என் மலர்
புதுச்சேரி

அமலோற்பவம் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஒரு மணி நேரத்தில் அதிகப் படியான விதைப் பந்துகளை உருவாக்கி சாதனை படைத்துள்ள காட்சி.
அமலோற்பவம் பள்ளி புதிய சாதனை
- புதுவை அமலோற்பவம் பள்ளி, ஒரு மணி நேரத்தில் அதிகப்படியான விதைப் பந்துகளை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
- ஒரு மணி நேரத்தில் 75 ஆயிரம் விதைப் பந்துகள் உருவாக்கி, அவற்றை தேசியக் கொடியின் அசோக சக்கரம் வடிவில் அமைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை அமலோற்பவம் பள்ளி, ஒரு மணி நேரத்தில் அதிகப்படியான விதைப் பந்துகளை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு அமுதப் பெரு விழாவைக் கொண்டாடும் விதமாக, அமலோற்பவம் பள்ளி
என்.எஸ்.எஸ்., குழுவினர் 240 பேர் ஆரம்பப் பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தினர்.
இதில், ஒரு மணி நேரத்தில் 75 ஆயிரம் விதைப் பந்துகள் உருவாக்கி, அவற்றை தேசியக் கொடியின் அசோக சக்கரம் வடிவில் அமைத்தனர். கொன்றை, வாகை, பூவரசு, வில்வம், வேம்பு, நாவல், சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்ட விதைகள் அடங்கிய விதைப் பந்துகள் உருவாக்கப்பட்டன.
இவற்றை வனத்துறை, என்.எஸ்.எஸ், குழுக்களுக்கு வழங்கவும், மீதம் உள்ள விதைப் பந்துகளைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மூலம் நெடுஞ்சாலையோரம் தூவப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் என்.எஸ்.எஸ்., ஒருங்கினைப்பாளர் டேவிட் வரவேற்றார். மாநில ஒருங்கி–ணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.
தென்னிந்திய யுனிவர்சல் எக்கோ பவுண்டேசன் நிறுவன இயக்குநர் பூபேஷ் குப்தா பங்கேற்று, மாணவர்களின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் உணவு அமைப்பு குறித்த புரிதலை பாராட்டினார். உலக சாதனைக்கான வெர்ச்சூ புத்தக நடுவர்கள் சுரேஷ் குமார், கார்த்திகேயன், வெங்கடேசன் ஆகியோர் விதைப் பந்து தயாரிப்பை பார்வையிட்டு, தங்கள் பதிவேட்டில் பள்ளியின் பெயரை சாதனைக்குரிய பெயராக பதிவு செய்தனர்.
ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் செல்வநாதன் ஒருங்கின–ணைத்தார். என்.எஸ்.எஸ். ஒருங்கினணப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.
இதுவைரை 40,144 விதைப்பந்துகளை உருவாக்கி சாதனைப் பட்டியலில் இருந்த பஞ்சாப் மாநில பள்ளியின் சாதனையை, அமலோற்பவம் பள்ளி முறியடித்தது குறிப்பிடதக்கது.






