என் மலர்

  புதுச்சேரி

  ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து சாவு
  X

  கோப்பு படம்

  ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென சாலையில் விழுந்து மயங்கி கிடந்தார்.
  • விநாயகர் சதுர்த்திக்கு கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

  புதுச்சேரி:

  சேதராப்பட்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையில் திடீரென ஆட்டோ ஒன்று தாறுமாறாக சாலையில் ஓடியது.

  ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென சாலையில் விழுந்து மயங்கி கிடந்தார். விநாயகர் சதுர்த்திக்கு கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

  இதையடுத்து சாலையில் விழுந்து கிடந்த ஆட்டோ டிரைவரை சாலை ஓரமாக அமர வைத்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாக்டர் ஒருவர் அவரை பரிசோதனை செய்தார். ஆட்டோ டிரைவர் இறந்து விட்டது தெரிந்த நிலையில் உடனே அங்கிருந்தவர்கள் வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவரின் செல்போனை எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், லாஸ்பேட்டை செண்பக விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த விஜயன் (36) என்பது தெரியவந்தது.

  பின்னர் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் கனக செட்டிக் குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கி விழுந்து இறந்த விஜயனுக்கு திருமணமாகி விட்டது. மாற்று திறனாளியான இவர் சேதராப்பட்டுக்கு சவாரி வந்து வீடு திரும்பும் போது திடீரென மயங்கி விழுந்தது தெரியவந்தது.

  Next Story
  ×