என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில அளவிலான மல்யுத்த போட்டி-முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் தொடங்கி வைத்தார்
    X

    மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்ற காட்சி.

    மாநில அளவிலான மல்யுத்த போட்டி-முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் தொடங்கி வைத்தார்

    • புதுவை உப்பளம் விளையாட்டு அரங்கில் அரசு அங்கீகாரம் பெற்ற யுனைடெட் புதுவை அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • புதுவை மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் மாஸ்டர் வினோத்தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் விளையாட்டு அரங்கில் அரசு அங்கீகாரம் பெற்ற யுனைடெட் புதுவை அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    புதுவை மல்யுத்த சங்க நிறுவன செயலாளர் மாஸ்டர் வினோத்தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சங்க சேர்மனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.

    விழாவில் மன்சூரிய குன்பூ இன்டர்நேஷனல் தலைவர் சத்யா, மல்யுத்த சங்க தலைவர் அன்பழகன், துணை தலைவர் திருமுருகன், டாக்டர் தாமஸ், மீனாம்பிகை உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடந்த மல்யுத்த போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×