என் மலர்

  புதுச்சேரி

  பெட்ரோல், டீசல் விலை குறைவு- புதுவைக்கு படையெடுக்கும் தமிழக டிரைவர்கள்
  X

  பெட்ரோல் டீசல்

  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

  பெட்ரோல், டீசல் விலை குறைவு- புதுவைக்கு படையெடுக்கும் தமிழக டிரைவர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட புதுவையில் ரூ.7 முதல் ரூ.10 வரை குறைவாக உள்ளது.
  • புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் வெளியில் இருந்து வரும் வாகனங்களும் புதுவையில் பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.

  புதுச்சேரி:

  நாடு முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உச்சத்தை தொட்டது.

  பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் மத்திய அரசு கலால்வரியை குறைத்தது. அதோடு மாநிலங்கள் தங்கள் பங்குக்கு விற்பனை வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை.

  அதேநேரத்தில் புதுவையில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. பெட்ரோலுக்கான வாட் வரி 23 சதவீதம் இருந்ததை 14.55 சதவீதமாக குறைத்தது. டீசலுக்கான வாட் வரியை 6.91 சதவீதமாக நிர்ணயித்தனர்.

  இதனால் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட புதுவையில் ரூ.7 முதல் ரூ.10 வரை குறைவாக உள்ளது.

  இன்றைய தினம் புதுவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.22. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.104.30, கடலூரில் ரூ.103.12, திருவண்ணாமலையில் ரூ.103.60, சென்னையில் ரூ.102.63 ஆக உள்ளது. புதுவையில் இன்றைய டீசல் விலை ரூ.86.33. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.95.36, கடலூரில் ரூ.95.40, திருவண்ணாமலையில் ரூ.95.24, சென்னையில் ரூ.94.24 ஆக உள்ளது.

  இதனால் புதுவையை சுற்றியுள்ள அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வந்து பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். இதனால் மாநிலத்தில் எல்லை பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

  நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களும் வெளியில் இருந்து வரும் வாகனங்களும் புதுவையில் பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.

  புதுவையில் வார இறுதியில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவார்கள்.

  அப்படி வருபவர்களும் திரும்பிச்செல்லும்போது தங்கள் வாகனங்களில் முழுமையாக பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.

  இதேபோல் புதுவை மாநிலத்தின் காரைக்காலில் அந்த பகுதியை சுற்றியுள்ள தமிழக பகுதியினரும், மாகியில் கேரள மாநிலத்தவரும், ஏனாமில் ஆந்திர மாநிலத்தவரும் பெட்ரோல், டீசல் வாங்க குவிகின்றனர்.

  Next Story
  ×