என் மலர்
நீங்கள் தேடியது "Jankumar MLA"
- துறைமுகத்தை தனியாருக்கு தாரைவார்க்காமல் அரசே நிர்வகிக்கலாம். இதனால் புதுவைக்கு பலமடங்கு நிதி கிடைக்கும்.
- அரசு மருத்து வமனைகளை தனியார் மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசியதாவது:-
துறைமுகத்தை தனியாருக்கு தாரைவார்க்காமல் அரசே நிர்வகிக்கலாம். இதனால் புதுவைக்கு பலமடங்கு நிதி கிடைக்கும். இதற்காக சிறந்த வல்லுனர்களை பணியமர்த்த வேண்டும். புதுவைக்கு வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அதிகாரிகள் கோப்புகளை தேக்கி வைக்க கூடாது.
அரசு மருத்து வமனைகளை தனியார் மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டம் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுகிறதா என்பதனை கண்காணிக்க வேண்டும்.
பிளாஸ்டிக்பாட்டில்களை மறு சுழற்சி செய்து ஆடைகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை புதுவையில் வந்து தொழில் தொடங்க அழைக்க வேண்டும். அரசுக்கு வருமானம் வரும்போது நாம் தனி மாநில அந்தஸ்து கேட்கலாம்.
இவ்வாறு ஜான்குமார் பேசினார்.
- புதுவை நகருக்கு ரூ.534 கோடியில் கிராமத்திலிருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 10 ஏரியில் தேக்கி அந்த நீரை சுத்திகரிப்பு செய்தால் 5 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசியதாவது:-
புதுவை நகருக்கு ரூ.534 கோடியில் கிராமத்திலிருந்து குடிநீர் கொண்டு வரப்படும் என சபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இயற்கைக்கு விரோதமான திட்டம். இத்திட்டத்துக்கு பதிலாக 10 ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்.
சங்கராபரணி, தென்பெண்ணையாறு மூலம் தண்ணீர் வருகிறது. அதை 10 ஏரியில் தேக்கி அந்த நீரை சுத்திகரிப்பு செய்தால் 5 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும். மழைநீரை இயற்கையான முறையில் சேகரிக்கலாம். 84 ஏரியில் 10 ஏரியைத்தான் குடிநீருக்கு பயன்படுத்த சொல்கிறோம்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி பயிற்சி பெறச்செய்ய வேண்டும். புதுவையில் உள்ள 609 குளங்களில் 25 சதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீட்க வேண்டும். இவ்வாறு செய்தால் புதுவையின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.






