், அவரின் மனைவி நசீராபேகம் மற்றும் அவரது குடும்பத்தினர் குர்ஷிதா பேகம், ஜாஸ்மின் ரோஜா, பாத்திமா, ஜெஸ்மினா பர்வீன் உட்பட திரளான சிறுபான்மையின மக்கள் கலந்து கொண்டனர். விழாவில் முருகன் இன்னிசை குழுவினரின் இசை கச்சேரி நடந்தது.






