என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுவை பிரதேச குழு நிர்வாகிகள் கூட்டம் மதகடிப்பட்டில் நடந்தது.
- கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் கிராமப்புற விவசாயத்தை பாதிக்கும் வகையில் 84 ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை நகருக்கு எடுத்துச்செல்லும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
புதுச்சேரி:
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுவை பிரதேச குழு நிர்வாகிகள் கூட்டம் மதகடிப்பட்டில் நடந்தது.
பொருளாளர் சதாசிவம் தலைமை வகித்தார். செயலாளர் சங்கர், நிர்வாகிகள் அன்புமணி, நாகராஜ், முத்து, சரவணன், தேவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் கிராமப்புற விவசாயத்தை பாதிக்கும் வகையில் 84 ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை நகருக்கு எடுத்துச்செல்லும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இதற்கு பதிலாக ஏரி, குளம் உட்பட நீர் நிலைகளை ஆழப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
அரசு, தனியார் கட்டிடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்க வேண்டும். பால் உற் பத்தியாளர்களை பாதுகாக்க கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். 75 சதவீத மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும்.
கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை பலப்படுத்த தேர்தல் நடத்த வேண்டும். பாண்லே பால் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ந் தேதி கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






