என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள்  ஆர்ப்பாட்டம்
    X

    முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ, ஆதரவாளர்கள்  ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தனியார் விடுதியில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமரா, அருகில் உள்ள ஒரு வீட்டின் பகுதிகளை நோட்டமிடும் வகையில் உள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட காட்டாமணிக்குப்பம் பகுதியில் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் சமூக வலைதளத்தில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. குறித்து அவதூறு தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து, பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு எதிரான அவதூறு பரப்புவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கூறியதாவது:-

    தனியார் விடுதியில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமரா, அருகில் உள்ள ஒரு வீட்டின் பகுதிகளை நோட்டமிடும் வகையில் உள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், வீட்டின் உரிமையாளர்கள், தொகுதி எம்.எல்.ஏ.வான பிரகாஷ்குமாரிடம் முறையிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு போலீசாருடன் சென்ற பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. சி.சி.டி.வி. கேமராவை பார்வையிட்டார்.

    அப்போது அந்த கேமரா புகார்தாரரின் வீட்டை நோட்டமிடும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அதனை அகற்றினர். இதனால் எம்.எல்.ஏ. பற்றி தவறான அவதூறு பரப்புகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×