என் மலர்
புதுச்சேரி

கபடி போட்டியில் முதல் பரிசு வென்ற கூடப்பாக்கம் நியூ ஆதம் அணியினருக்கு கோப்பை மற்றும் பரிசு தொகையை முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் வழங்கினார்.
கபடி போட்டி- கூடப்பாக்கம் அணி முதலிடம்
- கூடப்பாக்கத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது
- 50-க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்று விளையாடினர்
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சரும் பா.ஜனதா தேசிய குழு உறுப்பினருமான நமச்சிவாயம், ஊசுடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும் பா.ஜனதா மாநில துணைத்தலைவருமான தீப்பாய்ந்தான் ஆகியோர் பிறந்த நாள் நாளை மறுநாள் (8-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் பிறந்தநாளையொட்டி புதுவை மாநில கபடி சங்க அனுமதியுடன் கூடப்பாக்கத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. 50-க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்று விளையாடின.
முடிவில் கூடப்பாக்கம் நியூஆதம் அணி முதல் பரிசும், திருபுவனை வேலழகன் அணியினர் இரண்டாம் பரிசும், தொண்டமாநத்தம் கேஸ்மேடு அணியினர் மூன்றாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசினை பா.ஜனதா மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார், இரண்டாம் பரிசு பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் அருணகிரி, மூன்றாம் பரிசினை டாக்டர் பிரதீப்குமார், நான்காம் பரிசினை கோனேரி செந்தமிழ்செல்வன் ஆகியோர் வழங்கினர். பரிசளிப்பு விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு வழங்கினார்.
கபடி அணியினர் தீப்பாய்ந்தான் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் 350 பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எம்.சி மனோகரன், வாசு சேகர், மணிபாலன், செந்தில், மணிகண்டன், கூடப்பக்கம் கபடி சங்கத் தலைவர் மோகன், ராஜேஷ் கஜேந்திரன், சுதாகர், மனிஸ், லோகேஸ்வரன், கலைராஜ், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






