என் மலர்
புதுச்சேரி
- புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு முதலியார்பேட்டை தொகுதி நயினார் மண்டபம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா பொதுச்செயலாளர் விஜயகுமார் செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு முதலியார்பேட்டை தொகுதி நயினார் மண்டபம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுகோல், பொதுமக்களுக்கு வேட்டி, புடவைகள் வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா பொதுச்செயலாளர் விஜயகுமார் செய்திருந்தார். தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி, தொகுதி தலைவர் இன்பசேகர், மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றி செல்வம், வணிக பிரிவு தலைவர் சத்யராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், திருச்சந்திரன், மாநில இளைஞரணி துணைத்தலைவர் விக்ரமாதித்தன், மூத்த நிர்வாகிகள் பழனிவேல், பத்மநாபன், பச்சையப்பன், தொகுதி துணைத்தலைவர்கள் கனகராஜ், மீனாட்சிசுந்தரம், கலியபெருமாள், செயலா–ளர் கோதை, ஓ.பி.சி. அணியின் மாவட்ட தலைவி லட்சுமி, துணை தலைவி மஞ்சுளா, இளைஞரணி நிர்வாகி ராஜ்மோகன், கிளை நிர்வாகிகள் சுதாகர், சரவணன், முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் பொது சேவை மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
- இதனால் உடனடியாக கழிவுநீர் வாய்க்கால் கட்டித் தருமாறு தொகுதி எம்.எல்.ஏ. அங்காளிடம் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள் குப்பம் பொது சேவை மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் மழைக்காலங்க–ளில் தேங்கி நிற்கும் மழை நீர் ஆகியவை சாலையிலேயே நின்று பொது மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
இதனால் உடனடியாக கழிவுநீர் வாய்க்கால் கட்டித் தருமாறு தொகுதி எம்.எல்.ஏ. அங்காளிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பொதுப்பணித்துறை மூலம் 19.64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அப் பகுதியில் யூ மற்றும் எல் வடிவிலான வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜை யை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜீ, உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலை பொறியாளர் தமிழரசன் மற்றும்பொதுமக்கள் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநிலத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் முக்கியசாலையாக கடலூர்- புதுவை தேசிய கிழக்கு கடற்கரை சாலை இருந்து வருகிறது.
- இந்த சாலையில் நிமிடத்திற்கு 100 வண்டிகளுக்கும் மேலாக சென்று வருகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் முக்கியசாலையாக கடலூர்- புதுவை தேசிய கிழக்கு கடற்கரை சாலை இருந்து வருகிறது.
இந்த சாலையில் நிமிடத்திற்கு 100 வண்டிகளுக்கும் மேலாக சென்று வருகிறது.
எப்பொழுதும் இந்த சாலை பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில் முறையாக சாலையை பராமரிக்காமலும், சாலை–யை போடாததால் அங்கும் இங்குமாக பள்ளம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு பல கோடி செலவில் சீரமைப்பு பணி மட்டுமே நடந்தது.
சில நாட்களிலேயே மீண்டும் சாலை பழுதானது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் சாலை ஓரத்தில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.
இதனால் ஏற்கனவே ஏற்பட்ட சிறிய பள்ளங்கள் கூட இப்பொழுது பெரிய பள்ளங்களாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக கன்னியகோ–யில் காட்டுக்குப்பம், பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம், தவ–ளக்குப்பம், ரெட்டிச்சாவடி ஆகிய பகுதிகளில் பெரிய பெரிய பள்ளங்களாக இருந்து வருகிறது.
இந்தப் பள்ளங்களால் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் தவறி விழுந்து இதுவரை 3 நாட்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக பலர் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புதுவை அரசு பொதுப்பணித்துறை சாலை பராமரிப்பு, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை முதல் கட்டமாக சரி செய்ய வேண்டும். பிறகு நிரந்தர சாலையாக போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ஐகோர்டு அளித்த தீர்ப்பை வரவேற்று முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டது
புதுச்சேரி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்டு அளித்த தீர்ப்பை வரவேற்று முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில்
அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.அ.தி.மு.க. நிர்வாகிகள் கஜேந்திரன், பழனிசாமி, உதயசூரியன், செல்வம், மோகன், முருகேசன், விஸ்வநாதன், அந்துவான், கண்ணன், தனலட்சுமி, ஜமுனா, மண்ணாங்கட்டி, முனியாண்டி, வாசு, வினோத்குமார், எத்திராஜ், முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- புதுவை மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டகுப்பம், வானூர் பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.
- பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையில் படகுகளை மீனவர்கள் நிறுத்தி இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டகுப்பம், வானூர் பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.
இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டது. தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 50 மீட்டர் அளவிற்கு கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
இதனால் அந்த கிராமத்தில் இருந்த கட்டிட காம்பவுண்ட் சுர்கள், வீடுகள் சுடுகாட்டு சாலை மற்றும் புதிதாக கட்டப்பட்ட சுடுகாடு ஆகியவை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது.
பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையில் படகுகளை மீனவர்கள் நிறுத்தி இருந்தனர். கடல் சீற்றத்தால் கரையில் நிறுத்தி இருந்த வல்லத்தான் என்பவருடைய மீன்பிடி படகு எஞ்சினுடன் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது.
மாதவன் என்பவருடைய மீன் வலையும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட படகுகள் லேசாக சேதமடைந்தன.
இதுகுறித்து மீனவர்கள் மீன்வளத் துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட மீனவர் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி தலைமையில் சார் ஆய்வாளர் பெருமாள், மரைன் பிரிவு உதவி ஆய்வாளர் சந்துரு, ஆகியோர் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம், கோட்டகுப்பம், தந்திராயன்குப்பம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்தையும் அதனால் ஏற்பட்ட சேதத்தையும் ஆய்வு செய்தனர்.
கடல் கொந்தளிப்பு காரணமாக கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- புதுவை சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்தது. அப்போது குடிமைபொருள் வழங்கல் துறையின் மூலம் சிறப்பு முகாம் நடத்த வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்க வேண்டும்
- பிறகு ஒரு மாதத்தில் அந்த குறைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்தது. அப்போது குடிமைபொருள் வழங்கல் துறையின் மூலம் சிறப்பு முகாம் நடத்த வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் சிலர் துறையின் மீது சில குறைகளை கூறினர். எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வழிகாட்டுதலின்படி குடிமைபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் மாதந்தோறும் 2-ந் தேதி குடிமைபொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் துறை அமைச்சர் மற்றும் இயக்குநர் தலைமையில் அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் இதில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு தங்கள் தொகுதிகளில் குடிமைபொருள் வழங்கல் துறை சம்பந்தமாக உள்ள குறைகளை தெரிவிக்கலாம்.
பிறகு ஒரு மாதத்தில் அந்த குறைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் இன்று (2-ந் தேதி) சட்டசபையில் கூறியது போல் குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் காலை 9 மணிக்கு குறைப்பு தீர்ப்பு கூட்டம் தொடங்கியது.
இதனை அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் இயக்குநர் சக்திவேல், உதவி இயக்குநர் சமபத், துணை இயக்குநர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுவை மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு சரியான முறையில் அரசின் சலுகைகள் கிடைக்கும் வகையில் அவர்களை கண்டறிந்து சிவப்பு ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால் அவர்களை கண்டறிந்து மஞ்சல் கார்டு மாற்றி தரவேண்டும். வசதி படைத்த மேல்தட்டு மக்களை எவ்வாறு கண்டறிந்து பச்சை ரேஷன் கார்டு வழங்ககுவது உள்ளட்டவைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
பிறகு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பகுதிகளில் யாரேனும் தகுதியற்றவர்கள் சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருப்பதாக புகார் தெரிவித்தால் அவற்றை உடனடியாக நீக்கி தகுதி உடையவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். புதுச்சேரியில் முதல் முறையாக நடந்த இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
- வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ் விக்ராந்த்‘ பிரம்மாண்டமான போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த கப்பலில் இருந்து 31 போர் விமானங்களை இயக்க முடியும்.
- வரலாற்று சாதனை புரிந்த இந்திய கடற்படை தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும், இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறி யிருப்பதாவது:-
வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ் விக்ராந்த்' பிரம்மாண்டமான போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த கப்பலில் இருந்து 31 போர் விமானங்களை இயக்க முடியும்.
மேலும் இந்தியக் கடற்படைக்கு புதிய கொடி அறிமுகம் செய்துள்ள பிரதமருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முழுமையாக நம் நாட்டிலேயே உள்ள மூலப்பொருள்களை கொண்டு பிரமாண்டமான போர்க்கப்பலை உருவாக்கி வரலாற்று சாதனை புரிந்த இந்திய கடற்படை தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும், இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம், 'வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம், அடி மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்'என்று பாடிய மகாகவி பாரதியின் கனவும், கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் கனவும் நனவாகியுள்ளது.
தற்சார்பு இந்தியா மூலம் பாரத மண்ணுக்கு பெருமை சேர்க்கும் பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இன்று முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.
- 23-ந்தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.
மணக்குள விநாயகர் கோவிலின் 62-வது பிரம்மோற்சவ விழா நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை தினமும் காலை, இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.
9-ந் தேதி காலை 7 மணிக்கு ரதோற் சவம், தொடர்ந்து கன்யா லக்னத்தில் திருத்தேர் வீதியுலா நடக்கிறது.
10-ந் தேதி காலை நர்த்தன கணபதி நேரடி உற்சவம், பவுர்ணமி கடல் தீர்த்தவாரி வெள்ளி மூஷிக வாகன சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.
11-ந் தேதி காலை 11 மணிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவம், 15-ந் தேதி காலை கிருத்திகை, இரவு பால சுப்ரமணியர் உற்சவம், வெள்ளி மயில் வாகன வீதி உலாவும் நடக்கிறது.
விழாவில் 17-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும், 18-ந் தேதி விடையாற்றுதல் உற்சவமும், 22-ந் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது.
விழாவில் 23-ந் தேதி மதியம் உற்சவ சாந்தி நிகழ்ச்சியும், 108 சங்காபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் மற்றும் தேவஸ்தான அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.
- புதுவையில் கடந்த சில நாட்களாக இரவில் லேசான மழை பெய்து வந்தது.
- குளிர்ந்த காற்று வீசியது. 9 மணிக்கு மேல் மழையின் தாக்கம் அதிகரித்தது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக இரவில் லேசான மழை பெய்து வந்தது.
அதிகாலையில் கனமழை பெய்தது. தொடர்ந்து பகலிலும் லேசான மழை பெய்தது. இரவிலும் லேசான தூறல் இருந்தது.
வானம் மப்பும், மந்தராமுமாக இருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. 9 மணிக்கு மேல் மழையின் தாக்கம் அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல மழை கொட்டியது. சுமார் 11.30 மணியளவில் கனமழை பெய்தது. நகர சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
மேலும் பெய்து வரும் தொடர் மழையால் கட்டிட தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அதோடு பெய்து வரும் மழையால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி போனார்கள்.
வருகிற 4-ந் தேதி வரை தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- உருவையாறில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அவரது மனைவி கண்டித்து மது பழக்கத்தினால் மகனின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்று அறிவுரை கூறினார்.
புதுச்சேரி:
உருவையாறில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே உருவையாறு செல்வாநகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது39). கட்டிட தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
ரமேஷ் சமீப காலமாக மது பழக்கத்துக்கு ஆளாகி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி லட்சுமி கண்டிக்கும் போது இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படும். அப்போது கணவரிடம் கோபித்துக்கொண்டு லட்சுமி உறவினர் வீட்டுக்கு சென்று விடுவார்.
பின்னர் கோபம் தனிந்து கணவர் வீட்டுக்கு திரும்பி விடுவார். அதுபோல் ரமேஷ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி கண்டித்து மது பழக்கத்தினால் மகனின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்று அறிவுரை கூறினார்.
ஆனால் அதனை ரமேஷ் ஏற்காமல் மனைவியிடம் தகராறு செய்தார். தொடர்ந்து வீட்டில் இருந்தால் மேலும் பிரச்சினை உருவாகும் என கருதி லட்சுமி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் கணவரின் கோபம் தணிந்து விடும் என நினைத்து லட்சுமி வீடு திரும்பினார். அப்போது மின் விசிறியில் சேலையால் கணவர் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
7-வது ஊதியக்குழு பரிந்துரையை அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் 1.1.2016 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஊழியர்களின் போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர். பட்ஜெட் கூட்டத் தொடரிலும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது முதல்-அமைச்சர் கோரிக்கைகளை பரிசீ லிப்பதாக தெரிவித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கையின் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று உள்ளாட்சித்துறை அலுலவகத்தை முற்றுகை யிட்டு கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர். எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா முதல்-அமைச்சரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி வலியுறுத்தினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை இரும்பை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சித்தர் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா அனுஞ்யை, விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
- கும்பாபிஷேக விழாவில் புதுவை மற்றும் இரும்பையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை இரும்பை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சித்தர் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா அனுஞ்யை, விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
புணர்பூஜை மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. தீபாரதனை, யாத்திர தானம் முடிந்து கலச புறப்பாடு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சித்தர் சீரடி சாய்பாபா கலசத்திற்கு சிவஸ்ரீ பால அரசு என்கிற சந்திரமவுலி குருக்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், சித்தர் சீரடி சாய்பாபா டிரஸ்ட் நிறுவனர் விவேகானந்தன், இரும்பை செந்தில் மற்றும் நிர்வாகிகள் அஜய், ஆனந்தராஜ் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவில் புதுவை மற்றும் இரும்பையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






