என் மலர்
புதுச்சேரி
- புதுவை குடிசைமாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் முல்லை நகர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை குடிசைமாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் முல்லை நகர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சங்க ஆலோசகர் பிரேமதாசன், தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தனர். துணைத்தலைவர்கள் கணேசன், பழனி, வீரமுத்து, செயலாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். வாரியத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி
இந்த போராட்டம் நடந்தது.
- புதுவை நகருக்கு ரூ.534 கோடியில் கிராமத்திலிருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 10 ஏரியில் தேக்கி அந்த நீரை சுத்திகரிப்பு செய்தால் 5 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசியதாவது:-
புதுவை நகருக்கு ரூ.534 கோடியில் கிராமத்திலிருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இயற்கைக்கு விரோதமான திட்டம். இத்திட்டத்துக்கு பதிலாக 10 ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்.
சங்கராபரணி, தென்பெண்ணையாறு மூலம் தண்ணீர் வருகிறது. அதை 10 ஏரியில் தேக்கி அந்த நீரை சுத்திகரிப்பு செய்தால் 5 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும். மழைநீரை இயற்கையான முறையில் சேகரிக்கலாம். 84 ஏரியில் 10 ஏரியைத்தான் குடிநீருக்கு பயன்படுத்த சொல்கிறோம்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி பயிற்சி பெறச்செய்ய வேண்டும். புதுவையில் உள்ள 609 குளங்களில் 25 சதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீட்க வேண்டும். இவ்வாறு செய்தால் புதுவையின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மக்கள் பணம் மக்களுக்குதான் என கூட்டுறவு நிறுவனங்களை கொண்டு வந்தோம்.
- கழிவறை கட்டியதில் ரூ.4 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்து விசாரணை நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் எதிர்கட்சித்தலை––வர் சிவா பேசியதாவது:-
மக்கள் பணம் மக்களுக்குதான் என கூட்டுறவு நிறுவனங்களை கொண்டு வந்தோம். ஆனால் அமுதசுரபியை ரூ.4 கோடிக்கு அடமானம் வைத்துள்ளோம். கான்பெட் நிறுவனம் மூழ்கியுள்ளது.
வங்கிகள் நோட்டீஸ் தந்துள்ளனர். அரசு துறை இடங்களை அடமானம் வைப்பது தொழிலை வளர்க்கத்தான். ஆனால் இக்கட்டிடங்கள் ஏலம் போய்க்கொண்டிருக்கிறது. கழிவறை கட்டியதில் ரூ.4 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்து விசாரணை நடக்கிறது.
எனவே
இவற்றை தீவிரமாக கண்காணிக்கவேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பூஜ்ய நேரத்தில் முக்கிய பிரச்சினைகளுக்கு பதில் சொல்வதில்லை. முதல்-அமைச்சர் பதில்தராததால்தான் மற்றவர்களுக்கு அலட்சியம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து பேசிய சுயேச்சை உறுப்பினர் அங்காளன், புதுவைக்கு பால் பற்றாக்குறை காரணமாக வெளிமாநில அரசு நிறுவனங்களில் இருந்து பாண்லே மூலம் பால் வாங்கினோம். இப்போது தனியாரிடம் பால் வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு தனியாரிடம் பால் வாங்குவது ஊழலுக்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவை மாநிலத்தில் நேற்று 820 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
- புதுவை மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மருத்துவமனையிலும், 322 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் நேற்று 820 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுவையில் 54 பேரும், காரைக்காலில் 12 பேரும், ஏனாமில் 5 பேரும் இதில் அடங்குவர். மாகியில் தொடர்ந்து தொற்று பாதிப்பு இல்லாத பகுதியாக உள்ளது.
புதுவை மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மருத்துவமனையிலும், 322 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் 335 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 35 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் 34 பேர் புதுவையையும், ஒருவர் காரைக்காலையும் சேர்ந்தவர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 451 பேர் குணமடைந்துள்ளனர். 1968 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4-வது மாநில மாநாடு கருத்தரங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் நடைபெற்றது.
- மாநாட்டில் 10- மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் 3 நிலையில் தேர்ச்சி பெற்ற தலித் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 4-வது மாநில மாநாடு கருத்தரங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் நடைபெற்றது.
தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். துணை செயலாளர் சரவணன் அஞ்சலி உரை வாசித்தார். துணை தலைவர் ஆனந்தன் தொடக்க உரையாற்றினார். செயலாளர் ராமசாமி களச் செயல்பாட்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் ரமேஷ் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
மாநாட்டில் 10- மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் 3 நிலையில் தேர்ச்சி பெற்ற தலித் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
சி.ஐ.டி.யூ. சீனிவாசன், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன் ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.
மாநாட்டில், மின்சார திருத்த மசோதாவை சட்டமாக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவது, மின்துறையை தனியாருக்கு விற்கும் திட்டத்தை உடனே புதுவை அரசு கைவிட வேண்டும், அக்ஷய பாத்ரா திட்டத்தை கைவிட்டு மீண்டும் மதிய உணவு கூடம் மூலமே மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் ராஜாங்கம், பெருமாள், கங்காதரன், ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, அன்பழகன் விஸ்வநாதன், சலேத்தையன், பிரகாஷ், ஏகாம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- தனியார் விடுதியில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமரா, அருகில் உள்ள ஒரு வீட்டின் பகுதிகளை நோட்டமிடும் வகையில் உள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட காட்டாமணிக்குப்பம் பகுதியில் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் சமூக வலைதளத்தில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. குறித்து அவதூறு தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான அவதூறு பரப்புவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கூறியதாவது:-
தனியார் விடுதியில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமரா, அருகில் உள்ள ஒரு வீட்டின் பகுதிகளை நோட்டமிடும் வகையில் உள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், வீட்டின் உரிமையாளர்கள், தொகுதி எம்.எல்.ஏ.வான பிரகாஷ்குமாரிடம் முறையிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு போலீசாருடன் சென்ற பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. சி.சி.டி.வி. கேமராவை பார்வையிட்டார்.
அப்போது அந்த கேமரா புகார்தாரரின் வீட்டை நோட்டமிடும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அதனை அகற்றினர். இதனால் எம்.எல்.ஏ. பற்றி தவறான அவதூறு பரப்புகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- புதுவை கிராமப்புறங்களில் காகிதக் கூழ் மற்றும் களிமண் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்குவது குடிசைத் தொழிலாக இருந்து வருகிறது.
- கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதூர்த்தி விழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கிராமப்பு–றங்களில் காகிதக் கூழ் மற்றும் களிமண் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்குவது குடிசைத் தொழிலாக இருந்து வருகிறது.
புதுவை கிராம புறங்களில் உருவாக்கும் விநாயகர் சிலையானது நாடு முழுதும் பல மாநிலங்களுக்கு அனுப்பப்படும். அரை அடியிலிருந்து 20 அடி உயரம் வரை விதவிதமான சிலைகளில் உருவாக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன.
ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதூர்த்தி விழாக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் விநாயகர் சிலை உற்பத்தி முற்றிலும் முடங்கிப் போனது. மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 2 ஆண்டுகளாக பாழாகிப் போனது.
இந்த நிலையில் புதுவையில் கொரோனா பெருமளவில் குறைந்தால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் எந்த தடையும் இல்லை. மேலும், வழக்கம் போல் விநாயகர் சதூர்த்தியை உற்சாகமாக கொண்டாட நாடு முழுவதும் மாநில அரசுகள் அனுமதித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு புதுவையின் கிராமப்பு–றங்களில் பொம்மை உற்பத்தி–யாளர்கள் உற்சா–கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர்.
2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப் படுவதால் அதிக அளவில் விநாயகர் பொம்மைகளுக்கு ஆர்டர் வந்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தமுறை லிங்க விநாயகர், பஞ்சமுக விநாயகர், நர்த்தன விநாயகர், பாகுபலி விநாயகர் என உருவாக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். ரூ 100 முதல் ரூ 20 ஆயிரம் வரை சிலைகள் கிடைக்கிறது.
- புதுவை பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்து புத்தக வெளியீடு புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுவை மாநில மோடி 20 புத்தகம் மக்களுக்கு சென்றடைவதற்கான பொறுப்பாளர் முன்னாள் நீதிபதி அருள் மற்றும் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்து புத்தக வெளியீடு புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் நாடு மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் ஸ்ரீராம் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதல் புத்தகத்தை வெளியிட்டு மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் செல்வ–கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜான் குமார், சிவசங்கரன் ,அசோக் பாபு, பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் மாநில துணைத்தலைவர்கள் அருள்முருகன் ரவிச்சந்திரன் செல்வம் ஓ. பி. சி. அணி தேசிய செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுவை மாநில மோடி 20 புத்தகம் மக்களுக்கு சென்றடைவதற்கான பொறுப்பாளர் முன்னாள் நீதிபதி அருள் மற்றும் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் 75-வது இந்திய விடுதலை நாள் விழா, வ.உ.சி 150-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
- இனியொரு விதி செய்வோம் என்ற பொருளில் நடைபெற்ற உரையரங்கில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியகளம் நிறுவனர் ரத்தின வேங்கடேசன் சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை தமிழ்ச் சங்கம் சார்பில் 75-வது இந்திய விடுதலை நாள் விழா, வ.உ.சி 150-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன் தாசு வரவேற்றார். துணை தலைர்கள் ஆதிகேசவன், பாலசுப்பிரமணியன், பொருளாளர் திரு–நாவுக்கரசு, துணை செயலாளர் அருள்செல்வம் முன்னிலை வகித்தனர். விழாவில் உசேன் தலைமையில் பாவரங்கம் நடந்தது.
இனியொரு விதி செய்வோம் என்ற பொருளில் நடைபெற்ற உரையரங்கில் சிங்கப்பூர் தமிழ் இலக்கியகளம் நிறுவனர் ரத்தின வேங்கடேசன் சிறப்புரையாற்றினார். பிரான்சு கண்ணதாசன் கழக தலைவர் ராஜா குமாரராஜா வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ, மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க தலைவர் தேவநாதன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் சங்க செயலர் இளங்கோவன், கவிஞர் பாஸ்கரன், ஓய்வுபெற்ற அரசு இளநிலை கணக்கு அதிகாரி அய்யன் காளி மனோகர் ஆகியோருக்கு தமிழ்ச் சங்க விருது வழங்கப்பட்டது. முடிவில் ஆட்சிக்குழு உறுப்பினர் சீனு கந்தகுமார் நன்றி கூறினார்.
- புதுவை உப்பளம் விளையாட்டு அரங்கில் அரசு அங்கீகாரம் பெற்ற யுனைடெட் புதுவை அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
- புதுவை மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் மாஸ்டர் வினோத்தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் விளையாட்டு அரங்கில் அரசு அங்கீகாரம் பெற்ற யுனைடெட் புதுவை அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
புதுவை மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் மாஸ்டர் வினோத்தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சங்க சேர்மனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.
விழாவில் மன்சூரிய குன்பூ இன்டர்நேஷனல் தலைவர் சத்யா, மல்யுத்த சங்க தலைவர் அன்பழகன், துணை தலைவர் திருமுருகன், டாக்டர் தாமஸ், மீனாம்பிகை உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடந்த மல்யுத்த போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- 75 கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் நடைபெறுகிறது.
- பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் இது நிறைவடைகிறது.
புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தைத் தலைமைச் செயலகம் அருகில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், 7500 கிலோ மீட்டர் தூர கடல் பரப்பைக் கொண்ட இந்திய கடலோரத்தை தூய்மையாக வைத்திருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார். வருங்கால சந்ததியினருக்குத் தூய்மையான கடற்கரையை நாம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விடுதலை அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 75 நாட்கள் கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் இயக்கம் நாடெங்கும் உள்ள 75 கடற்கரைகளில் மேற்கொள்ளப்படுவதாகவும், இப்பணிகள் பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி நிறைவடையும் என்றும், அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி பிரோமினேட் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கடலோரப் பகுதி தூய்மை விழிப்புணர்வு ஓட்டத்தைக் கொடியசைத்துத் அவர் தொடங்கி வைத்தார்.

கடலோரத் தூய்மையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். முன்னதாக புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள, ஈடன் கடற்கரைக்கு சென்று அங்கு கட்டமைப்பு வசதிகளை மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் பார்வையிட்டார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதி, மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ரிச்சா ஷர்மா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அறிவியல், தொழில்நுட்பம் & சுற்றுச்சூழல் செயலர் ஸ்மிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- கோட்டகுப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பேராசிரியை சாலைசெல்வம்.
- செல்வம் செல்போனை வாங்கி அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ.74 ஆயிரத்தை அபேஸ் செய்து தலைமறைவானார்.
புதுச்சேரி:
கோட்டகுப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பேராசிரியை சாலைசெல்வம். இவரது வீட்டிற்கு வாடகைக்கு வருவதாக திருச்சி ஸ்ரீரங்கம் அருண் நகரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ரவிசங்கர் (வயது 28). கூறினார்.
அட்வான்ஸ் தொகை செலுத்துவதாக கூறி பேராசிரியை சாலை செல்வம் செல்போனை வாங்கி அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ.74 ஆயிரத்தை அபேஸ் செய்து தலைமறைவானார்.
இதுகுறித்து பேராசிரியை சாலைசெல்வம் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி மன்னனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நெய்வேலியில் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி அவருக்கு "இன்ஸ்டா கிராம்"மூலம் பெண்ணின் புகைப்படங்களை வெளியிட்டதாக குறிஞ்சிப்பாடி போலீசார் ரவிசங்கரை கைது செய்தனர்.
இதனை அறிந்த கோட்டகுப்பம் போலீசார் பேராசிரியையிடம் பணம் மோசடி செய்த ரவிசங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டில் மனு அளித்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோட்டகுப்பம் போலீசார் ரவிசங்கரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






