என் மலர்
நீங்கள் தேடியது "bridge sinks"
- தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- புதுவை மாநில கட்டுப்பாட்டிலுள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது.
புதுச்சேரி:
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் உச்ச நீர்மட்டமான 119 அடியில் 117 அடியை தண்ணீர் எட்டியுள்ளதையடுத்து, அணையில் இருந்து உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் விழுப்புரம் மாவட்டம் வழியாக ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 7200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
புதுவை மாநில கட்டுப்பாட்டிலுள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது.
இதையடுத்து சித்தேரி அணைக்கட்டு பகுதியில் 2 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சித்தேரி தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் அதை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட புதுவை, கடலூர் மாவட்ட கிராம மக்கள் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கொமந்தான்மேடு தரைப் பாலமும் மூழ்கியதால் அதைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.
வெள்ளப்பெருக்கால் தரைப் பாலங்கள் மூழ்கியதால் பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்லும் தினக்கூலி ஊழியர்கள் உள்பட பலர் மாற்று வழியை தேடி நீண்ட தூரம் செல்கின்றனர்.






