என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siddhar Sirdi Saibaba"

    • புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை இரும்பை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சித்தர் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா அனுஞ்யை, விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • கும்பாபிஷேக விழாவில் புதுவை மற்றும் இரும்பையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை இரும்பை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சித்தர் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா  அனுஞ்யை, விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

     புணர்பூஜை மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. தீபாரதனை, யாத்திர தானம் முடிந்து கலச புறப்பாடு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சித்தர் சீரடி சாய்பாபா கலசத்திற்கு சிவஸ்ரீ பால அரசு என்கிற சந்திரமவுலி குருக்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், சித்தர் சீரடி சாய்பாபா டிரஸ்ட் நிறுவனர் விவேகானந்தன், இரும்பை செந்தில் மற்றும் நிர்வாகிகள் அஜய், ஆனந்தராஜ் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவில் புதுவை மற்றும் இரும்பையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×