என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூட்டுறவு  சொத்துக்கள் ஏலம் -எதிர்கட்சித்தலைவர் சிவா வேதனை
    X

     சிவா. 

    கூட்டுறவு சொத்துக்கள் ஏலம் -எதிர்கட்சித்தலைவர் சிவா வேதனை

    • மக்கள் பணம் மக்களுக்குதான் என கூட்டுறவு நிறுவனங்களை கொண்டு வந்தோம்.
    • கழிவறை கட்டியதில் ரூ.4 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்து விசாரணை நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் எதிர்கட்சித்தலை––வர் சிவா பேசியதாவது:-

    மக்கள் பணம் மக்களுக்குதான் என கூட்டுறவு நிறுவனங்களை கொண்டு வந்தோம். ஆனால் அமுதசுரபியை ரூ.4 கோடிக்கு அடமானம் வைத்துள்ளோம். கான்பெட் நிறுவனம் மூழ்கியுள்ளது.

    வங்கிகள் நோட்டீஸ் தந்துள்ளனர். அரசு துறை இடங்களை அடமானம் வைப்பது தொழிலை வளர்க்கத்தான். ஆனால் இக்கட்டிடங்கள் ஏலம் போய்க்கொண்டிருக்கிறது. கழிவறை கட்டியதில் ரூ.4 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்து விசாரணை நடக்கிறது.

    எனவே

    இவற்றை தீவிரமாக கண்காணிக்கவேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பூஜ்ய நேரத்தில் முக்கிய பிரச்சினைகளுக்கு பதில் சொல்வதில்லை. முதல்-அமைச்சர் பதில்தராததால்தான் மற்றவர்களுக்கு அலட்சியம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து பேசிய சுயேச்சை உறுப்பினர் அங்காளன், புதுவைக்கு பால் பற்றாக்குறை காரணமாக வெளிமாநில அரசு நிறுவனங்களில் இருந்து பாண்லே மூலம் பால் வாங்கினோம். இப்போது தனியாரிடம் பால் வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு தனியாரிடம் பால் வாங்குவது ஊழலுக்கு வழி வகுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×