என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை அமலோற்பவம் பள்ளி, ஒரு மணி நேரத்தில் அதிகப்படியான விதைப் பந்துகளை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
    • ஒரு மணி நேரத்தில் 75 ஆயிரம் விதைப் பந்துகள் உருவாக்கி, அவற்றை தேசியக் கொடியின் அசோக சக்கரம் வடிவில் அமைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அமலோற்பவம் பள்ளி, ஒரு மணி நேரத்தில் அதிகப்படியான விதைப் பந்துகளை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது.

    நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு அமுதப் பெரு விழாவைக் கொண்டாடும் விதமாக, அமலோற்பவம் பள்ளி

    என்.எஸ்.எஸ்., குழுவினர் 240 பேர் ஆரம்பப் பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தினர்.

    இதில், ஒரு மணி நேரத்தில் 75 ஆயிரம் விதைப் பந்துகள் உருவாக்கி, அவற்றை தேசியக் கொடியின் அசோக சக்கரம் வடிவில் அமைத்தனர். கொன்றை, வாகை, பூவரசு, வில்வம், வேம்பு, நாவல், சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்ட விதைகள் அடங்கிய விதைப் பந்துகள் உருவாக்கப்பட்டன.

    இவற்றை வனத்துறை, என்.எஸ்.எஸ், குழுக்களுக்கு வழங்கவும், மீதம் உள்ள விதைப் பந்துகளைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மூலம் நெடுஞ்சாலையோரம் தூவப்பட உள்ளது.

    இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் என்.எஸ்.எஸ்., ஒருங்கினைப்பாளர் டேவிட் வரவேற்றார். மாநில ஒருங்கி–ணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    தென்னிந்திய யுனிவர்சல் எக்கோ பவுண்டேசன் நிறுவன இயக்குநர் பூபேஷ் குப்தா பங்கேற்று, மாணவர்களின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் உணவு அமைப்பு குறித்த புரிதலை பாராட்டினார். உலக சாதனைக்கான வெர்ச்சூ புத்தக நடுவர்கள் சுரேஷ் குமார், கார்த்திகேயன், வெங்கடேசன் ஆகியோர் விதைப் பந்து தயாரிப்பை பார்வையிட்டு, தங்கள் பதிவேட்டில் பள்ளியின் பெயரை சாதனைக்குரிய பெயராக பதிவு செய்தனர்.

    ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் செல்வநாதன் ஒருங்கின–ணைத்தார். என்.எஸ்.எஸ். ஒருங்கினணப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.

    இதுவைரை 40,144 விதைப்பந்துகளை உருவாக்கி சாதனைப் பட்டியலில் இருந்த பஞ்சாப் மாநில பள்ளியின் சாதனையை, அமலோற்பவம் பள்ளி முறியடித்தது குறிப்பிடதக்கது.

    • போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பிரதான சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
    • ஓட்டல் நிறுவன போர்டுகளை அகற்றினால் உடனடியாக சிபாரிசுக்கு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    நேரு(சுயேச்சை):- அரசு துறைகளில் வருவாயை பெருக்கவும், ஆக்கிரமிப்பு இடங்களை மீட்பது போன்ற அரசு நடவடிக்கையின்போது தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெறுகிறார்கள்.

    இந்த தடை ஆணையை நீக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்த வழக்குகள் எத்தனை நிலுவையில் உள்ளது?

    அமைச்சர் நமச்சிவாயம்: ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    நேரு: போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பிரதான சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஓட்டல் நிறுவன போர்டுகளை அகற்றினால் உடனடியாக சிபாரிசுக்கு வருகின்றனர். இதை மீறி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

    ஏ.கே.டி.ஆறுமுகம்(அரசு கொறடா): மேட்டுப்பாளையத்தில் டிராபிக் சிக்னல் வேலை செய்யவில்லை. போலீசாரும் இல்லை.

    ரமேஷ்(என்ஆர்.காங்): போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை.

    நமச்சிவாயம்: புதுவையில் 37 சிக்னல் அமைக்க உள்ளோம். நடைபாதை கடைகள் அதிகரித்துள்ளது. காலி செய்யும்போது போராட்டம் செய்கின்றனர். இதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. பல துறைகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    சிவசங்கர்(சுயே): தனி இடத்தில் நடை பாதை கடைகள் அமைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் தவறாக சாலையோரங்களில் கடைகள் அமைக்க அனுமதிக்கின்றனர். கடை வைப்பவர்களிடம் நகராட்சி அடிக்காசு வசூலிக்கிறது.

    நமச்சிவாயம்: நகராட்சி அடிக்காசு குறிப்பிட்ட இடத்துக்குத்தான் வாங்குகின்றனர். அனைத்து இடங்களுக்கும் வாங்குவதில்லை.

    கென்னடி(தி.மு.க.): பேனர்களை அதிகளவு வைக்கிறார்கள். அதை அகற்றுங்கள்.

    சம்பத்(தி.மு.க.): சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றத்தை ஏன் நிறுத்தினீர்கள்?

    நமச்சிவாயம்: உங்கள் ஒத்துழைப்பு தேவை. நீங்கள் யாரும் வராமல் போனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடலாம். மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாட்டலிபுத்திரா விளையாட்டு மைதானத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 4-8வது தேசிய ஜூனியர் மகளிர் கபடி போட்டி நடக்கிறது.
    • 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பங்கேற்கும் இந்த போட்டியில் புதுவை மாநில மகளிர் கபடி அணியை சேர்ந்த ஆரோக்கியமேரி, வித்யா பங்கேற்று விளையாடுகின்றனர்.

    புதுச்சேரி:

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாட்டலிபுத்திரா விளையாட்டு மைதானத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 4-8வது தேசிய ஜூனியர் மகளிர் கபடி போட்டி நடக்கிறது.

    20 வயதுக்குட்பட்ட பெண்கள் பங்கேற்கும் இந்த போட்டியில் புதுவை மாநில மகளிர் கபடி அணியை சேர்ந்த ஆரோக்கியமேரி, வித்யா, சிவசங்கரி, பவித்ரா, பரிமளா, ராகவி, பார்கவி, ஜீவிதா, பிரியதர்ஷினி, நர்மதா, அல்போன்சா மற்றும் அபர்ணா ஆகிய 12 பேர் பங்கேற்று விளையாடுகின்றனர்.

    வழியனுப்பு நிகழ்ச்சியில் புதுவை மாநில கபடி சங்கத் தலைவர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், தலைமை செயல் அதிகாரி ஆரியசாமி, கன்வீனர் வீரபாகு, செயற்குழு உறுப்பினர் பூபாலன், பயிற்சியாளர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் மகளிர் அணிக்கு சீருடைகள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    • தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • புதுவை மாநில கட்டுப்பாட்டிலுள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது.

    புதுச்சேரி:

    தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அணையின் உச்ச நீர்மட்டமான 119 அடியில் 117 அடியை தண்ணீர் எட்டியுள்ளதையடுத்து, அணையில் இருந்து உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் விழுப்புரம் மாவட்டம் வழியாக ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 7200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

    புதுவை மாநில கட்டுப்பாட்டிலுள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது.

    இதையடுத்து சித்தேரி அணைக்கட்டு பகுதியில் 2 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சித்தேரி தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் அதை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட புதுவை, கடலூர் மாவட்ட கிராம மக்கள் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் கொமந்தான்மேடு தரைப் பாலமும் மூழ்கியதால் அதைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.

    வெள்ளப்பெருக்கால் தரைப் பாலங்கள் மூழ்கியதால் பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்லும் தினக்கூலி ஊழியர்கள் உள்பட பலர் மாற்று வழியை தேடி நீண்ட தூரம் செல்கின்றனர்.

    • புதுவை மாநிலம் 2 ஆண்டாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
    • புதுவை முதல்-அமைச்சர் காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் தி.மு.க.

    எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி பேசியதாவது:-

    புதுவை மாநிலம் 2 ஆண்டாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த காலத்தில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பினை தவறவிட்ட இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒருமுறை தளர்வாக பதிவு மூப்பினை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தார்.

    புதுவை முதல்-அமைச்சர் காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலை யில் வேலைவாய்ப்பகத்தில் மூப்பை தவற விட்டவர்களுக்கு மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் பாரம்பரிய உற்சாகத்தோடும் மகிழ்ச்சி யோடும் கொண்டாடப்படும் விழாவாக இருந்து வருகிறது.
    • உலகின் அனைத்து நாடுகளிலும் மொழி மற்றும் மதம் கடந்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி, நாடு முழுவதும் பாரம்பரிய உற்சாகத்தோடும் மகிழ்ச்சி யோடும் கொண்டாடப்படும் விழாவாக இருந்து வருகிறது.

    விநாயகக் கடவுள் அறிவின், ஞானத்தின், வளமையின் கடவுளாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் போதும் விநாயகரை வணங்கி தொடங்கப்படுகிறது.

    இந்த விநாயகர் சதுர்த்தி விழா அனை வரது வாழ்விலும் ஆரோக்கி யத்தையும், அமைதியையும், செழிப்பையும் அளிக்க வேண்டும் என்று கூறி புதுவை மக்கள் அனை வருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    வினை தீர்க்கும் விநாயக பெருமானை போற்றி வழிபடும் விநாயகர் சதுர்த்தி நன்னாள் அறிவு, கல்வி, செல்வம், ஆரோக்கியம் போன்றவற்றை அருளும் திருநாளாக அமையட்டும். புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலகின் அனைத்து நாடுகளிலும் மொழி மற்றும் மதம் கடந்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. புதுவை மாநிலத்திலும் இந்த விழா சிறப்பாக அமைந்திடவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை பொதுமக்கள் அனைவருக்கும் இந்த நாளில் எல்லா அருளும் கிடைத்திடவும் வறுமை நீங்கி வளம் கிடைக்க விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஞானமேவடிவான திருடேனியை கொண்ட விநாயக பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும். புதுவை மாநிலம் முழுவதும் நலமும், வளமும் பெருகட்டும் மக்கள் வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக முதல்வர் தகவல்
    • கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்

    புதுச்சேரி:

    புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    90 வயது முதல் 100 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை 3500 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

    • வில்லியனூர் அருகே பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • உருவையாறு சந்திப்பு பஸ் நிறுத்தம் சந்திப்பில் ஒரு வாலிபர் அங்கு நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டி ருந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே உருவையாறு சந்திப்பு பஸ் நிறுத்தம் சந்திப்பில் ஒரு வாலிபர் அங்கு நின்றுக்கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டி ருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் மேல்திருக்காஞ்சி புதுநகரை சேர்ந்த மைனா என்ற சசிக்குமார் (வயது23) என்பது தெரியவந்தது. இதையடுத்து சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் நோணாங்கு ப்பம் படகு குழாம் அருகே ஒரு வாலிபர் நின்றுக் கொண்டு அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தவளக்குப்பம் என்.ஆர்.நகரை சேர்ந்த பவுல்ராஜ்(32) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    திருக்கனூர் அருகே கே.ஆர்.பாளையம் திருவண்ணாமலை சாலையிலும், அங்குள்ள புளியந்தோப்பு பகுதியிலும் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளால் பேசி தகராறு செய்து கொண்டிருந்தனர். அவர்களை திருக்கனூர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் வானூர் அருகே கொடுக்கூரை சேர்ந்த கமலேஷ்(19) மற்றும் விக்கிரவாண்டியை சேர்ந்த மோகன்பிரபு(34) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பாகூர் தொகுதிக்குட்பட்ட இருளன்சந்தை கிராமத்தில் உள்ள இருளர் இன மக்கள் கடந்த ஆண்டு பெய்த கனமழை, ஆற்று வெள்ளத்தால் அனைவரின் குடிசைகளும் முழுமையாக நீரில் மூழ்கியதால் அரசு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • இருளன்சந்தை வருவாய் கிராமத்தில் புறம்போக்கு அல்லது தனியார் நிலங்கள் பற்றிய தகவல்களை துணைகலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    செந்தில்குமார் (தி.மு.க.): பாகூர் தொகுதிக்குட்பட்ட இருளன்சந்தை கிராமத்தில் உள்ள இருளர் இன மக்கள் கடந்த ஆண்டு பெய்த கனமழை, ஆற்று வெள்ளத்தால் அனைவரின் குடிசைகளும் முழுமையாக நீரில் மூழ்கியதால் அரசு இடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்? இந்த மக்களுக்கு பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசு முன்வருமா?

    அமைச்சர் சந்திர பிரியங்கா:- பாகூர் தொகுதி இருளன்சந்தை வருவாய் கிராமத்தில் புறம்போக்கு அல்லது தனியார் நிலங்கள் பற்றிய தகவல்களை துணைகலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    செந்தில்குமார்: ஓராண்டாக நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் சுணக்கமாக பணிகள் நடக்கிறது. அவசர பணியாக எடுத்து செய்து தர வேண்டும்.

    நிதி நிலைமை என்ற வார்த்தையை கருத்தில்கொள்ளக்கூடாது. அம்மக்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10 சதவீதம்தான் செலவு செய்கிறோம். நிதிநிலைமை என்பது ஏற்புடையதல்ல.

    கல்யாணசுந்தரம்: பிள்ளைச்சாவடியிலும் இதேபோல ஆய்வு செய்தனர். கருவடிகுப்பத்தில் 48 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நிதியில்லை என்று கூறக்கூடாது. அவர்களுக்கு இலவச பட்டா, வீடு வழங்க வேண்டும்.

    எதிர்கட்சித்தலைவர் சிவா: கடந்த 10 ஆண்டாக பழங்குடியின மக்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு மஞ் சள்கார்டு வழங்கியுள்ளனர். மஞ்சள்கார்டு கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு முடிவு செய்து உடனடியாக மனைப்பட்டா, வீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    அங்காளன்: என் தொகுதியிலும் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு மனைப்பட்டா இல்லை. அதிகாரிகள் நிலம் இல்லை என்கின்றனர்.

    இலங்கை அகதிகள் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்க ளுக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் சிறப்புக்கூறு நிதியை அந்த திட்டங்களுக்கு மட்டும் செலவிட்டால் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். நிதியை மாற்றம் செய்வதால்தான் சிக்கல் ஏற்படுகிறது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி: பழங்குடியின மக்களின் மீது அரசுக்கு அக்கறை உள்ளது. அவர்களுக்கு பட்டா, வீடு வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அவர்கள் வசிக்கும் இடத்திலேயே பட்டா, வீடு கேட்கின்றனர். மாற்று இடத்தில் அளித்தால் செல்ல மறுக்கின்றனர். அவரவர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் நிலத்தை கண்டறிந்து கொடுத்தாலோ, அரசு புறம்போக்கு நிலத்தை சுட்டிக்காட்டினால் அவர்க ளுக்கு பட்டா வழங்கப்படும், வீடுகளும் கட்டித்தரப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • தென்பெண்ணை ஆற்றில் வந்து உள்ள நீர் சாத்தனூர் அணைக்கட்டை நிரப்பி 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு.
    • அணையில் இருந்து சுமார் 5600 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அணையில் இருந்து சுமார் 5600 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நீர் கிருஷ்ணகிரி அணையை வந்தடைந்து உள்ளது. இவ்வணை நிரம்பி யதால் சுமார் 2500கன அடி நீர் வெளியேற்றி வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் வந்து உள்ள நீர் சாத்தனூர் அணைக்கட்டை நிரப்பி 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு திருக்கோயிலூர், விழுப்புரம் வழியாக நேற்று மாலை புதுவை பராமரிப்பில் உள்ள சொர்ணாவூர் அணைக் கட்டுக்கு சுமார் 1500கன அடிநீர் வந்தடைந்தது.

    தற்பொழுது சொர்ணாவூர் அணைகட்டு நிரம்பி வழிந்து ஆற்றில் இருபுறமும் கரைபுரண்டு 1 மீட்டர் உயரத்திற்கு ஓடுகிறது.

    இந்த நீர் குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டை இன்று மாலை அல்லது இரவு வந்தடையும். சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் பகுதிக்கு மூலமாக பாகூர் ஏரிக்கு நீர் கொண்டு வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை திறந்து உள்ளனர்.

    அதன் வழியாக சுமார் 50 செமீ. உயரத்திற்கு தண்ணீர் வாய்க்காலில் ஓடுகிறது.

    ஆறு வற்றியிருந்த நிலையில் ஓரே மாதத்தில் 2-வது முறையாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அச்சத்திலும் உள்ளனர்‌. அணைக்கட்டுகளை புதுவை பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • புதுவை அரிச்சுவடி மனநல மையம் இயக்குனர் டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இயக்குனர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோரின் தந்தை பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
    • நலத்திட்ட உதவியாக ஏழைகளுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரிச்சுவடி மனநல மையம் இயக்குனர் டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இயக்குனர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோரின் தந்தை பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கரன் என்ற தட்சிணாமூர்த்தி எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து நலத்திட்ட உதவியாக ஏழைகளுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை டாக்டர் இளவழகன், டாக்டர் சத்தியவண்ணன் மற்றும் சகோதரர் ஆறுமுகம், மருமகன் ரவிச்சந்திரன், மகள் அரசம்மா தேவி ரவிச்சந்திரன், மருமகள் முத்து காமாட்சி சத்திய வன்னன், பேத்திகள் மோனி ஸ்ரீ தாரணி குமாரி மற்றும் உறவினர்கள், அரிச்சுவடி ஊழியர்கள் நண்பர்கள் செய்திருந்தனர்.

    • புதுவை திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை 3 மாதமாக இயங்கவில்லை.
    • புதுவை அரசு நூற்பாலை மீது தனி கவனம் செலுத்தி ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை 3 மாதமாக இயங்கவில்லை.

    இதனால் அங்கு பணிபுரியும் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. புதுவை அரசு நூற்பாலை மீது தனி கவனம் செலுத்தி ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

    2 ஆண்டுக்கு மேல் இருப்பு உள்ள நூலை விற்று சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசிலை அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் நூதனமாக பஞ்சு தின்னும் போராட்டம் நடத்தினர்.

    இதில் ஐ.என்.டி.யூ,சி,

    பி.எம்.சி. சிவசங்கரன், எல்லப்பன், நூற்பாலை தொழிலாளர் சங்கம் சிவகடாட்சம், மாதவன், பாட்டாளி

    தொ–ழிற்சங்கம் ராஜாராம், ரமேஷ், ஐ.என்.டி.யூ,சி,

    தேசிங்கு, விசுவாசு,

    எல்.எல்.எப். நடராஜன், சாமிக்கண்ணு, எஸ்.எல்.யூ. முருகன், முத்து, ஏ.டி.யூ. ரவிச்சந்திரன், பழனிராஜா, என்.ஆர்.டி.யூ.சி. சுதாகர், சிவசுப்பிரமணியன், பி.எம்.எஸ்.கே. இளங்கோவன், துரைலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடு–பட்டவர்கள் பஞ்சை தின்னுவது போல போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து கோஷம் எழுப்பினர்.

    ×