என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுவை பிரதேச குழு நிர்வாகிகள் கூட்டம் மதகடிப்பட்டில் நடந்தது.
    • கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் கிராமப்புற விவசாயத்தை பாதிக்கும் வகையில் 84 ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை நகருக்கு எடுத்துச்செல்லும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுவை பிரதேச குழு நிர்வாகிகள் கூட்டம் மதகடிப்பட்டில் நடந்தது.

    பொருளாளர் சதாசிவம் தலைமை வகித்தார். செயலாளர் சங்கர், நிர்வாகிகள் அன்புமணி, நாகராஜ், முத்து, சரவணன், தேவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் கிராமப்புற விவசாயத்தை பாதிக்கும் வகையில் 84 ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை நகருக்கு எடுத்துச்செல்லும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இதற்கு பதிலாக ஏரி, குளம் உட்பட நீர் நிலைகளை ஆழப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.

    அரசு, தனியார் கட்டிடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்க வேண்டும். பால் உற் பத்தியாளர்களை பாதுகாக்க கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். 75 சதவீத மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும்.

    கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை பலப்படுத்த தேர்தல் நடத்த வேண்டும். பாண்லே பால் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ந் தேதி கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • ஆம்ஆத்மி கட்சி மாநிலசெயலாளர் ரவி சீனிவாசன், மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநில செயலாளர் ஜெகன்நாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளது.
    • புதுவை வாக்குச்சாவடிகளில், தமிழகம்-ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் வாக்காளர்களாகவும், நலத்திட்ட பயனாளிகளாகவும் உள்ளனர்.

    புதுச்சேரி:

    ஆம்ஆத்மி கட்சி மாநிலசெயலாளர் ரவி சீனிவாசன், மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநில செயலாளர் ஜெகன்நாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வாக்குச்சா–வடிகளில், தமிழகம்-ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் வாக்காளர்களாகவும், நலத்திட்ட பயனா–ளிகளாகவும் உள்ளனர்.

    இவர்கள் வாக்களிப்பது, அரசின் பண பலன்களை 2 இடங்களில் பெறுவது சட்டவிரோதம். மாநில தேர்தல் ஆணையம், ஆதார் அட்டையுடன், வாக்காளர் அட்டையை இணைத்திட வேண்டும். இதனால் ஜனநாயக குளறுபடிகள் நீக்கப்படு–வதுடன், நலத்திட்டங்களின் பணப்பலன்கள் வீண் விரையம் ஆகாமல் தடுக்கப்படும். அரசு துறைகளில் நிதி வீணாவது தடுக்கப்படும்.

    அரசு கடும் நிதி நெருக்க–டியிலிருந்து குறைந்தபட்சம் மீள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எனவே மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைத்திட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    • வில்லியனூர் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே மங்கலம் பகுதியில் தனியார் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடை முன்பு ஒரு வாலிபர் மது குடித்து விட்டு போதையில் அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி கொண்டு இருப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ரகளையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உருவையாறு தேனீ.ஜெயக்குமார் நகரை சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விக்னேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட புதுவையில் ரூ.7 முதல் ரூ.10 வரை குறைவாக உள்ளது.
    • புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் வெளியில் இருந்து வரும் வாகனங்களும் புதுவையில் பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உச்சத்தை தொட்டது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் மத்திய அரசு கலால்வரியை குறைத்தது. அதோடு மாநிலங்கள் தங்கள் பங்குக்கு விற்பனை வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை.

    அதேநேரத்தில் புதுவையில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. பெட்ரோலுக்கான வாட் வரி 23 சதவீதம் இருந்ததை 14.55 சதவீதமாக குறைத்தது. டீசலுக்கான வாட் வரியை 6.91 சதவீதமாக நிர்ணயித்தனர்.

    இதனால் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட புதுவையில் ரூ.7 முதல் ரூ.10 வரை குறைவாக உள்ளது.

    இன்றைய தினம் புதுவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.22. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.104.30, கடலூரில் ரூ.103.12, திருவண்ணாமலையில் ரூ.103.60, சென்னையில் ரூ.102.63 ஆக உள்ளது. புதுவையில் இன்றைய டீசல் விலை ரூ.86.33. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.95.36, கடலூரில் ரூ.95.40, திருவண்ணாமலையில் ரூ.95.24, சென்னையில் ரூ.94.24 ஆக உள்ளது.

    இதனால் புதுவையை சுற்றியுள்ள அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வந்து பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். இதனால் மாநிலத்தில் எல்லை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

    நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் வெளியில் இருந்து வரும் வாகனங்களும் புதுவையில் பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.

    புதுவையில் வார இறுதியில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவார்கள்.

    அப்படி வருபவர்களும் திரும்பிச்செல்லும்போது தங்கள் வாகனங்களில் முழுமையாக பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.

    இதேபோல் புதுவை மாநிலத்தின் காரைக்காலில் அந்த பகுதியை சுற்றியுள்ள தமிழக பகுதியினரும், மாகியில் கேரள மாநிலத்தவரும், ஏனாமில் ஆந்திர மாநிலத்தவரும் பெட்ரோல், டீசல் வாங்க குவிகின்றனர்.

    • புதுவை மக்கள் நலன் கருதி அடுத்த முறையேனும் சட்டசபையை 20 நாட்கள் நடத்துங்கள் குறைந்த நாட்கள் நடத்துவதன் மூலம் அதிகாரிகளுக்குத்தான் வாய்ப்புகளை உருவாக்கி தருகிறீர்கள்.
    • ஏற்கனவே அதிகாரிகள் அரசு, உங்கள் அரசு என்று இரண்டு நடை பெறுகிறது

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:-

    புதுவை மக்கள் நலன் கருதி அடுத்த முறையேனும் சட்டசபையை 20 நாட்கள் நடத்துங்கள் குறைந்த நாட்கள் நடத்துவதன் மூலம் அதிகாரிகளுக்குத்தான் வாய்ப்புகளை உருவாக்கி தருகிறீர்கள். ஏற்கனவே அதிகாரிகள் அரசு, உங்கள் அரசு என்று இரண்டு நடை பெறுகிறது.

    நான் முதல் முறை எம்.எல்.ஏ., வானபோது சட்டசபைக்கு முதலில் பழைய பல் மருத்துவக் கல்லூரி வளாகத்திலும், பின்னர் பழைய துறை முகத்திலும், அதற்கு அடுத்து தற்போதைய முதல்வரும் பூமி பூஜை போட்டனர்.

    தற்போது 4-வது ஒரு பூஜை போட உள்ளீர்கள். ஆனால் எங்கு அமையப்போகின்றது என்பது தெரியவில்லை. சுற்றுலாவிற்கு வரும் மக்கள் பார்க்கும் வகையில் அழகிய கட்டிடமாக கட்டுங்கள்.

    புதுவையில் இருந்த 750 கூட்டுறவு நிறுவனங்களில் 500 மூடப்பட்டு, தற்போது 250 மட்டுமே உள்ளது. கடந்த முறை கூட்டுறவுக்கு 70 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரூ.17 கோடி குறைத்து, 53 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தொழிற்சாலை அமைக்க சலுகை விலையில் நிலம், ஜி.எஸ்.டி. ஷேரில் பங்கு, வருமான வரியில் சலுகை உள்ளிட்டவைகளுடன் புதிய தொழிற்கொள்கையை அறிவிக்க வேண்டும்.சலுகைககள் வழங்கி வழங்கி புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்தால் ரூ.2 ஆயிரம் கோடி கூடுதலாக வரி ஈட்ட முடியும். இவ்வாறு சிவா பேசினார்.

    • சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு ஸ்டீபன் ராஜ் வீட்டில் தூங்க சென்றார்
    • மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் ஸ்டீபன்ராஜ் திடுக்கிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு கண்ணாரவீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஸ்டீபன்ராஜ் இவர் தனியார் மருந்தகத்தில் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு ஸ்டீபன் ராஜ் வீட்டில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் ஸ்டீபன்ராஜ் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஸ்டீபன்ராஜ் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென சாலையில் விழுந்து மயங்கி கிடந்தார்.
    • விநாயகர் சதுர்த்திக்கு கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையில்  திடீரென ஆட்டோ ஒன்று தாறுமாறாக சாலையில் ஓடியது.

    ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென சாலையில் விழுந்து மயங்கி கிடந்தார். விநாயகர் சதுர்த்திக்கு கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து சாலையில் விழுந்து கிடந்த ஆட்டோ டிரைவரை சாலை ஓரமாக அமர வைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாக்டர் ஒருவர் அவரை பரிசோதனை செய்தார். ஆட்டோ டிரைவர் இறந்து விட்டது தெரிந்த நிலையில் உடனே அங்கிருந்தவர்கள் வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவரின் செல்போனை எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், லாஸ்பேட்டை செண்பக விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த விஜயன் (36) என்பது தெரியவந்தது.

    பின்னர் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் கனக செட்டிக் குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கி விழுந்து இறந்த விஜயனுக்கு திருமணமாகி விட்டது. மாற்று திறனாளியான இவர் சேதராப்பட்டுக்கு சவாரி வந்து வீடு திரும்பும் போது திடீரென மயங்கி விழுந்தது தெரியவந்தது.

    • இதில் புதுவையில் 39, காரைக்காலில் 8, ஏனாமில் 5 பேர் என புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    • புதுவையில் 9, காரைக்காலில் ஒருவர் என 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 904 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதுவையில் 39, காரைக்காலில் 8, ஏனாமில் 5 பேர் என புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 9, காரைக்காலில் ஒருவர் என 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுவையில் 257, காரைக்காலில் 51, ஏனாமில் 22 பேர் என 330 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.புதுவையில் 28, ஏனாமில் 5 பேர் என 33 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

    புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்த 91 வயது முதியவர் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.

    புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 20 லட்சத்து 70 ஆயிரத்து 231 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • புதுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்கன் டைமண்ட் கவசம் அணிவிக்கப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    உற்சவர் ராஜதர்பார் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் யானை லட்சுமிக்கு 9 சபந்திரகலாவுடன் கூடிய தங்க முலாம் பூசிய, விநாயகர் உருவத்துடன் கூடிய நெற்றி பட்டை அணிவிக்கப்பட்டிருந்தது.

    அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை கோவிலில் நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. பக்தர்கள் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் விநாயகரை தரிசனம் மட்டும் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதிகளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. நாளை மணக்குள விநாயகர் கோவிலில் 62-ம் ஆண்டு பிரம்மோற்சவ கொடியேற்றம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் 175 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிற 4-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) மாலை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    • டேபிள் டென்னிஸ் போட்டிகள் அமலோர்பவம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
    • இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    புதுச்சேரி

    புதுவை மாநில டேபிள் டென்னீஸ் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான டேபிள் டென்னீஸ் போட்டிகள் அமலோர்பவம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 10 பிரிவுகளில் புதுவையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாநில டேபிள் டென்னீஸ் கழக தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். பட்டர் பிளை டேபிள் டென்னீஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தலைமை விருந்தினராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சிவக்குமார் சிறப்பு விருந்தினராக மாநில டேபிள் டென்னீஸ் கழக கவுரவ செயலாளர் ஐயப்பன் மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் நிர்வாகிகள் கோவிந்த ராஜூ, ராஜூ, சுந்தரவரதன், சூசை, கிருஷ்ண மூர்த்தி, சதீஷ், வேலாயுதம், பாலசுப்பிரமணி, பழனி அய்யப்பன், அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டர்பிளை டேபிள் டென்னீஸ் கிளப் செயலாளர் முரளி நன்றி கூறினார்.

    • மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும்
    • 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:

    புதுச்சேரியில் விவசாயிகள் வாங்கிய ரூ.13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும்.

    மரபணு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். புதிய சட்டமன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ நல வாரியம் அமைக்கப்படும். 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

    • விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • திருக்கனூர் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருக்கனூர் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    திருக்கனூரை அடுத்த கொ. மணவெளி மற்றும் தமிழகப் பகுதியான தி.புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. 3 அடி முதல் 16 அடி உயரம் வரை பல்வேறு அளவுகளில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    3½ அடி விநாயகர் சிலை 3ஆயிரம் முதல் விற்கப்படுகிறது. 16 அடி உயரம் விநாயகர் சிலை 40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. 2 ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமான முறையில் கொண்டாடப்படவில்லை.

    அதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கையில் விநாயகர் சிலைகளை அதிக அளவில் தயாரித்து வருகிறார்கள்.

    விநாயகர் சிலை விற்பனையும் இந்தாண்டு நல்ல முறையில் இருப்பதாகவும்,தயாரிக்கப்படும் அனைத்து விநாயகர் சிலைகளும் விற்று விடும் என நம்புவதாகவும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

    ×