என் மலர்
புதுச்சேரி

கும்பாபிஷேவிழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அருகில் வெற்றி செல்வம் உள்ளார்.
கோவில் கும்பாபிஷேகம்
- சாதனை சித்தர் சண்முகம் அடிகளார் சித்தர் கோட்டம் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் கலைமாமணி டாக்டர். கிருஷ்ணமூர்த்தி என்கிற வாசியோகி அருநோதயன் தலைமைதாங்கினார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம்- கடலூர் ரோடு பைபாஸ் பேருந்து நிறுத்தம் சிக்னல் அருகில் அமைந்துள்ள சாதனை சித்தர் சண்முகம் அடிகளார் சித்தர் கோட்டம் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் கலைமாமணி டாக்டர். கிருஷ்ணமூர்த்தி என்கிற வாசியோகி அருநோதயன் தலைமைதாங்கினார்.
அறங்காவலர் குழு நிர்வாகிகள் நல்லாசிரியர் சிவப்பிரகாசன், பொறியாளர் கருணாகரன் டாக்டர். வேலுநாராயணன் மற்றும் சித்தர் கோட்டம் கோவில் நிர்வாகிகள் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து அனைவரையும் வரவேற்றனர்.
கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர்ரங்கசாமி கலந்து கொண்டு சாதனை சித்தர் சண்முக அடிகளாருக்கு பூஜைகள் செய்தார்.
கும்பாபிஷேக ஹோமங்களை தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சபாநாயகர் ஏம்பலம்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி பா. ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளரும், சத்ரிய சேனா சேவகத்தின் பொதுச் செயலாளருமான வெற்றிச்செல்வம், கலாச்சாரப் பிரிவு மாநில அமைப்பாளர், சத்திரிய சேனா சேவகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர். ஜோதி செந்தில் கண்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கலந்து கொண்டு சாதனை சித்தர் சண்முகம் அடிகளாரை தரிசித்தனர்.






